அரசியலிலிருந்து விலகிய முன்னாள் அமைச்சர்?
கட்சி அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி இருப்பதாக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தொகுத்த “IMF சிக்கலான தீர்வுகள்” (குறிக்கோளின் ஒப்பீட்டு ஆய்வு) புத்தகத்தின் வெளியீட்டு விழா கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்துரையாற்றிய அவர், “இந்த நாட்டு மக்கள் பல எதிர்ப்பார்ப்புகளுடன் இந்த அரசாங்கத்தை கொண்டுவந்தனர்.ஆனால் அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை.ஆதலால் […]
கடன்சுமை இளைஞன் உயிரிழப்பு; அளவெட்டியில் சம்பவம்!
யாழில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம்(18) இடம்பெற்றுள்ளது. அளவெட்டி பகுதியைச் சேர்ந்த ஆ.கஜிந்தன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள தந்தையின் வர்த்தக நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், அவர் இன்று காலை அந்த வர்த்தக ஸ்தாபனத்தின் களஞ்சியசாலையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் […]
வடக்கு கிழக்கைச் சேர்ந்த குழு; மாற்று அவயவங்களுக்காக சென்னை பயணம்
யாழ். பல்கலைக்கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கான மாற்று அவயவங்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கொண்ட குழு சென்னை சென்றுள்ளது. கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக்கழகம் முன்னெடுக்கும் இந்தத் திட்டமானது வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் […]
ஓய்வூதிய சட்டமூலத்துக்கு அங்கிகாரம்
பாராளுமன்ற ஓய்வூதிய (ரத்துசெய்யும்) சட்டமூலத்தை ஒப்புதலுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய அரசுப் பேரவையின் 1971 ஆம் ஆண்டு எண் 1 பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம் ரத்து செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று அமைச்சரவைப் பேச்சாளர், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (18) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார். இதுவரை எம்.பி.க்களுக்கு வழங்கப்பட்ட […]
தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு; தம்பதி பலி
தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது நேற்று மாலை மணியளவில் இடம்பெற்றுள்ளது. 9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுகளையுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 9 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று(18) மாலை 4.00 மணி முதல் இன்று (19) மாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை, கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மக்களை விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி […]
பத்து வயது சிறுவனை கடத்தி வன்புணர்வு ; இராணுவ வீரருக்கு 15 வருட சிறை
பத்து வயது சிறுவனை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இராணுவ வீரருக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்க , மொனராகலை மேல் நீதிமன்ற நீதவான் நலிந்த ஹேவாவசம் வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டார். தற்போது பணி இடைநீக்கம் செய்யப்பட்ட 33 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2021.04.11 அன்று கிரிக்கெட் விளையாடுவதற்காக வந்த சிறுவனை குறித்த இராணுவ வீரர் அருகிலுள்ள முன்பள்ளி […]
அஸ்வெசும திட்டத்தில் புதிய மாற்றம்
அஸ்வெசும திட்டத்தில் பொருத்தமான சலுகைகளை வழங்குவதற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுப்பதில் காணப்படும் சிக்கல்களை சரிசெய்ய புதிய திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 22 அளவுகோல்களின் கீழ் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதால், அந்த அளவுகோல்களைச் செயற்படுத்துவதற்கான வழிமுறையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்காக மட்டுமே பயனாளிகளைப் பதிவுசெய்யத் தற்பொழுது அனுமதிக்கப்பட்டாலும், இது போதாது எனவும் நாடு முழுவதுமுள்ள மக்கள் அனைவரும் தமது தகவல்களைக் கட்டமைப்பொன்றில் பதிவுசெய்வதே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு பதிவுசெய்த பின்னரே, மக்களுக்கு என்ன […]
கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரி தொடர்பில் பரபரப்பு தகவல்
கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் மொஹமட் நஜீப்புக்கு எவ்வித தகுதியும் இல்லை என நாடாளுமன்றத்தில் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்ததுள்ளார். ஒதுக்கீட்டு சட்ட மூலத்தின் பாதுகாப்பு அமைச்சு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், பொலிஸ் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி ஒருவரின் திருகோணமலை காணியை பார்த்துக் கொண்டதற்காகவே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவர் எந்த பொலிஸ் நிலையத்திலும் பொறுப்பதிகாரியாக இருக்கவில்லை. அத்தோடு திருகோணமலையில் பொறுப்பதிகாரியாக இருந்த சமயத்தில் எவ்வித தேடுதல் […]
விடுதலைப் புலிகளின் சில தலைவர்களும் போதைப்பொருள் விற்றனர்
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர் என்று சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று (18) நடைபெற்ற 2026ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.