சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையில் உள்ள இரண்டு தேவாலயங்களை இடிக்க வேண்டாமென மனு

திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர், திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையில் உள்ள இரண்டு தேவாலயங்களை இடிக்க கடலோரப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் எடுத்த முடிவை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். திருகோணமலையில் உள்ள சம்புத்தி ஜெயந்தி போதிராஜ விஹாரையின் தலைமை விஹாராதிபதியான கல்யாணவன்ச திஸ்ஸ தேரர் தாக்கல் செய்த இந்த மனுவில், கடலோரப் பாதுகாப்புத் துறையின் […]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; சாரா குறித்து கேள்வி

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடையதாகக் கூறப்படும் சாரா ஜாஸ்மினுக்கு எதிராக ஏன்? சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்படவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி எழுப்பினார். பொது பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான பட்ஜெட் குழு நிலை விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கேள்வியெழுப்பிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் ஒரு அரசியல் சதி என்றும் அவர் கூறினார்.

அகதிகளின் வருகையை வருகையைக் கட்டுப்படுத்த பிரித்தானியாவின் புதிய விதிகள்!

பிரித்தானியாவில் அகதிகளின் வருகையை வருகையைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய விதிமுறைகள் தொடர்பில் பிரித்தானியாவின் உள்துறைச் செயலாளர் ஷபானா மஹ்மூத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுடன் கூடிய அதிக குடும்பங்களை வெளியேற்றுதல் அவரின் பரிந்துரைகளில் ஒன்றாகும். இதற்கமைய, 3,000 பவுண்ட் வரையிலான ஊக்கத்தொகையை வழங்கி தன்னார்வமாகவோ அல்லது வலுக்கட்டாயமாகவோ குடும்பங்கள் வெளியேற்றப்படும். அகதி அந்தஸ்து பெற்றவர்கள், நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்கும் காத்திருப்பு காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகள் வரை அதிகரித்தல் மற்றுமொரு திட்டமாகும். அத்துடன், தஞ்சம் கோருபவர்களுக்கு நிதி ஆதரவு […]

யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்கள மயமாக்கல் தொடருகின்றது – யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்

யார் ஆட்சிக்கு வந்தாலும் பௌத்த சிங்கள மயமாக்கல் தொடருகின்றது என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் தெரிவிக்கையில், திருகோணமலையில் தமிழர் தாயகத்தில் கடற்கரைப்பிரதேசத்தில் சட்டத்திற்கு முரணாக புத்த பிக்குகளினால் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டிருக்கின்றது. அங்குள்ள தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பின் பின் சட்ட அனுமதியற்ற கட்டுமானம் என்று சொல்லி பொலிசாரினால் அப்புறப்படுத்தப்படுகின்றது. இதன்பிறகு நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தால் புத்தர் சிலையின் பாதுகாப்பு காரணமாக தான் அப்புறப்படுத்தப்பட்டது மீண்டும் நிறுவப்படும் என்ற பின் மீண்டும் […]

பல மில்லியன் ரூபாவை அதிர்ஷ்டமாக பெற்ற இலங்கை இளைஞன்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அந்நாட்டில் நடந்த லொத்தர் குலுக்கல்லில் ஒரு லட்சம் திர்ஹம்களை வென்றுள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த வெளிநாட்டு ஊழியர் ஒருவர், முதலில் 100 திர்ஹாம் வெற்றி பெற்றிருந்தார். தற்போது பெரிய தொகையான 100,000 திர்ஹாம் வெற்றி பெற்றுள்ளார். அடுத்தகட்டமாக 100 மில்லியன் திர்ஹாம் பரிசை நோக்கி தனது கனவுகளைத் துணிச்சலுடன் வளர்க்கும் நடவடிக்கையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். 29 வயதான யாசித பிரசன்ன என்ற இளைஞர், ஐக்கிய […]

காணாமற் போன சிறுமி மீட்பு!

மொன்ட்ரியலின் பியர்ஃபாண்ட்ஸ்-ராக்ஸ்போரோ (Pierrefonds-Roxboro) பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி ஒருவர் பத்திரமாகவும் நலமாகவும் மீட்கப்பட்டுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொன்ட்ரியல் நகரத்தின் காவல்துறையினர் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளனர். காணாமல் போய் தற்போது மீட்கப்பட்டுள்ள சிறுமி 15 வயது மதிக்கத்தக்கவர் எனக் கூறப்படுகின்றது. அந்தச் சிறுமி கடைசியாக அக்டோபர் மாதம் 31-ஆம் திகதி அந்தப் பகுதியில் காணப்பட்ட நிலையில், அவரைத் தேடும் பணியில் காவல்துறை மும்முரமாக ஈடுபட்டிருந்தது. தொடர்ச்சியான தேடலுக்குப் பிறகு, அவரை வெற்றிகரமாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் காவல்துறை தற்போது அறிவித்துள்ளது.

லாச்சீன் துப்பாக்கிச் சூடு; விசாரணைகள் ஆரம்பம்

மொன்றியல் நகரின் லாச்சீன் (Lachine) புறநகர்ப் பகுதியில், வெள்ளிக்கிழமை இரவு காவல்துறையினரின் தலையீட்டின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில், தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயது இளைஞன் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார் என மொன்றியல் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த அந்த 21 வயது இளைஞர், தியோடோர் தெருவில் உள்ள குடியிருப்பில் அத்துமீறி நுழைந்த சந்தேக நபர்களில் ஒருவர் ஆவார். வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணியளவில், […]

கனடாவில் குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் எச்சரிக்கை

கனடாவில் குழந்தைகளுக்கான பால் மா தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. ஒரு குழந்தை பால் மா தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக கனடிய உணவு ஆய்வு அமைப்பு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட பாட்டுலிசம் நோய் பரவலுடன் தொடர்புடையதாக கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பைஹார்ட் நிறுவனம் (ByHeart), அமெரிக்காவில் விற்பனையான அதன் அனைத்து தயாரிப்புகளையும் நவம்பர் 11ஆம் திகதி திரும்பப் பெற்றது. இதற்கு முன்னர், சில தயாரிப்புகள் குழந்தைகளில் பாட்டுலிசம் நோயை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட பின்னணியில் அவை […]

லிபரல் அரசாங்கம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான சிறுபான்மை லிபரல் அரசாங்கம், அதன் மத்திய பட்ஜெட் மீதான முக்கியமான நம்பிக்கை வாக்கெடுப்பில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 170 க்கு 168 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பட்ஜெட் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனால், அரசாங்கம் கவிழ்வதும், நாட்டில் உடனடியாகத் தேர்தல் வருவதும் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் மீதான வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றிக்கு, கிரீன் கட்சியின் ஆதரவும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த நான்கு முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் […]

புதிய மவுண்ட் டென்னிஸ் புகையிரத நிலையம் திறப்பு

ரொறன்ரோவின் மேற்குப் பகுதியில், புதிய மவுண்ட் டென்னிஸ் (Mount Dennis) புகையிரத நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை GO ட்ரான்சிட் மற்றும் யுனியன் பியர்சன் (UP) எக்ஸ்பிரஸ் சேவைகளுக்காக அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து இணைப்புகளை மேம்படுத்தும் நோக்குடனேயே இந்த புதிய புகையிரத நிலையம் செயற்படவுள்ளது. வெஸ்டன் வீதிக்கும் (Weston Road) பிளாக் க்ரீக் டிரைவுக்கும் (Black Creek Drive) இடையில், எக்ளிங்டன் அவென்யூ மேற்கில் அமைந்துள்ள இந்த நிலையம், ஒரு முக்கிய போக்குவரத்து மையமாக இயங்கவுள்ளது. கிச்சனர் […]