குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும்?
‘வங்கக்கடலில், இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், குமரிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மன்னார் வளைகுடா நோக்கி நகரக்கூடும்’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், 17 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, 14; நாலுமுக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் தலா 13; நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சியில் […]
சபரிமலையில் வரலாறு காணாத கூட்டம்
கேரள மாநிலம், சபரிமலையில் மண்டல சீசன் துவங்கிய முதல் இரு நாட்களிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசும், தேவசம் போர்டு நிர்வாகமும் தடுமாறுகிறது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நேற்று முன் தினம் காலை துவங்கியது. இதற்காக நவ.,16 மாலை நடை திறந்தது முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பேரும், ஸ்பாட் புக்கிங்கில் 20,000 பேரும் அனுமதிக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டிருந்தது. முன்பதிவு துவங்கிய சில […]
பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருப்பதோ, கண்துடைப்பு நாடகம் ஆடுவதோ கூடாது’ – ஜெய்சங்கர்
‘பயங்கரவாதத்தை கண்டும் காணாமல் இருப்பதோ, கண்துடைப்பு நாடகம் ஆடுவதோ கூடாது’ என நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உலக நாடுகளை வலியுறுத்தி உள்ளார். எஸ்.சி.ஓ., எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பி வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம், ரஷ்யாவில் நடக்கிறது. நேற்று நடந்த கூட்டத்தில் நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: பயங்கரவாதத்துக்கு எதிராக நம் மக்களைப் பாதுகாக்கும் உரிமை நமக்கு உண்டு. இந்தியா நிரூபித்திருப்பதுபோல, மற்ற நாடுகளும் அதை செய்து காட்ட வேண்டும். ஷாங்காய் […]
நடிகை நயன்தாராவின் பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு
கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான ஜயா படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கிறார். அதிக சம்பளம் பெறும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து அசத்தி வருகிறார். நடிகை, தயாரிப்பாளர் என கலக்கும் நயன்தாரா சொந்தமாக பல தொழில்களிலும் ஈடுபாடு காட்டி வருகிறார். இவர் […]
சர்வஜனபலய கட்சியின் உறுப்பினர் இடைநிறுத்தம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் முடிவடைந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, சீதாவக்க பிரதேச சபையின் தவிசாளரை நியமிப்பதற்கான தேர்தல், செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்றது. இதன்போது, கட்சியின் முடிவுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியால் பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளரை தலைவராக நியமிப்பதை ஆதரித்த சர்வஜனபலய கட்சியின் உறுப்பினர் சந்தன பிரேமநாத் முதுங்கொடுவவின் கட்சி உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி முடிவு செய்துள்ளது. சர்வஜனபலய கட்சியின் உறுப்பினர் சந்தன பிரேமநாத் தேர்தலின் போது கட்சியின் முடிவுக்கு எதிராக செயற்பட்டதாகவும், தேசிய மக்கள் சக்தியால் […]
திருமதி மங்கையற்கரசி கந்தையா
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், பளை, ஜேர்மனி Berlin, Warendorf ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது யாழ். கொக்குவிலை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட மங்கையற்கரசி கந்தையா அவர்கள் 19-11-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,விஷ்ணுகாந்தன்(ஆசிரியர்), குகதர்சினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் காலஞ்சென்றவர்களான கிருஷ்ணானந்தன், யோகானந்தன், விவேகானந்தன் மற்றும் சச்சிதானந்தன்(கனடா), காலஞ்சென்ற ஜெயானந்தன் மற்றும் முருகானந்தன்(ஓய்வு […]
சேறு நிறைந்த மண் மேடு சரிந்தது
கொழும்பு-பதுளை பிரதான சாலையில், கலுபஹானவின் 171 கி.மீ தூரத்திற்கு அருகில் சேறு நிறைந்த மண் மேடு சரிந்து விழுந்ததாக ஹல்துமுல்ல பொலிஸார். தெரிவித்தனர். இதனால் போக்குவரத்துக்கு சிறிது இடையூறு ஏற்பட்டது. கனமழையின் போது சேறு நிறைந்த மண் மேடுகள் சாலையின் குறுக்கே பாய்வதால், வாகனங்கள் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர். சாலைக்கு மேலே உள்ள நீர்ப்பாசன கால்வாய் நிரம்பி வழிவதால் இந்த ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சரியான கவனம் இல்லாமல் ஆபத்தான […]
கடந்த கால ஆட்சியின் போது குற்றமிழைத்த பாதுகாப்பு படைக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை
கடந்த கால ஆட்சியின் போது குற்றச்செயல்களில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினருக்கு எதிராக விசாரணைகள் மேற்கொண்டு தண்டனை வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அந்த வகையில் தாஜுதீனின் மரணம் திட்டமிட்ட கொலை. அது இயற்கையான மரணம் அல்லவென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று(18) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி இதனைத் தெரித்துள்ளார். தாஜுதீனின் கொலை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் கடற்படையின் சில அதிகாரிகள் விசாரிக்கப்பட வேண்டும். கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் […]
கடுவலை தொழிற்சாலையில் தீவிபத்து!
கடுவலை, ரனால பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிற்சாலையின் களஞ்சியசாலையில் தீப்பரவியுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம்(19) இடம்பெற்றுள்ளது. இந்த தீப்பரவலில் தொழிற்சாலைக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு மற்றும் கோட்டை மாநகர சபைகளுக்கு சொந்தமான தீயணைப்பு படையினர் இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், சேதம் தொடர்பான மதிப்பாய்வுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்; இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் உத்தரவு
மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற ஒரு வழக்குத் தொடர்பில் நீதிமன்றத்துகு வெளியில் பகிரங்கமாகத் தெரிவித்த சில கருத்துக்கள் மூலம் நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தை தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனும், ஜெயபாலன் கஜபாகு என்பவரும் இழைத்துள்ளனர் எனத் தெரிவித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் […]