வறுமை ஒழிப்பு தேசிய திட்டம்; அரச அதிகாரிகளை விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சி!
‘ சமூக சக்தி’ வறுமை ஒழிப்பு தேசிய திட்டத்தை செயல்படுத்தும் அதே வேளை அதனுடன் இணைந்ததாக, மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் உள்ள அரச அதிகாரிகளை விழிப்புணர்வூட்டுவதற்கான பயிற்சித் திட்டத் தொடரின் மற்றொரு கட்டம் நேற்று (18) மற்றும் இன்று (19) கிளிநொச்சியில் நடைபெறுகிறது. வட மாகாணத்தில் பணியாற்றும் வட மாகாண சபைஅதிகாரிகள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த அரச அதிகாரிகள் மற்றும் அந்த மாவட்டங்களின் பிரதேச செயலகங்களைச் சேர்ந்த சுமார் 45 […]
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது; ஞானசார தேரரின் இனத்துவேசச் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது!
எமது தமிழர் தாயகத்தினை ஒரு போதும் விட்டுக்கொடுக்க முடியாது எனவும் பூர்வீகமாக தமிழர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அடாவடித் தனங்களில் ஈடுபடுவதை வன்மையாக கண்டிப்பதுடன் இச் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு இனியும் இருக்க மாட்டோம். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இவ்வாறான இனத் துவேஷ செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று புதன்கிழமை (19) திருகோணமலைக்கு வருகை தந்து […]
இலங்கை பாராளுமன்ற தூதுக்குழுவின் பங்களிப்புக்கு சர்வதேச பாராளுமன்ற ஒன்றியம் பாராட்டு
இலங்கை பாராளுமன்றத்தின் தூதுக்குழு கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி ஜெனிவாவில் நடந்த 151வது சர்வதேச பாராளுமன்ற ஒன்றியத்தின் (IPU) மாநாட்டில் நடைபெற்ற பாலின சமத்துவம் குறித்த கூட்டத்தில் பங்கேற்றது. IPUஇன் பாலின கூட்டாண்மைத் திட்டத்தின் (Gender Partnership Programme) கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில், பாராளுமன்றங்களுக்கு இடையே பாலின சமத்துவத்தை முன்னேற்றுவதில் உள்ள அனுபவங்கள், சிறந்த நடைமுறைகள் மற்றும் சவால்களைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் பெனின், பூட்டான், புர்கினா பாசோ, சாட், காம்பியா, நமீபியா, சியரா லியோன், […]
மட்டக்களப்பில் சர்வதேச நீரிழிவு தின பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும்
சர்வதேச நீரிழிவு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் பேரணியும் விழிப்புணர்வு நிகழ்வும் இன்று (19) நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும் மட்டக்களப்பு லயன் கழகத்தின் அனுசரணையுடனும் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமாகி மட்டக்களப்பு காந்தி பூங்கா வரை ஊர்வலம் சென்றது. அவ்வேளை நீரிழிவு நோயின் தாக்கம், அதற்கான சிகிச்சை முறைகள் தொடர்பான துண்டுப்பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது. இந்த ஊர்வலம் காந்தி பூங்காவைச் […]
இதுவரையான காலப்பகுதிக்குள் 105க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்!
இலங்கையில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 105 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களின் போது 57 பேர் உயிரிழந்துள்ளதுடன் 56 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதிகளவான துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பாதாள உலக கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாதம்பையில் மின்சார சபை ஊழியர்களாக நடித்து வீட்டில் கொள்ளை
மின்சார சபை ஊழியர்கள் என்று கூறி வீட்டிற்குள் நுழைந்து, வீட்டில் இருந்த ஒரு பெண்ணின் கை, கால்களைக் கட்டி, ரூ.620,000 மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்ற இருவர் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாதம்பை, பொதுவில பகுதியைச் சேர்ந்த ரத்நாயக்க முதியன்சேலாகே சோமாவதி (வயது 72) என்ற பெண் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது. சம்பவம் நடந்த நேரத்தில் தனது கணவரும் மகளும் வீட்டில் இல்லை என்றும், மின்சார சபை […]
வடமராட்சி கரணவாயில் இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை
கரணவாய் பகுதியில் பகுதியில் நேற்றிரவு 12:00 மணியளவில் ராஜகுலேந்திரன் பிரிந்தன் வயது 29 என்ற இளம் குடும்பஸ்தர் இனம் தெரியதாக நபர்களினால் வெட்டி கொலை செய்யப்பட்டநிலையில் சம்பவிடத்தில் இருந்து இரண்டு சந்தேக நபர்கள் செல்லும் காட்சி சி சி ரி காமரவில் அப்பகுதியில் பதிவாகியுள்ளது. யாழ் நெல்லியடி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு 12:00 மணியளவில் தொலை பேசி அழைப்பு வந்ததுக்கு அமைவாக குறித்த இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து […]
வீரர்களுடன் உரையாடவுள்ள முகாமையாளர்
தனது குழாமில் தெரிவு செய்யப்படாத ஒவ்வொரு வீரருடனும் தனது தெரிவுகள் குறித்து விளக்கமளிப்பதற்காக உரையாடவுள்ள இங்கிலாந்து தேசிய கால்பந்தாட்ட அணியின் முகாமையாளர் தோமஸ் துஷெல், 2026 உலகக் கிண்ணத் தொடருக்கு தெரிவாவதற்கு என்ன செய்ய வேண்டுமென்பதை அட்டவணப்ப்படுத்தவுள்ளார். சேர்பியா, அல்பானியாவுக்கெதிரான தகுதிகாண் போட்டிகளுக்கு மத்தியகளவீரர் ஜக் கிரெலிஷ், பின்களவீரர் ட்ரென்ட் அலெக்ஸான்டர் அர்னோல்ட் ஆகியோர் தெரிவாகியிருக்கவில்லை.
2026 பீபாஉலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற நாடுகள்
உலகக்கிண்ண உதைபந்தாட்ட தகுதிச் சுற்றுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான தகுதியை 34 நாடுகள் பதிவு செய்துள்ளன. அடுத்த ஆண்டு அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் 2026 FIFA உலகக் கிண்ணப் போட்டியில் 48 அணிகள் இடம்பெறும். தகுதிச் சுற்றுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான நான்காண்டு போட்டிக்கான டிக்கெட்டை 34 நாடுகள் ஏற்கனவே பதிவு செய்துள்ளன. போட்டியை நடத்தும் நாடுகள் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ. […]
பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் விமானப்படை தாக்குதல்
தெற்கு லெபனானில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஒரு வருடங்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதில் கோபம் அடைந்த இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. பின்னர் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாடுகளுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. […]