காம்ப் நெளக்கு திரும்பவுள்ள பார்சிலோனா
நீண்ட காலமாக காக்க வைக்கப்பட்ட ஸ்பொட்டிபை காம்ஃப் நெளவுக்கு ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா திரும்பவுள்ளது. அத்லெட்டிக் பில்பாவோவுக்கெதிரான லா லிகா போட்டியானது காம்ஃப் நெளவில் சனிக்கிழமை (22) விளையாடப்படுமென பார்சிலோனா உறுதிப்படுத்தியுள்ளது. புனரமைப்பு பணி தொடருகையில் உள்ளூர் சபையிடமிருந்து 45,401 பேருடன் போட்டிகளை நடத்த திங்கட்கிழமை (17) பார்சிலோனா அனுமதியைப் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டு முதல் புனரமைப்புக்காக காம்ஃப் நெள மூடப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டு முடிவில் காம்ஃப் நெளவுக்கு பார்சிலோனா திரும்புவதே திட்டமாக […]
சட்டம் தண்டிக்காவிட்டாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு கடவுளின் சாபம் கிடைக்கும் – ரோஹித அபேகுணவர்த்தன
உயிர்த்த ஞாயிறு தாக்குதளுடன் தொடர்புபட்டவர்களுக்கு சட்டம் நிலைநாட்டப்படாவிட்டால் கடவுளின் சாபம் கிடைக்கும்.எனவே மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியை வெளிப்படுத்துங்கள் என புதிய ஜனநாயக முன்னணி எம்.பி. ரோஹித அபேகுணவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடித்து, சட்டத்துக்கு முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுப்பதாக அரசாங்கம் தேர்தல் […]
இலங்கை தமிழரசு கட்சி எம்.பி.க்கள் – ஜனாதிபதி சந்திப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். ஜனாதிபதி செயலகத்திலேயே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழரசுக் கட்சி எம்.பிக்களின் கோரிக்கையின் பேரிலேயே இச் சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல்கள், திருகோணமலை சம்பவம், வடக்கு கிழக்கில் எழுந்துள்ள பிற நெருக்கடிகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை இக் கலந்துரையாடலின்போது விவாதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகளுக்கும்; இடையில் இன்று […]
குறைநிரப்பு மதிப்பீடு மூலம் ஓய்வூதியர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் – சஜித் பிரேமதாச
ஓய்வூதியதாரர்களின் பிரச்சினைகள் நொடர்பில் பாராளுமன்றத்தில் பேசிய போதிலும், அரசாங்கத்திடமிருந்து எந்த சாதகமான எந்த செய்தியும் கிடைக்கவில்லை. 2020-2024 இடைப்பட்ட காலப்பிரிவில் பாதிக்கப்பட்ட 154,000 பேருக்காக வேண்டியும் முடிந்தவரை குரல் கொடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்றைய (19) நாளுக்கான பாராளுமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்து திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில், பொல்துவ சந்தியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஓய்வூதியோர்களின் பிரச்சினைகளை ஆராயும் நோக்கில் குறித்த ஆர்ப்பாட்ட இடத்திற்குச் சென்று அவர்கள் மத்தியில் உரையாற்றும் […]
திருமதி இராசகுலநாயகி சிவபாலசிங்கம் (இராசம்)
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட இராசகுலநாயகி சிவபாலசிங்கம் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், இராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும் காலஞ்சென்ற கிட்டினர், தங்கமுத்து தம்பதிகளின் மருமகளும்,Dr.சிவபாலசிங்கம்(இளைப்பாறிய மாகாணம் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,அன்னார், தெய்வகுலநாயகி(கனடா), சுகுமார்(லண்டன்), வசந்தராணி(லண்டன்), மஞ்சுளா(அச்சுவேலி), உதயகுமார்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr.அபிரா(அவுஸ்திரேலியா), துவாரகன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கமலேஸ்வரன்(அவுஸ்திரேலியா), உமாசுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும் மிஷிக்கா யஸ்வின், ஆதவி ஆகியோரின் அன்புப் […]
‘ ஏ பியூட்டிஃபுல் பிரேக் அப் ‘ டீசர் வெளியீடு
லண்டனைச்சார்ந்த அயலக தமிழர் – புதுமுக நடிகர் தக்ஷ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஏ பியூட்டிஃபுல் பிரேக் அப் ‘ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் அஜித் வாசன் உக்கினா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘ ஏ பியூட்டிஃபுல் பிரேக் அப் ‘எனும் திரைப்படத்தில் தக்ஷ், ‘அகத்தியா ‘ படப் புகழ் நடிகை மாடில்டா பாஜர் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கே. ஆர். குணசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். […]
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ பொங்கலுக்கு வெளியீடு
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘பராசக்தி’ எனும் திரைப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வரும் பொங்கல் திருநாளன்று திட்டமிட்டபடி படமாளிகையில் உலகம் முழுவதும் வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தி உள்ளனர். தேசிய விருது பெற்ற படைப்பாளியான இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் […]
‘கொம்பு சீவி’ படத்திற்காக கரம் கோர்த்த இசைஞானி – யுவன் சங்கர் ராஜா கூட்டணி
‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் – ‘ ரைசிங் ஸ்டார் ‘ சண்முக பாண்டியன் விஜயகாந்த் ஆகியோர் இணைந்து மிரட்டும் ‘கொம்பு சீவி’ படத்திற்காக யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் முதன்முறையாக இணைந்து இந்தப் பாடலை பாடியுள்ளதாக படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இயக்குநர் பொன் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கொம்பு சீவி’ எனும் திரைப்படத்தில் […]
2026- ல் பாடசாலை மாணவர்களுக்கு அறிமுகமாகும் புதிய திட்டம்
அடுத்த வருடம் முதல் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாலியல் கல்வி வழங்கும் திட்டம் செயற்படுத்தப்படும் என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார். இந்த முயற்சி குறித்து கலந்துரையாட உப குழுவொன்று களுத்துறை மாவட்டச் செயலாளரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அண்மையில் கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆரம்ப மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்குப் பாலியல் கல்வித் திட்டங்களை தெளிவுபடுத்துவது குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது, சிறுவர் கர்ப்பம் […]
நாடாளுமன்றத்திற்கு நடுவே புத்தர் சிலையை நீக்கிவிட்டு பிள்ளையாரை வைத்தால் அனுமதிப்பீர்களா?
நாடாளுமன்றத்திற்கு நடுவே புத்தர் சிலையை நீக்கிவிட்டு பிள்ளையாரை வைத்தால் அனுமதிப்பீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் கேள்வி எமுப்பும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் இருப்பவர்கள் குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை குறிப்பிட்டு அவர் இனவாதி என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாங்கள் இனவாதிகள் அல்ல. இந்த பேரினவாத அரசாங்கம் என்ன செய்தாலும் மாறாது. ஆனால் நான் அரசியலுக்கு வந்தபோது இவை அனைத்தையும் நிறுத்த வேண்டும் […]