இஸ்ரேலிய குழு நாட்டுக்கு வருகை

இஸ்ரேலிய சுற்றுலா பிரதிநிதிகள் 33 பேர் கொண்ட குழு ஒன்று, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக இலங்கைக்கு வந்து சேர்ந்தது. அவர்கள் 10 நாட்கள் நாட்டில் தங்கி இலங்கையின் அனைத்து மாகாணங்களுக்கும் பயணம் செய்ய உள்ளனர். அவர்கள் திங்கட்கிழமை (17) அன்று மாலை 05.45 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை FZ-579 என்ற ஃப்ளை துபாய் விமானத்தில் வந்தடைந்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பிரதிநிதிகளால் தூதுக்குழுவிற்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உணவு மற்றும் பானங்களில் சிறந்து விளங்கும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

2026 ஆம் ஆண்டுக்கான அபெக்ஸ் விருதுகளில், மத்திய மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் உணவு மற்றும் பானங்களில் (Best In Food and Beverage) சிறந்து விளங்கும் நிறுவனமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விருது பெற்றுள்ளது. இது விமானப்போக்குவரத்துத்துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் ஒரு சர்வதேச விருது ஆகும். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பல்வேறு சர்வதேச மற்றும் உள்ளூர் உணவு பட்டியலின் உயர் தரத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது. 2026 அபெக்ஸ் விருதுகளில் தனது விமான நிறுவனம் நான்கு நட்சத்திர […]

‘INS SUKANYA’ – இந்திய கடற்படையின் போர் கப்பல் உத்தியோகபூர்வ விஜயம்

இந்திய கடற்படையின் போர் கப்பலான ‘INS SUKANYA’ 2025 நவம்பர் 18 ஆம் திகதி காலை உத்தியோகபூர்வ விஜயத்திற்காக இலங்கைத் தீவை வந்தடைந்ததுடன், கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையினர் அக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர். தீவை வந்தடைந்துள்ள ‘INS SUKANYA’ என்ற போர் கப்பல் 101 மீட்டர் நீளம் கொண்டதுடன், இந்த போர் கப்பலின் கட்டளை அதிகாரியாக COMMANDER, SANTOSH KUMAR VERMA கடமையாற்றுகின்றார். இந்தக் போர் கப்பல் தீவில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாடுகளின் […]

மூத்த இராணுவ உயர் அதிகாரி மனைவி திடீர் மரணம்?

பொரளை பகுதியில் உள்ள ஒரு மூத்த இராணுவ அதிகாரிக்கு சொந்தமான குடியிருப்பில் அவரது மனைவி உயிரிழந்துள்ளார். குறித்த இராணுவ அதிகாரியின் 47 வயதுடைய இரண்டாவது மனைவியே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், கொழும்பு மருத்துவ பரிசோதகர் அளித்த மருத்துவ அறிக்கையில், அவரது மரணம், கழுத்தை நெரித்தமையால் சம்பவித்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இறந்த பெண்ணின் கணவரான இராணுவ உயர் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் […]

புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து ஜனாதிபதியுடன் ஆராய்வு

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி […]

பங்களாதேஷ் அரசாங்கம் இன்டர்போல் உதவியை நாடியது?

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்தியாவில் இருந்து பங்களாதேஷிற்கு அழைத்து வர இன்டர்போல் உதவியை அந்நாட்டு அரசாங்கம் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜூலை – ஓகஸ்டில் வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்தின் போது, ஷேக் ஹசீனா மீது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறிய அவர் இந்தியாவில் தஞ்சமடைந்த நிலையில், அவர் மீதான வழக்கு அவர் இல்லாத நேரத்தில் (in absentia) நடத்தப்பட்டது. இந்தநிலையில், மாணவர்கள் போராட்டத்தில் […]

2026 உலகக் கிண்ணத் தொடர் ஐரோப்பிய தகுதிகாண் போட்டி; ஸ்கொட்லாந்திடம் தோற்ற டென்மார்க்

சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், ஸ்கொட்லாந்தில் இன்றுபுதன்கிழமை (19) நடைபெற்ற அந்நாட்டுடனான போட்டியில் 2-4 என்ற கோல் கணக்கில் டென்மார்க் தோற்ற நிலையில் அந்நாடு உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது. டென்மார்க் சார்பாக றஸ்முஸ் ஹொஜ்லுன்ட், பற்றிக் டொர்கு ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். ஸ்கொட்லாந்து சார்பாக ஸ்கொட் மக்டொமினி, லோரன்ஸ் ஷங்லன்ட், கெய்ரன் டைரனி, கென்னி மக்லீன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இதேவேளை […]

கனகபுரம் பகுதியில் ஏழு கடைகளில் திருட்டு

கிளிநொச்சி நகரின் கனகபுரம் பகுதியில் ஏழு கடைகள் திருடப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.11.2025) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, கடைகளிலிருந்த ஏராளமான பெறுமதிமிக்க பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் ஏழு கடைகளில் திருட்டு | Robbery At Seven Shops In Kilinochchi இந்நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சர்ச்சைகளைத் தோற்றுவித்த திருமலை விஹாரை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருகோணமலை கோட்டை சாலையில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விஹாரைக்குச் சொந்தமான தற்காலிக கட்டிடத்தின் தற்போதைய கட்டுமானங்களை அப்படியே விட்டுவிடவும், புதிய கட்டுமானங்கள் அல்லது மாற்றங்களைச் செய்யக்கூடாது என்றும் திருகோணமலை பிரதான நீதவான் எம்.என்.எம். சம்சுதீன் விஹாராதிகாரி தேரருக்கு புதன்கிழமை (19) உத்தரவிட்டார். திருகோணமலை காவல்துறை கண்காணிப்பாளர் ஜே.எல். அஜித் குமார, துறைமுக காவல்துறையின் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் தலைமை ஆய்வாளர் கே.டபிள்யூ.ஜி.எஸ்.கே. சமரசிங்க ஆகியோர் சமர்ப்பித்த பீ அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவைப் […]

முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டி; சிம்பாப்வேயை வென்ற பாகிஸ்தான்

இலங்கை பங்கேற்கும் முத்தரப்பு இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில், ராவல் பின்டியில் செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற சிம்பாப்வேயுடனான போட்டியில் பாகிஸ்தான் வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: பாகிஸ்தான் சிம்பாப்வே: 147/8 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: பிரயன் பென்னிட் 49 (36), சிகண்டர் ராசா ஆ.இ 34 (24), தடிவனஷே மருமனி 30 (22) ஓட்டங்கள். பந்துவீச்சு: மொஹமட் நவாஸ் 2/22 [4], சல்மான் மிர்ஸா 1/21 [3], அப்ரார் அஹ்மட் 1/28 […]