வவுனியா மாநகர சபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிப்பு
வவுனியா மாநகரசபைக்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாநகர சபையின் முதல்வர், பிரதி முதல்வர் ஆகியோர் அந்தப் பதவிகளை வகிப்பதற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்து கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த மாதம் 21ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது. குறித்த வழக்கு இன்று (19.11.2025) மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் வழக்கு பிரதி மேயருக்கு […]
கோர விபத்தில்; இருவர் பலி
அரலகங்வில – தெஹியத்தகண்டிய பிரதான வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய இரு நபர்களும் உயிரிழந்துள்ளனர். வேஹேரகலயில் இருந்து அரலங்வில நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியது. இதனையடுத்து, விபத்தில் காயமடைந்த இரு மோட்டார் சைக்கிள்களின் செலுத்துநர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணித்த பெண் ஒருவர் உட்பட 3 பேர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், படுகாயமடைந்த மோட்டார் […]
வடமராட்சி கிழக்கில் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!
யாழ். வடமராட்சி கிழக்கு மாமுனையில் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு(18) 10 மணியளவில் விசேட அதிரடிப் படையினர் மாமுனை கிராமத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 7.5 கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சிறப்பு அதிரடி படையினர் மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சந்தேக நபரை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம்(19) முன்னிலைப்படுத்திய போது அவரை […]
பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பெண் வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் நபரினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நியூசிலாந்து பெண், இலங்கை தொடர்பான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சைச் சேர்ந்த மோலி என்ற பெண்ணே இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அனுபவங்களைப் மோலி பகிர்ந்துள்ளார். இலங்கையில் ஒரு மாதம் பயணம் செய்த போது பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், இந்த அசம்பாவிதம் மட்டுமே தன்னை பாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு நபரின் தவறான செயற்பாட்டை வைத்து இலங்கை தொடர்பான தப்பான அபிப்பிராயத்தை ஏற்படுத்த வேண்டும் என வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் அவர் […]
அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் பேரணி – எமக்கு போட்டியாக ஜனாதிபதி மக்கள் கூட்டம்
அரசாங்கத்துக்கு எதிராக நாங்கள் 21 ஆம் திகதி நுகேகொடையில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிலையில், எமக்கு போட்டியாக ஜனாதிபதி 20 ஆம் திகதி தங்காலையில் மக்கள் கூட்டத்தை நடத்துகிறார். ஜனாதிபதியின் கூட்டத்துக்கு ஆட்களை திரட்டும் பொறுப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பி.யான டி.வி.சானக குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) அன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொதுநிர்வாக, மாகாண சபைகள் […]
புத்தர்சிலை விவகாரம்; தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீது தவறில்லை – திருகோணமலை தேரர் விளக்கம்!
திருகோணமலை கடற்கரை புத்தர்சிலை விவகாரத்துக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கல்யாண வன்ஸ திஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். குறித்த விவகாரம் தொடர்பில் இன்று (19.11.2025) நடைபெற்ற விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “தமிழ் மக்கள் இந்த விடயத்தில் எவ்வித எதிர்ப்பையும் காட்டவில்லை என்பதை மகிழ்ச்சியுடனும், நேர்மையுடனும் கூறுகின்றோம். இங்குள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் என்னுடன் தனிப்பட்ட முறையில் மிகவும் நட்புறவுடனேயே […]
போலி லேபிளின் கீழ் நீர் பம்பு விற்பனை; வழக்கு தீர்க்கப்பட்டது
நன்கு அறியப்பட்ட வர்த்தக முத்திரையைப் பின்பற்றி, போலி லேபிளின் கீழ் நீர் பம்புகளை தயாரித்து, விநியோகித்து, விற்பனை செய்ததாகக் கூறப்படும் இரத்தினபுரியைச் சேர்ந்த வர்த்தக நிறுவனத்திற்கு எதிராக அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தீர்த்து வைக்க கொழும்பு வணிக மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம். இர்சாடின் உத்தரவிட்டார். “MAC” வர்த்தக முத்திரையைப் போன்ற போலி லேபிளைப் பயன்படுத்த மாட்டோம் என்று இரத்தினபுரியைச் சேர்ந்த பிரதிவாதி நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் […]
2025 இலங்கை மின்சார வாரிய இலாபம்
இலங்கை மின்சார வாரியம் (CEB) அதன் நிதி செயல்திறனில் குறிப்பிடத்தக்க சரிவை பதிவு விபரத்தை வௌயிட்டுள்ளது. அதன் சமீப நிதி அறிக்கைகளின் படி, 2025 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டிற்கான இலாபம் ரூ. 3.58 பில்லியன் கடுமையாகக் குறைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட தொகை ரூ. 24.58 பில்லியன் இலாபத்துடன் ஒப்பிடும்போது 85% சரிவைக் குறிக்கிறது. இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் ஈட்டிய தொகை ரூ. 5.31 […]
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி
நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இலங்கைக்கு, ஆசிய வளர்ச்சி வங்கி, 2,657 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதில் இருந்து மீள்வதற்காக, இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகளும், ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்டவையும் கடனுதவி வழங்கி வருகின்றன. அந்த வகையில், இலங்கையின் நிதித் துறையை வலுப்படுத்தவும், சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், சுற்றுலாத்துறை […]
பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் சட்டத்தரணியை தாக்கிய சம்பவம் – சமாதான தீர்வுக்கு விருப்பமில்லை
கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் சட்டத்தரணியை தாக்கிய சம்பவ வழக்கில் சமாதான தீர்வுக்கு விருப்பமில்லை என சிரேஷ்ட வழக்கறிஞர் குணரத்ன வன்னி நாயக்க நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார். அவரது சட்டக் குழு நேற்று (17.11.2025) நீதிமன்றத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அதற்கு பதிலாக முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. ஆறு கூட்டு அறிக்கைகளுடன் மேலும் அறிக்கைகளை சமர்ப்பித்த கல்கிசை பொலிஸார், நவம்பர் 8ஆம் திகதி இரு தரப்பினரும் மத்தியஸ்த குழுவுக்கு அழைக்கப்பட்டதாகவும், ஆனால் வழக்கறிஞர் […]