சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்
அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாக காண்கிறது. பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நேற்றிரவு அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை பொலிஸாரினால் அகற்றப்பட்ட போது, […]
புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். மேலும், அரசு உடனடியாகத் தலையிட்டு இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சு நடத்தி பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்து வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று (17) திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், […]