தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியா, ஈரானை நம்பியுள்ளது ஆப்கான்!
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. எல்லைப் பகுதிகள் மூடப்பட்டதால், தன் வர்த்தக நடவடிக்கைகளுக்காக, இந்தியா மற்றும் ஈரானை நம்பியுள்ளது ஆப்கானிஸ்தான். தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான், நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் வழியாக சர்வதேச சந்தைகளை அணுகி வருகிறது. இந்நிலையில், இரு நாடுகளிடையேயான உறவு தற்போது மோசமான கட்டத்தில் உள்ளது. இதையடுத்து, இரு நாட்டுக்கு இடையேயான எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, தன் வர்த்தக நடவடிக்கைகளை, இந்தியா மற்றும் […]
FACETS Sri Lanka-உத்தியோகபூர்வ நிலைச்சொத்து அனுசரணையாளராக ஜோன் கீல்ஸ் !
கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2025 இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் நாட்டில் இடம்பெறும் முதன்மையான சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி நிகழ்வான FACETS Sri Lanka 2026 க்கு உத்தியோகபூர்வ நிலைச்சொத்து (Real Estate) அனுசரணையாளராக தான் கைகோர்த்துள்ளமை குறித்து, இலங்கையின் மிகவும் நம்பிக்கைக்குரிய, மிகப் பாரிய மற்றும் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிலைச்சொத்து நிர்மாணிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ஜோன் கீல்ஸ் புரொப்பட்டீஸ் (John Keells Properties JKP) அறிவித்துள்ளது. […]
இந்தியா – பிரான்ஸ் இடையே ‘கருடா 25’ வான் பாதுகாப்பு
இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் விமானப்படைகள் இணைந்து மேற்கொள்ளும் ‘கருடா’ என்ற வான் பாதுகாப்பு பயிற்சி துவங்கியது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையே கருடா என்ற வான் போர் பயிற்சி கடந்த 2003ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த இருதரப்பு விமானப் பயிற்சியின் போது, போர் விமானங்கள், மற்றும் பயிற்சி முறைகளை சோதித்து பார்க்கின்றனர். இந்தப் பயிற்சிக்காக இந்தியாவின் முக்கிய போர் விமானமான சுகோய் 30எம்கேஐ விமானங்களுடன் இந்திய விமானப் படையினர் பிரான்ஸ் […]
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நவம்பர் 30ல் கார்த்திகை தீபம் ஏற்ற ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. மதுரை, திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தின் மேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் சார்பில் ஆண்டு தோறும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது.மலை உச்சியில் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது காலங்காலமாக நடந்து வந்தது. இரண்டாம் உலகப்போரின் போது, பாதுகாப்பு காரணமாக, ஆங்கிலேய அரசு அதை தடை செய்தது. அதனால், கோவில் முன்புறம் உள்ள துாணில் […]
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி கட்டத்தில்…
இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்து உள்ளார். வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இந்தியா – அமெரிக்கா இடையே 5 கட்டங்களாக பேச்சு நடந்த நிலையில், இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதையடுத்து, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பு செயலால் அதிருப்தியடைந்த இந்தியா, ஏற்றுமதிக்கான திட்டத்தை மாற்றியமைக்க முடிவு செய்தது. இது […]
ஆந்திரப் பிரதேசத்தில் நக்சல் அமைப்பின் தலைவர் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை
ஆந்திரப் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவர் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் நக்சலைட்டுகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள், பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இதில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி […]
ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் நோர்வேயிடம் தோற்ற இத்தாலி!
சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளன 2026 உலகக் கிண்ணத் தொடருக்கான ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில், நேற்று திங்கட்கிழமை (17) நடைபெற்ற நோர்வேயுடனான போட்டியில் 1-4 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்றது. நோர்வே சார்பாக எர்லிங் ஹலான்ட் இரண்டு கோல்களையும், அந்தோனியோ நுஸா, ஜோர்ஜன் ஸ்ரான்ட் லர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலையும் பெற்றனர். இத்தாலி சார்பாகப் பெறப்பட்ட கோலை பியோ எஸ்பொஸிட்டோ பெற்றார்.
பண்ணையில் அதி கூடிய மழை வீழ்ச்சி
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் இன்று செவ்வாய்க்கிழமை […]
மரண அறிவித்தல்
திருமதி சோமேஸ்வரி குமரகுரு யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு விளையாட்டு அரங்க வீதியை வதிவிடமாகவும் கொண்ட சோமேஸ்வரி குமரகுரு அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று கல்வியங்காட்டில் சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,காலஞ்சென்ற குமரகுரு அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,இந்திரா, சிவகுமார்(ஓய்வு பெற்ற தபால் அதிபர்), புஷ்பலதா(முன்னாள் விரிவுரையாளர் – கிழக்கு பல்கலைக்கழகம்), புஷ்பராணி(கணக்காளர்), Dr.கோணேஸ்வரி, சிவனேசன்(பொறியியலாளர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும் இரவீந்திரநாதன்(ஓய்வு பெற்ற […]
அரசாங்க மருத்துவ சங்கத்தின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; மருத்துவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2022 இல் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும், அந்த ஸ்திரத்தன்மையைப் பேணுவது அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் இங்கு தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆதரவு வழங்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். பிஜைகளின் நல்வாழ்வுக்கு சிறந்த சுகாதாரத் துறை மிகவும் முக்கியமானது என்பதையும், […]