கொடுப்பனவை இழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 1971 ஆம் ஆண்டு முதலாம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை அகற்றுவது குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தேர்தலின் போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டிருந்தது. இந்த கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை […]

பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள்; உள்நாட்டு பாதணி உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு!

கல்வி அமைச்சினால் தற்போது 250க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை மையமாகக் கொண்டு, பாடசாலைச் சப்பாத்து கொள்வனவிற்காக வழங்கப்படும் வவுச்சர் மூலம் உள்நாட்டுத் தயாரிப்புகளைக் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதம மந்திரி கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அவர்களுக்கும் இடையில் பாராளுமன்றக் குழு அறையில் […]

புத்தர் சிலை விவகாரம்; தடயவியல் பொலிஸார் கள ஆய்வு

திருகோணமலை கடற்கரை பகுதிக்கு சென்ற தடயவியல் பொலிஸார் புத்தர் சிலை விவகாரம், அதன் சேத நிலைவரம் தொடர்பில் கண்டறிய, கள ஆய்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில் உடைந்த பொருட்கள் மற்றும் கம்பி வேலி தொடர்பில் பரிசீலனை செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பகுதியில் புத்தர் சிலை வைக்கும்போது ஞாயிற்றுக்கிழமை (16) இரவு பொலிஸார் மூலம் அகற்றப்பட்டு மீண்டும் மறுநாள் திங்கட்கிழமை (17) பகல் அதே இடத்தில் அந்த புத்தர் சிலையை திருகோணமலை துறைமுக பொலிஸாரின் பாதுகாப்புடன் மத […]

80 பாதாள உலக செயற்பாட்டாளர்கள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றையதினம் (18) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர், “பாதாள உலக செயற்பாட்டாளர்களில் 80 பேருக்கு சிவப்பு அறிவிப்புகளை பிறப்பித்து அவர்களை நாட்டிற்கு அழைத்து வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நாங்கள் இப்போது பாதாள உலக நடவடிக்கைகளுக்கு எதிரான எங்கள் நடவடிக்கையை பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளோம். பாதாள உலக செயற்பாட்டாளர்களுக்கு சிவப்பு அறிவிப்புகள் […]

கைது செய்யப்பட்டுள்ள செவ்வந்தி தொடர்பில் முக்கிய தகவல்

கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். பல அரசியல்வாதிகளுக்கும் செவ்வந்திக்கும் தொடர்பு உள்ளமை விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார். அத்துடன் பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை, போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு […]

விமான நிலையத்தில் பயணிகளால் கைவிடப்பட்ட பொதிகளில் சிக்கிய மர்மம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளால் விட்டுச் செல்லப்பட்ட பொதிகளில் இருந்து போதை பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட பொதிகள் மற்றும் பயணிகளால் கைவிடப்பட்ட உடமைகள் அடங்கிய கிடங்கில் குஷ் போதைப்பொருள் ஒரு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று சுங்க அதிகாரிகள் குழுவால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 113,670,000 ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சூட்கேஸ் மார்ச் 17 ஆம் திகதி காலை 09.45 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-405 […]

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று ஆண்களிடம் அதிகரிப்பு

தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமீப தரவுகளின் படி, இலங்கையில் ஆண்களை மட்டுமே மையமாகக் கொண்ட எச்.ஐ.வி தொற்றுகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் புதிதாக பதிவான பெரும்பாலான நோயாளிகள் ஆண்கள் என தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, 2025 ஆம் ஆண்டில் இரண்டாம் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) மட்டும் 200 புதிய எச்.ஐ.வி தொற்றுகள் பதிவாகியுள்ளன. 2025 ஆம் ஆண்டின் முதல் […]

அஞ்சலை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுப்பு

இலங்கை அஞ்சல் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச அமைப்பொன்று இலங்கை தபால் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் ஆன்லைன் கொள்முதல் மூலம் செயல்படும் மோசடி குழு இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், மோசடி செய்யப்பட்ட மொத்த வெளிநாட்டு நாணயத்தின் அளவை தற்போது தீர்மானிக்க முடியாது என்றும் தபால் மா அதிபர் ஜெனரல் ருவான் சத்குமார தெரிவித்தார். […]

நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள்

வங்கதேசத்தில் நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்ட தலைவர்கள் பட்டியலில், முன்னாள் பிரதமர் ஹேக் ஹசீனாவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்த வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அவர் இந்தியாவில் தஞ்சமடைந்திருப்பதால், அவருக்கு இந்த மரண தண்டனை நிறைவேற்ற வாய்ப்பில்லை. இதேபோன்று குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக, பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த அதிபர்கள், பிரதமர்கள் உள்பட முக்கிய […]

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும்!

ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் எந்த ஒரு நாடும் மிகக் கடுமையான பொருளாதார தடைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார் . ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் மூன்றாண்டுகளை கடந்தும் தொடர்கிறது. இப்போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்தும், அதற்கான பலன் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு கடுமையான வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார். ரஷ்யாவிடம் இருந்து […]