இந்தியாவில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இலங்கையின் முக்கியஸ்தர்கள்

இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற எரிபொருள் மற்றும் வலுசக்தி மாநாட்டில் இதொகா தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தெற்காசிய நாடுகளில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை வலுப்படுத்தவும், எதிர்காலத்தில் அதை மேம்டுத்துவது தொடர்பாகவும், இதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து மாநாட்டில் ஆராயப்பட்டது. இம்மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஶ்ரீதரன், மலேசிய பாராளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ சரவணன், இந்தோனேஷியாவின் துணை […]

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க 3 விதமான திட்டங்கள் – அமைச்சர் கே.டீ. லால்காந்த

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. உருளைக்கிழங்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி, நுகர்வோருக்கும் எந்த அநீதியும் ஏற்படாத வகையில் அவற்றுக்கான […]

டக்ளஸ் தேவானந்தா உருவாக்கிய குடியேற்றங்களே திருமலையை பாதுகாக்கிறது – ஈ.பி.டி.பி

இலங்கையின் அரசியல் யதார்த்தத்தினை புரிந்து கொண்டு இலாவகமாக விடயங்களை கையாளக் கூடிய ஒருவர் இல்லை என்பதை திருகோணமலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சம்பவங்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஊடகச் செயலாளர் ப.ஸ்ரீகாந். டக்ளஸ் தேவானந்தாவின் இலாவகமான அணுகுமுறையினால் உருவாக்கப்பட்ட தமிழ் குடியேற்றங்களே திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவத்தை இன்றளவும் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற […]

பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கம் – பிரதமர்

போட்டி மனப்பான்மை மிக்க கல்விக்குப் பதிலாக, ஒத்துழைப்பு மற்றும் பொறுப்பு மனப்பான்மையைக் கொண்ட குடிமகனை உருவாக்குவதே புதிய கல்விச் சீர்திருத்தத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இன்று (நவம்பர் 18) நடைபெற்ற, பசுமை மாற்றத்தினுள் வகிபாகம் குறித்து ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் பசுபிக் வலய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கான மாநாட்டில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இதனைக் குறிப்பிட்டார். ஐரோப்பிய […]

பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது. 14 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மொரட்டுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் அதனை மூடிமறைக்க முயற்சித்த அதிபரும் மொரட்டுவை பொலிஸாரால் […]

வெற்றி பெற்றதன் பின் அரசாங்கம் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வேலையில்லாப் பட்டதாரிகள் போன்றோரையும் ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை கைவிடும் நிலைக்கு வந்துள்ளது. பிரதமர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தின்படி, நாட்டில் தற்போது சுமார் 50,000 பட்டதாரி தொழில் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. ஆகவே, இவர்களுக்கு உரிய நீதியைப் பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச […]

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கிய இந்தியர் மறைவு

இஸ்ரேலில் பாலைவனத்தை சோலைவனமாக்கியவர் என்ற பெருமைக்குரியவரும், இந்திய அரசின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான உயரிய ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருதை வென்றவருமான எலியாகு பெசலேல், 95, உடல் நலக்குறைவால் காலமானார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த எலியாகு பெசலேல், 1955ல் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்தார். ஆடு மேய்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தார். விவசாயத்தில் ஆர்வமுள்ள அவர், அங்கு நெகேவ் என்ற பாலைவன பகுதியில் முதல் குழாய் நீர் கொண்டு வரப்பட்டதும் சிறிய அளவில் பயிரிடத் தொடங்கினார். பின்னர், இஸ்ரேலை […]

மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள் இராமநாதபுரம் சென்றன?

மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன. இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இத்தகைய ஒரு நிகழ்வு, […]

2025 ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு!

கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 2,183 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றில், 1,488 முறைப்பாடுகள் குடும்ப வன்முறை சம்பவங்கள் தொடர்பானவை ஆகும். பெண்களுக்கு எதிராக இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க 1938 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பெண்கள் மற்றும் […]

ஏழாலையில் பெருமளவான கோடாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – ஏழாலை வடக்கு பகுதியில் 180 லீட்டர்கள் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு தயாரிப்பதற்காக வைத்திருந்த கோடாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.