தனுஷ் இயக்கத்தில்; ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம்
உலக நாயகன் கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படம் தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் சுந்தர்.சி ரஜினியின் படத்தினை இயக்குவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அண்மையில் சுந்தர் சி ரஜினியின் படத்தை இயக்குவதில் இருந்து விலகி விட்டார். எனவே ரஜினியில் […]
3 நாட்களில் ரூ.25 கோடி வசூலித்த “காந்தா”
செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான படம் ‘காந்தா’. இப்படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் , துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். வேபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் ராணா டகுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் கலவையான விமர்சனங்களையும் கூறியுள்ளனர். இப்படம் முதல் நாளில் ரூ.10 வசூல் செய்தது. […]
சிம்பு -ராம்குமார் பாலகிருஷ்ணன் படம் எப்போது?
சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் STR 49 திரைப்படம் தயாராக இருந்தது.ஆனால் அப்படம் திடீரென தள்ளி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படம் குறித்து நாயகி கயாடு லோஹர் அப்டேட் ஒன்றை தெரிவித்திருக்கின்றார். சிலம்பரசன் இந்தாண்டு தனது பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து மூன்று பட அறிவிப்புகளை வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தினார். அந்த மூன்று படங்களில் பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்த படமும் ஒன்று. STR 49 என அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் பூஜை […]
2030 இல் 2.5 பில்லியன் டொலர் வரை தேயிலை ஏற்றுமதி வருமானம்?
அரசாங்கத்தால் 2030ஆம் ஆண்டு தேயிலை உற்பத்திக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் கிலோ கிராம் இலக்கில் 75 சதவீத பங்களிப்பு சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அத்தோடு தேயிலை ஏற்றுமதி வருமானத்தை 2030இல் 2.5 பில்லியன் டொலர் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதி பொது முகாமையாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார். பத்தரமுல்லையிலுள்ள சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை (17) ‘6ஆவது ஆசிய […]
இஸ்ரேல் கருவியாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு மாற்றப்பட்டுள்ளது – ரவூப் ஹக்கீம்
பயங்கரவாத விசாரணைப்பிரிவு இஸ்ரேலுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளை கண்டிக்க முடியாத அளவுக்கு வெளிவிவகார அமைச்சு கோழைத்தனமாக மாறியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைசசு மற்றும் நீதி மற்றம் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் […]
இலங்கை கிரிக்கெட் அணியில் மீண்டும் இணையும் வியாஸ்காந்த்!
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 முத்தரப்புத் தொடருக்கான இலங்கை தேசிய ஆடவர் அணியில் இளம் சுழற் பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடரின்போது தசைப்பிடிப்பினால் பாதிக்கப்பட்ட வனிந்து ஹசரங்க இன்னும் முழுமையாகக் குணமடையாத நிலையில், அவருக்குப் பதிலாக வியாஸ்காந்த் அணியில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டாரில் நடைபெற்று வரும் வளர்ந்துவரும் நட்சத்திரங்களுக்கான ஆசியக் கிண்ண (Asia Cup Rising […]
நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு – அமைச்சர் ஆனந்த விஜயபால!
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்பு உண்டு என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால குற்றம் சுமத்தியுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று (18.11.2025) உரையாற்றுகையிலேயே ஆனந்த விஜயபால இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அண்மையில் இந்தோனேசியாவில் இருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட திட்டமிட்ட குற்ற கும்பல்களை சேர்ந்த சந்தேக நபர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விசாரணைகளின் போது நாமல் […]
இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் பற்றி சபையில் – ஜனாதிபதி
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் இன்றைய (18.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், “எம்முடைய அரசாங்கத்தை ஜனநாயக ரீதியாகவோ பொருளாதார ரீதியாகவோ வீழ்த்த முடியாது. இதனால், இனவாதத்தை தூண்டி இந்த ஆட்சியை கவிழ்க்க சிலர் விரும்புகின்றனர். திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடன் கலந்துரையாடி ஒரு நடந்த விடயங்களை அறிக்கையாக […]
மழையால் பல பகுதிகளில் மண்சரிவு
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இம்மாவட்டத்தில் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால், மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு இரத்தினபுரி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது . இம்மாவட்டத்தில் 500 க்கு மேற்பட்ட மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரத்தினபுரி கொழும்பு பிரதான பாதையில் புதிய நகரப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது இதனால் ஒருவழி பாதை மட்டுமே போக்குவரத்துக்காக திறக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
வவுனியா பல்கலையில் தமிழ்மொழி மூலம் கற்கும் மாணவர்களுக்கு உரிய முறையில் பயன் கிடைக்க வேண்டும் – கலாநிதி ஆறு திருமுருகன்
வவுனியா பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மூலமான பட்டப்படிப்புத் துறைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர்களின் பிரதேசங்களில் ஒன்றாகிய வவுனியாவில் உருவாக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கலைத்துறை உட்பட ஏனைய துறைகள் அனைத்தும் தாய்மொழியில் கற்பிக்கக்கூடியதாக குறிப்பாக தமிழ்மொழியில் கற்பிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி அங்கு பல்கலைக்கழகம் முழுமை பெறுவதற்கு கல்வியாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கல்வி அமைச்சரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும். எவ்வளவோ […]