நிந்தவூரில் கேரள கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்!
கேரள கஞ்சாவுடன் கைதான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை – நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (15) இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் இச்சோதனை நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஏற்கனவே நிந்தவூர் […]
இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
ஐரோப்பிய நாடான போலந்தில், இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக போலந்திற்கான இலங்கைத் தூதர் பிரியங்கிகா தர்மசேன தெரிவித்துள்ளார். போலந்தின் முன்னணி போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான BATIM Sp. zoo இன் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது இலங்கையர்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சந்திப்பு கடந்த 7ஆம் திகதியன்று தூதரக வளாகத்தில் நடைபெற்றது. அதற்கமைய, ஐரோப்பாவில் நிறுவனத்தின் விரிவடையும் தளவாட விநியோகத்திற்கு தேவையான இலங்கையை சேர்ந்த தகுதிவாய்ந்த கனரக வாகன ஓட்டுநர்களுக்கு […]
எரிமலை நெருப்பு பிழம்பு; ஜப்பானில் விமான சேவைகள் ரத்து
ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. ஜப்பான் எரிமலைகள் அதிகம் காணப்படும் நாடாகும். இங்கு எப்போது எரிமலை விழித்து,நெருப்பு பிழம்புகளை உமிழத் தொடங்கும் என்று தெரியாது. இந்நிலையில் 13 மாதங்களாக அமைதியாக இருந்த சகுராஜிமா என்ற எரிமலை இப்போது நெருப்பை உமிழத் தொடங்கி இருக்கிறது. இந்த எரிமலை ககோஷிமா நகரத்தின் அருகில் உள்ளது. அடுத்தடுத்து 2 முறை நெருப்பு பிழம்புகளை உமிழ்ந்ததால் வானில் கிட்டத்தட்ட […]
கண்டாவளையில் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப்பொலிஸ்மா அதிபரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கண்டாவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் ஏ.சந்திரசேன ,உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்கள் ,இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் , கனிய வளத்திணைக்களம் ,வனஜீவராசிகள் திணைக்கள […]
சிலாபம் பாடசாலைக்கு அருகில் ஆணின் சடலம் மீட்பு
சிலாபத்தில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சுமார் 50 முதல் 55 வயதுடையவர் எனவும், சுமார் 05 அடி 7 அங்குல உயரம் கொண்ட மெல்லிய உடல் அமைப்பைக் கொண்டவர் எனவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், குட்டையான, வெள்ளை தலைமுடி கொண்டவர் எனவும், முகம் முழுவதும் தாடி உள்ளது எனவும், “ஹிதுமதே ஜீவீத்” எனக் கைதியை பச்சை குத்தியுள்ளார் எனவும் […]
மீண்டும் கரையொதுங்கும் பிளாஸ்டிக் துகள்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக தற்போது மன்னார் கடற்கரையோரங்களில் பிளாஸ்டிக் துகள்கள் கரையொதுங்கி வருகிறது. வடக்கு கரையோரம் சார்ந்த பகுதிகளில் பேசாலை,காட்டாஸ்பத்திரி , சிறுத்தோப்பு ஆகிய கடற்கரையோரங்களில் குறித்த பிளாஸ்டிக் துகள்கள் கரையொதுங்கி வருகின்றமை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இதேவேளை அண்மையில் இந்து சமுத்திரத்தின் கேரளா பகுதியிலே விபத்திற்குள்ளான எம்.எஸ்.சி.எல்.எஸ்.3 என்கிற கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துகள்கள் மன்னார் கடற்கரையோர பகுதிகளில் கரை ஒதுங்கிய நிலையில் ஏற்கனவே குறித்த பிளாஸ்டிக் துவல்களை அகழ்வு செய்யும் நடவடிக்கைகள் முன் […]
தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட 20 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருள்!
இந்தியா தமிழ்நாடு எஸ்பி பட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தனியார் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட இலங்கை ரூபாவில் சுமார் இருபதி கோடி ரூபா பெறுமதியான 1.500 கிலோ ஐஸ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி செல்வதற்கு கொண்டுசெல்லப்பட்டிந்திய ரூபாவில்் 4.50 கோடி பெறுமதியான 1கிலோ 500 கிராம் ஐஸ் போதை பொருள் எஸ்பி பட்டிணம் அருகே வைத்து […]
புத்தர் சிலை விவகாரம்; கரைச்சி பிரதேச சபையில் கண்டனம்
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக கரைச்சி பிரதேச சபையில் ஏக மனதாக கண்டனம் நிறைவேற்றம். குறித்த சம்பவம் தொடர்பான பிரேரணையை உறுப்பினர் முத்து சிவமோகன் கொண்டு வந்த நிலையில் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக ஈழ மக்கள் ஜனநாயக்கட்சி, சுயேட்சைக்குழு, ஐக்கிய மக்கள் சக்தி, ஜனநாயக தமிழ்க்கூட்டணி, போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் ஆதரவாக தமது கருத்துக்களை முன்வைத்தமையைத்தொடர்ந்து குறித்த சம்பவத்திற்கான கண்டனம் சபையில் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
வடமராட்சியின் இரண்டாவது கந்தபுராண விழா!
வடமராட்சி கந்தபுராண கழகம் நடாத்திய இரண்டாவது கந்தபுராண விழா வடமராட்சி வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அதன் தலைவர் நாகப்பட்டினம சோதிநாதன் தலமையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் இரண்டு மணியளவில் விருந்தினர்கள் வரவேற்க்கப்பட்டு மங்கல சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின. பஞ்சபுராணம் ஓதுதல், வரவேற்பு நடனம், வரவேற்புரை தலமையுரை என்பன இடம் பெற்றதை தொடர்ந்து விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. தொடர்ந்து விருதுகளை நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட கோப்பாய் ஆசிரிய கலாசாலை அதிபர் செந்தமிழ் […]
வல்வெட்டித்துறையில் 90 பேர் இரத்ததானம்!
யாழ்ப்பாணம் வடமராட்சி வல்வெட்டித்துறை இரத்ததான சங்கம்நடாத்திய இரத்ததான முகாமில் 90 பேர் இன்று இரத்ததானம் செய்துள்ளனர். வல்வெட்டித்துறை நெடியாகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் மாலை 3.30 கொட்டும் மழையிலும் 71 ஆண்களும் 19 பெண்களுமாக 90 பேர் இரத்ததானம் செய்தனர். குருதியினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் வருகைதந்து இரத்தத்தை பெற்றுக்கொண்டனர்.