சிறிதரன் எம்.பி இந்தியா விஜயம்

இந்தியாவின் ஜார்கண்ட மாநிலத்தின் ராஞ்சிக்கு இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்தியா செல்கிறார். குறித்த மாநிலத்தில் இன்று 17ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ள எரிசக்தி மாற்ற தயார் நிலைக்குறியீடு நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் அங்கு செல்கிறார். குறித்த விஜயத்தின்போது அங்கு அரசியல், சமூக தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தீர்வுகள் வழங்கப்படாமையால்; தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்தோம் – வைத்தியர் பிரபாத் சுகததாச

அரச வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தில் உரிய தீர்வுகள் வழங்கப்படும் என நாம் எதிர்பார்த்த போதும், எமது எதிர்பார்ப்புகள் தற்போது பொய்யாகியுள்ளன. ஆகையால் அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார். வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட உள்ள தொழிற்சங்க நடவடிக்கைத் தொடர்பில் கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த […]

நிறுத்தப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீள ஆரம்பம்

அச்சிடும் அட்டைகள் பற்றாக்குறை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஓட்டுநர் உரிமங்களை அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அச்சிடும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், தினமும் சுமார் 6,000 உரிமங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டது. பற்றாக்குறையின் விளைவாக சமீபத்திய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 350,000 உரிமங்கள் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய அட்டை இருப்புக்கள் இப்போது கிடைத்துள்ளதால், அச்சிடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது, மேலும் தேங்கி நிற்கும் உரிமங்களை விரைவாக அகற்றுவதை திணைக்களம் நோக்கமாகக் […]

இளம் தம்பதியினர் கைது

பொலிஸ் உத்தரவை மீறியதற்காக மோட்டார் வாகனமொன்றினை சோதனை செய்ததில் 6,790 மில்லிகிராம் ஹெரோயினுடன் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கலேவெல பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் வாகனத்தின் சாரதியை பொலிஸார் நிறுத்திய நிலையில், அதனை நிறுத்தாமல் சாரதி சென்றுள்ளார். இதன்பின்னர் கலேவேல பகுதியில் வாகனம் நிறுத்தப்பட்டு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதியினர் திருகோணமலை உப்புவேலி பகுதியில் தங்கியிருந்ததாகவும், அவர்களின் நிரந்தர வசிப்பிடம் மூதூர் பகுதியில் இருந்ததாகவும்பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஹெரோயின் கடத்தலை அவர்கள் […]