சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி
காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த […]
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை
மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், அவர் குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் […]
உக்ரைன் கைதிகள் பரிமாற்றம் ரஷ்யாவுடன் பேச்சு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் போர் கைதிகள் பரிமாற்றத்தை மீண்டும் துவங்குவது குறித்து தீவிர ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, சமூக வலைதள ப க்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: உக்ரைன் பிணைக் கைதிகள் 1,200 பேரை அழைத்து வரும் வகையில், மீண்டும் கைதிகள் பரிமாற்றத்தை துவங்குவதற்கான பணியை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக பல கூட்டங்கள், பேச்சுகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் […]
சவுதி அரேபியாவில் பஸ்சில் தீ: இந்தியர்கள் 42 பேர் உயிரிழப்பு
சவுதி அரேபியாவில் பஸ்-டீசல் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில் பயணித்த இந்தியர்கள் 42 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இதில், ஐதராபாத்தை சேர்ந்த 20 பெண்கள், 11 குழ ந்தைகள் […]
பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக கொட்டடி மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை நகரசபைக்கு எதிராக பருத்தித்துறை கொட்டடி மக்கள் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த போராட்டம் இன்று (17.11.2025) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கொட்டடி கடற்தொழிலாளர்களின் படகு தரிப்பிடத்திற்காக தூர்வார்ப்பட்ட மண்ணை இதுவரை அகற்றவில்லை என தெரிவித்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது குறித்த மண்ணை அகற்றுமாறு கோரி தவிசாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பதிலளித்த தவிசாளர் உடனடியாக மணல் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருமலையில் மீண்டும் பதற்றம்; பொலிஸ் பாதுகாப்போடு அதே புத்தர் சிலை
திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைக்க முயற்சிக்கும் நிலை தொடர்வதால் குறித்த பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே களத்தில் பெருமளவான பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலையை அந்த இடத்திலேயே மீண்டும் வைப்பதற்கான முயற்சியை அங்கு கூடியுள்ள பௌத்த பிக்குகள் தற்போது தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரியவருகின்றது. மேலும், பெரும்பான்மை இன மக்களும் அதிகமாக அவ்விடத்தில் ஒன்று திரண்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபர் […]
மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை – நாமல் ராஜபக்ஷ
தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் 21 ஆம் திகதி நுகேகொடைக்கு வந்து அரசாங்கத்திற்கு எதிரான தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “இன்று, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை […]
திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை தொடர்பில் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களின் சுருக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய கண்டனமும் குற்றச்சாட்டுகளும் இந்தச் சம்பவம், நாட்டில் உள்ள பௌத்த மக்களிடையே பெரும் மன உளைச்சலையும், வெறுப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இதனை அனைவரும் கண்டிப்பதாகவும் நுகவன் பெல்லந்துடாவ குறிப்பிட்டார். குற்றச்சாட்டுகள்: திருகோணமலை மாவட்டத்திலுள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் மிகவும் பழமையான தஹம் பாடசாலை (ஞாயிறு பாடசாலை) இயங்கி வந்த […]
அரசாங்கம் செல்லும் வழி முறையற்றது – உதய கம்மன்பில
திசைக்காட்டியுடன் எம்மை ஒருபோதும் ஒப்பிட வேண்டாம். 1977, 1987 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் வன்முறையின் ஊடாக ஆட்சி அதிகாரத்தை பெற்றதை போன்றதொரு எண்ணம் எம்மிடம் இல்லை. தேர்தல் இடம்பெறும் வரை காத்திருப்போம். எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் அதிக தலைகளை காண முடியும் என்ற நம்பிக்கையுள்ளது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சமூக வலைத்தளம் மற்றும் ஊடகங்களினூடாக எம்மை கடுமையாக […]
மக்களின் வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று அரசாங்கத்திடம் இல்லை – சஜித் பிரேமதாச
மக்கள் மாற்றுத் தரப்பை நாடியிருந்தாலும், அந்த மாற்றுத் தரப்பு சரியாக அமைந்து காணப்படாமையினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் இன்று தோல்வி கண்டுள்ளன. கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபா ஒதுக்கப்பட்டுள்ள தருணத்தில் நாட்டில் வறுமை அதிகரித்து காணப்படுகின்றன. அரசாங்கத்திடம் தற்போது வறுமை குறித்த சரியான நிலைப்பாடொன்று இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடான சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும்போதே சஜித் பிரேமதாச இவ்வாறு […]