விஜயகாந்த் பட நடிகை: பெரிய வீட்டு மருமகள்?

பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சகோதரரின் மருமகள் தீப்தி பட்நாகர் பற்றி சினிமா ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தீப்தி தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உயிருடன் இருக்கும் நிலையில் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தர்மேந்திரா ஓய்வு எடுத்து வருகிறார். அவரின் 90வது பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட குடும்பத்தார் முடிவு செய்திருக்கிறார்கள். இந்நிலையில் தர்மேந்திராவின் சகோதரரும், நடிகருமான வீரேந்திராவின் மருமகள் தீப்தி […]

‘மாஸ்க்’ படத்துக்கு திடீர் சிக்கல்…

கவின், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்க் வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஜிவி பிரகாஷ் இசையில் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இதனிடையில் ‘மாஸ்க்’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்க்’ இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீசாக இருக்கிறது. இந்தாண்டு அவரது இரண்டாவது படமாக வெளியாகவுள்ளது. கடந்த சில நாட்களாகவே ‘மாஸ்க்’ ப்ரமோஷன் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. ரசிகர்கள் இடையிலும் இந்தப் படத்துக்கு […]

இலங்கை சுற்றுலாத் துறையில் மைல்கல்: இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கைக் கடந்தது

2025 ஆம் ஆண்டுக்கான இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை மீறி, இலங்கை சுற்றுலாத் துறை இன்று (17) ஒரு முக்கிய மைல் கல்லை எட்டியுள்ளது. லண்டனில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் UL 504 மூலம் வந்த பிரித்தானியாவைச் சேர்ந்த திரு. காரன் ரஃபேல் (Mr. Caron Raphael) மற்றும் திருமதி. சார்லட் கிளேயர் (Mrs. Charlet Claire) ஆகியோர் 2025 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வருகை மைல் […]

உள்ளூர் விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நிரந்தர வேலைத்திட்டம்!

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை உருவாக்குவது குறித்து விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (17) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நெல் பயிற்செய்கை தொடர்பில் நீண்ட காலமாக கவனம் செலுத்தி நெல் விவசாயியைப் பாதுகாக்க ஒரு குறிப்பிட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ள […]

திருமலை விவகாரம்: உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று தனது பாராளுமன்ற உரையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில் திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை நேற்றிரவு அகற்றிய போது , சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் […]

தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரத்தில் சஜித் தலையிட்டால் தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 வழங்குவதற்கு சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.200 கொடுப்பனவு வழங்கப்படும் என முன்மொழியப்பட்டமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு தெரிவித்தால், அது தன் தலையில் தானே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்ளும் செயலாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். […]

பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை யாழில் கரையொதுங்கியது?

யாழ்ப்பாண கடற்கரையில் பௌத்த மதத்துடன் தொடர்புடைய சிலை ஒன்று கரையொதுங்கியுள்ளது. வளலாய் பகுதியில் கடற்கரையில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சிலை கரையொதுங்கியுள்ளது. சிலையின் கைகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதனால் , வேறு நாட்டவர்கள் தங்கள் நாட்டு கடலில் போட்ட சிலையே வளலாய் பகுதியில் கரையொதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மியான்மார் நாட்டிலும் பௌத்தர்கள் வாழ்கின்ற நிலையில் , அங்கு உயிரிழந்தவர்களின் நினைவாக கடலில் விடப்படும் மூங்கிலிலான தொப்பங்கள் கடந்த காலங்களில் வடமராட்சி பகுதிகளில் கரையொதுங்கி இருக்கின்றன. […]

புத்தர் சிலை விவகாரம்; சபையில் சாணக்கியன் கடும் கண்டனம்

திருகோணமலையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை வைத்ததாக கூறப்படும் விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் 30 வருட யுத்தக் காலத்தில் கூட அவர்கள் பௌத்த இனத்தின் எந்தவொரு பௌத்த சின்னங்களும் அவர்களால் அழிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இன்றைய சபை அமர்வின்போது அவர் இது குறித்து கடும் தொனியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நீங்கள் அரசியல் செய்வதற்காக சட்டவிரோத விடயம் ஒன்றுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதை தயாசிறி ஜயசேகரவுக்கு […]

சிதம்பரம் கருணாநிதி தலைமையில் அரசுக்கு ஆதரவான பேரணி

எமது தலைமுறை கட்சியின் (Apey Parapura Pakshaya) தலைவர் சிதம்பரம் கருணாநிதி, எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி கொழும்பில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். ​இந்தப் பேரணி, அரசாங்கத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நுகேகொடை ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த “எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி… ​அரசின் மீது நம்பிக்கை; எதிர்ப்பாளர்களுக்குக் கண்டனம் ​”அரசாங்கம் தற்போது […]

திருமதி தவபாக்கிய அம்மா சுவாமிநாதன்

யாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், கல்கிசை, கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி தவபாக்கிய அம்மா சுவாமிநாதன் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும் தமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சுவாமிநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ரவீந்திரன்(பிரித்தானியா), கவிதா(கனடா), புவீந்திரன்(கொழும்பு), சுகிர்தா(கனடா), விஜிதா(பளை), கோபிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் சுவர்னா, கிருஷ்ணதாசன், அனுஷா, தினேஷ், முருகானந்தன், கிரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நடராஜா அவர்களின் அன்புச் […]