பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட இரண்டாம் வருட பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஊவா பரனகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று யாழ் கந்தர்மடம் பகுதியில் கைது செய்யப்பட்டார். 24 வயதுடைய குறித்த மாணவனிடம் இருந்து 33 கிராம் 230 மில்லிக்கிராம் ஹசீஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது மேற்படி சந்தேக நபரை […]
மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் மரணம்
நேற்று ஞாயிற்றுக்கிழமை (16)ஆம் திகதியன்று மூன்று இடங்களில் நீரில் மூழ்கி மூவர் உயிரிழந்துள்ளனர். எகொடஉயன பொலிஸ் பிரிவில் உள்ள எகொடஉயன கடற்கரையில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் எகொடஉயன பொலிஸ் நிலையம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. காணாமல் போனவர் மொரட்டுவ, கட்டுகுருந்த பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் ஆவார். காணாமல் போன நபர் மேலும் இரண்டு நண்பர்களுடன் மேற்கூறிய இடத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) குளிக்கச் சென்றிருந்தபோது, கடல் அலையில் […]
சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை
2020 ஆம் ஆண்டு கே. துலானி அனுபமாவை உதவி இயக்குநராக சட்டவிரோதமாக நியமித்ததாகக் கூறப்படும் வழக்கில் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அனுர வல்போலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, பிணையை அங்கீகரித்து, தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளையும், வல்போலவுக்கு பயணத் தடையையும் விதித்தார்.
தென்னாபிரிக்காவுக்கெதிரான 2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவது சந்தேகம்?
தென்னாபிரிக்காவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணித்தலைவர் ஷுப்மன் கில் விளையாடுவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. முதலாவது போட்டியின்போது கழுத்து உபாதைக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியபோதும் இன்று காலை கொல்கத்தாவில் இந்தியா கொண்டுள்ள பயிற்சியில் பங்கேற்க மாட்டாரென எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது டெஸ்ட் நடைபெறும் குவஹாத்திக்கு இந்தியா புதன்கிழமை (19) பயணமாகவுள்ள நிலையில், கழுத்து உபாதையிலிருந்து குணமடைபவர்களுக்கு விமானப் பயணம் உகந்ததல்ல என்ற நிலையில் அன்று அணியுடன் கில் பயணிக்க மாட்டாரெனத் தெரிகிறது. கில் விளையாடவிட்டால் சாய் […]
தொழில்முறை டென்னிஸ் சம்பியனான சின்னர்
தொழில்முறை டென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பின் இறுதிப் போட்டிகள் தொடரில் இரண்டாம் நிலை வீரரான ஜனிக் சின்னர் சம்பியனானார். ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல்நிலை வீரரான கார்லோஸ் அல்கரஸை எதிர்கொண்ட இத்தாலியின் சின்னர் 7-6 (7-4), 7-5 என்ற நேர் செட்களில் வென்று சம்பியனானார். தனது அரையிறுதிப் போட்டியில் ஐந்தாம் நிலை வீரரான பீலிக்ஸ் ஆகர்-அலிஸிம்ம்மை எதிர்கொண்ட ஸ்பெய்னின் அல்கரஸ் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வென்றும், ஏழாம் நிலை வீரரான அலெக்ஸ் டி […]
18வது ஆண்டாக மீண்டும் பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக்!
தொடர்ச்சியாக 18வது ஆண்டாக, சிலோன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (பிரிமா குழுமம் இலங்கை) நிறுவனம், பிரிமா 15 வயதுக்குட்பட்ட இலங்கை இளைஞர் லீக் (SLYL) 2025 கிரிக்கெட் தொடரை அனுசரிக்க இலங்கை கிரிக்கெட்டுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் தேசியப் பாதை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒழுங்கமைக்கப்படும் இந்தத் தொடர், இளம் வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் விளையாடவும், அடுத்த கட்டத்திற்கு உயரவும், தேசிய அணியில் இடம் பெறுவதற்கு வழிவகுக்கும் ஒரு தளத்தை வழங்குகிறது. கொழும்பு வடக்கு, கொழும்பு […]
தேசிய கால்நடை அபிவிருத்தி சபை புதிய விற்பனை நிலையங்களை திறப்பு
நாடு முழுவதும் தங்களது பண்ணை வளாகங்களில் பல புதிய விற்பனை நிலையங்களை தேசிய கால்நடை அபிவிருத்தி சபை (NLDB) திறந்துள்ளது. புதிய விற்பனை நிலையங்கள் மாரவில, மெல்சிறிபுர, ஹொரக்கெல, ருகட்டான மற்றும் மரதவில ஆகிய பண்ணைகளில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விற்பனை நிலையங்கள் மூலம், உயர்தர கால்நடை உற்பத்தி பொருட்கள் பொதுமக்கள் செலுத்தக்கூடிய விலையில் வழங்கப்படும் என்று தேசிய கால்நடை அபிவிருத்தி சபை அதிகாரிகள் தெரிவித்தனர். நவீன பதப்படுத்தல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் இந்தத் […]
காதல் என்பது ‘ஒன்றும் இல்லை’ – தனுஷ்
காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள் தனுஷ்ஜி என்று இந்தி செய்தியாளர்கள் ஆர்வமாக கேட்க, அவர் சொன்ன பதில் தான் அனைவரையும் அப்படியே ஷாக் ஆக வைத்துவிட்டது. தனுஷுக்கு என்னாச்சு என்று கேட்கிறார்கள் ரசிகர்கள். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ், க்ரிட்டி சனோன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் தேரே இஷ்க் மெய்ன் காதல் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹீரோ தனுஷ், ஹீரோயின் க்ரிட்டியிடம் காதல் பற்றி கேட்டார்கள் செய்தியாளர்கள். […]
SK26 படம்; சிவகார்த்திகேயன் -வெங்கட் பிரபு
கங்கை அமரன் சமீபத்தில் SK26 படம் குறித்து பேசியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இணையும் SK26 திரைப்படம் எப்படி இருக்கும் என வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் பேசியிருக்கிறார். சிவகார்த்திகேயன் பராசக்தி மற்றும் சிபி சக்கரவர்த்தி படங்களை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்க இருக்கின்றது. சிவகார்த்திகேயனின் 26 ஆவது படமாக தயாராகவிருக்கும் இப்படம் குறித்து இணையத்தில் பல தகவல்கள் சுற்றி திரிகின்றன. SK26 […]
12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் ரோஜா
12 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார் ரோஜா. அரசியலில் ஈடுபட்டு வரும் அவர் முதல்வர் பதவிக்கு வருவது பற்றி பொதுவாக ஒரு விஷயம் தெரிவிக்க அது விஜய்க்கு தான் என்று பேசப்படுகிறது. அரசியலில் பிசியாக இருந்த ரோஜா தற்போது லெனின் பாண்டியன் படம் மூலம் கோலிவுட்டில் கம்பேக் கொடுக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் லெனின் பாண்டியன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஜா தெரிவித்த விஷயம் வைரலாகிவிட்டது. விஜய் […]