தர்மபுரத்தில் பல வருடங்களாக கேடப்பட்டு வந்தவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் கடந்த பல வருடங்களாக கேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமகன் போல் சென்று ஐஸ் போதை பொருளை பெற்றுக் கொண்ட சமயம் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் 1000 ருபா பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு திருட்டு சம்பவத்தில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த குறித்த 26 வயதுடைய இளைஞனே […]

அரசாங்கத்துடன் இணைவது குறித்து பொன்சேகா வெளியிட்ட தகவல்

நான் அநுர அரசாங்கத்துடன் இணைந்து ஒருபோதும் பதவிகளைப் பெற்றுக்கொள்ள மாட்டேன். எனினும், ஊழல் ஒழிப்பு நடவடிக்கைக்கு எனது ஆதரவு வழங்கப்படும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டை நாசமாக்கியதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களே எதிர்வரும் 21ஆம் திகதி நுகேகொடையில் ஒன்றுகூடுகின்றனர். இந்த நாட்டை மேற்படி தரப்பினரே மாறி, மாறி ஆட்சி செய்தனர். அந்தக் காலப் பகுதியில் இவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியவில்லை. […]

பொலிஸ் ஆணைக்குழுவின் பதவிகளில் மாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, இரண்டு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, சஞ்சீவ தர்மரத்னவை நிர்வாகத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிப்பதற்கும் ஒப்புதல் அளித்துள்ளது. லலித் பத்திநாயக்கவை அந்தப் பதவியில் இருந்து அகற்றி மத்திய மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவை இலங்கை பொலிஸ் நிர்வாகப் பதவியில் இருந்து நீக்குவதற்கு பொலிஸ் ஆணைக்குழு ஒப்புதல் […]

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் உரைகள் மிக நுட்பமானவை… ஆழமானவை… தொலைநோக்குப் பார்வையுள்ளவை… – திருமாவளவன் புகழாரம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் போர் உத்திகளை உலக நாடுகள் தமது இராணுவக் கல்லூரிகளில் கற்பிக்கின்றன. அந்தளவுக்கு அவர் இராணுவ ஞானம் உள்ளவராகவும், தோற்கடிக்க முடியாத தலைவராகவும் விளங்கினார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். யாழ். நல்லூர் கிட்டு பூங்காவில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்ட வடக்கு மாகாண மரநடுகை மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, “தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் […]