அடுத்த வருடம் மாகாண சபைத் தேர்தல் !
இலங்கையில் ஒன்பது மாகாண சபைகளுக்கும் தேர்தலை நடத்துவதற்குத் தேசிய மக்கள் சக்தி அரசு அஞ்சுகின்றது என்று முன்வைக்கப்படும் எதிரணிகளின் குற்றச்சாட்டை அமைச்சர் பிமல் ரத்நாயக்க அடியோடு நிராகரித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். எதிரணிகள் கூட்டணி வகுத்து வந்தால்கூட ஆளுங்கட்சியே வெற்றிநடை போடும். எதிரணிகள் மண்கவ்வும். தேசிய மக்கள் சக்தி அரசு கவிழாது. மக்கள் சக்தி எமக்கு இருக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். மாகாண சபைத் தேர்தலை அடுத்த […]
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடர்: திருநங்கைகளுக்குத் தடை?
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுக்கத் தயாராகி வருகிறது. இதன்படி, 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் தொடர் முதல், பெண்கள் பிரிவில் திருநங்கை வீராங்கனைகள் பங்கேற்க முழுமையான தடை விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வில், ஆணாகப் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே இருக்கும் உடல் வலிமை மற்றும் ஆற்றல், அவர்கள் பாலின மாற்று ஹார்மோன் சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும் நீடிப்பதாகக் […]
தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பில் நேற்று முன்தினம் (14) தொடக்கம் தொடர்ந்து கடுமையான மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, கடும் மழை காரணமாக மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது. பல இடங்களில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதையும் காண முடிகின்றது. […]
கழுத்து பிடிப்பு; பாதியிலேயே வெளியேறிய ஷுப்மன் கில்!
இந்திய அணித் தலைவர் ஷுப்மன் கில், கழுத்து பிடிப்பு (Neck Spasm) காரணமாக பாதியிலேயே ஆட்டத்தை விட்டு வெளியேறியுள்ளார். இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இரண்டாவது நாளாக நேற்று (15) இடம்பெற்றது. இதன்போதே அவர் பாதியில் வெளியேறிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சௌரவ் ஹார்மர் வீசிய பந்தில் பவுண்டரி அடித்த பிறகு, சுப்மன் கில்லுக்கு திடீரென கழுத்து வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், பரிசோதனைக்காக இரவில் […]
அரசாங்கம் மலையக மக்களுக்கு கொடுத்தது சம்பள உயர்வு அல்ல பிச்சை
அரசாங்கம் மலையக மக்களுக்கு கொடுத்தது சம்பள உயர்வு அல்ல பிச்சை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தினம் (15.11.2026) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “200 ரூபா கொடுக்கின்றீர்கள், இதிலும் 200 ரூபாய் என்று சண்டை பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள், நீங்கள் கொடுத்திருப்பது பிச்சை. 140 ரூபாய் ஒரு இறாத்தல் பாண், இந்நிலையில் இரண்டு வாழைப்பழங்களையும் பாணையும் வைத்து 10 பேர் உள்ள ஒரு குடும்பம் […]
சவுதி அரேபியா; டிஜிட்டல் விசா அறிமுகம்
சவுதி அரேபியா ஒரு முன்னோடி டிஜிட்டல் விசா முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தகுதியான விசா பிராண்டட் அட்டைதாரர்கள் சுற்றுலா மின் விசாவை சில நிமிடங்களில் பெற அனுமதிக்கும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச பயணிகள் அணுகும் விதத்தில் அதிகரிப்பை ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு நடவடிக்கை என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. சுயவிபரத்தின் மூலம் விசா என்று அழைக்கப்படும் இந்த திட்டம், ரியாத்தில் நடந்த TOURISE 2025 உச்சிமாநாட்டின் போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இது சவுதி அரேபியா, […]
சினிமா பாணியில் நடக்கும் போதைப்பொருள் கடத்தல்
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் பொதிகளை அடையாளம் காணப் பயன்படுத்தும் குறியீட்டு ஸ்டிக்கர்களை உருவாக்கும் கல்கிசையில் உள்ள இடமொன்றை பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் சுற்றிவளைத்துள்ளது. இதன்போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த இடத்தில் இருந்து பல குறியீட்டு ஸ்டிக்கர்கள் அடங்கிய தொகுதியை கண்டுபிடித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் கல்கிசை மற்றும் படோவிட்ட பகுதியில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. உலகப் புகழ்பெற்ற கார்ட்டூன் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் கதாபாத்திரங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட […]
சேவைகளை நிறுத்திய விமான நிறுவனம்; பல பயணங்கள் உடன் இரத்து
ஆங்கிலக் கால்வாயில் உள்ள தீவுகளை தளமாகக் கொண்ட ப்ளூ ஐலண்ட்ஸ் ஏர்லைன்ஸ், அதன் செயல்பாடுகளை நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இதன்படி, குறித்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து விமானங்களும் உடனடியாக இரத்து செய்யப்படுகின்றன. 20 ஆண்டுகளாக பிரித்தானிய தீவுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள இடங்களுக்குச் செயல்பட்டு வரும் விமான நிறுவனம், 14ஆம் திகதி முதல் வர்த்தகத்தை நிறுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்நிலையில், அனைத்து முன்பதிவுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியுள்ளார். இதன் காரணமாக பிற விமான […]
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும்
இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு இல்லை. அதனை நாம் ஆதரிக்கின்றோம். அதேபோல் வடக்கு, கிழக்கு மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி அவசியம் என்ற […]
இரு படகுகள் மோதி விபத்து
மன்னார் தாழ்வுபாடு மீன்பிடி துறையில் இருந்து நேற்று (15) இரவு கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளி ஒருவரின் படகு ஒன்றும், கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பிய கடற்றொழிலாளி ஒருவரின் படகு ஒன்றும் மோதிய நிலையில் இரு படகுகளும் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்து தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் இடம்பெற்றுள்ளது. படகுகளில் ஒரு படகு கரை திரும்பிய நிலையில், மற்றைய படகு கடலில் மூழ்கியதோடு, குறித்த படகு மீட்கப்பட்டு கரைக்கு […]