விஜயின் தவெக வேட்பாளர்கள் செலவுக்கு ஜனநாயகன் பட வசூல்?

னநாயகன் பட வசூலை தவெக வேட்பாளர்கள் தேர்தல் செலவுக்கு வழங்கும் திட்டத்தில் விஜய் உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருந்தாலும், அரசியல் களம் இப்போதிலிருந்தே பரபரப்புடன் உள்ளது. குறிப்பாக, வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியை தனித்துப் போட்டியிடச் செய்வதாக அறிவித்ததன் பின்னர், தமிழக அரசியலில் புதிய அலை எழுந்துள்ளது. திமுக – பாஜக ஆகிய இரு தேசிய / பிராந்திய சக்திகளுடனும் கூட்டணி இல்லை எனத் […]

ஐயப்ப பக்தர்களுக்கு முன்னெச்சரிக்கை; மூளையை திண்ணும் அமீபா

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் செல்லவுள்ளனர். இவர்கள் கேரளாவில் மிகவும் எச்சரிக்கையாக சென்று வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. இதையொட்டி இருமுடி கட்டி வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு முன்பதிவு செய்வது கட்டாயம். ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பக்தர்கள், ஸ்பாட் முன்பதிவு […]

மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது

வாழைச்சேனை பொலிஸாரின் தொடர் நடவடிக்கையினால் நேற்று (15.11.2025) சனிக்கிழமை மாலை மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தெரிவித்தார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய ஊழல் தடுப்பு பிரிவுப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இதன் போது, 39, 42, 49 வயதுடைய பிறைந்துரைச்சேனை, வாழைச்சேனை மற்றும் நாவலடி பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு […]

வடக்கு மாகாணத்திற்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமனம்

வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக ஜி.எம்.எச்.புத்திக்க சிறிவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்கள் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டது. வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இருந்த திலக் தனபால வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் தலைமையகம் மற்றும் வட மத்திய மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் […]

வாயில்லா ஜீவன்களை துஷ்பிரயோகப்படுத்திக் கொலைசெய்து வந்த கனடா தம்பதி!

கனடாவை சேர்ந்த தம்பதியினர், விலங்குகளை சித்திரவதை செய்து கொலை செய்யும் காணொளிகளை உருவாக்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காணொளிகளை அவற்றை ஒரு செய்திப் பரிமாற்ற செயலி மூலம் விற்ற வழக்கில், பல விலங்குக் கொடுமைக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலில் 90 க்கும் மேற்பட்ட பூனைகள், பறவைகள் மற்றும் ஆக்சோலாட்டல் போன்ற விலங்குகள் சம்பந்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஒக்டோபர் 2024 இல், கால்நடை மருத்துவருக்கு கிடைத்த தகவல் மூலம் இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். ‘Goddess May […]

வானிலை முன்னறிவிப்பு

இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் நிலைகொண்டிருந்த தளம்பல் நிலையானது தாழ் அமுக்கப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 […]

தன்னாட்சி குறித்து எதிர்காலத்தில் வாக்கெடுப்புகளை நடத்த அதிக வாய்ப்பு!

கனடா நாட்டின் இரண்டு முக்கிய மாகாணங்களான கியூபெக் (Quebec) மற்றும் அல்பர்ட்டா (Alberta) ஆகியன தன்னாட்சி அல்லது சுதந்திரம் குறித்து எதிர்காலத்தில் வாக்கெடுப்புகளை நடத்த வாய்ப்புள்ள நிலையில், அதில் வெளிநாட்டு எதிரிகள் தலையிடக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய உளவுத்துறையின் தலைவர் டான் ரோஜர்ஸ் (Dan Rogers) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். ஒரு G7 நாட்டை பிளவுபடுத்துவதற்கான வாய்ப்பாக, இந்த வாக்கெடுப்புகளை வெளிநாட்டவர் கருதக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு சக்திகள் கனேடியர்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதையும், […]

பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் மொன்ரியலில் நிறுத்தும் அபாயம்?

ஒன்டாரியோவின் திறன் மேம்பாட்டு நிதி (Skills Development Fund – SDF) திட்டத்தின் கீழ் மானியம் பெற்ற ஒரு நிறுவனம் மீது விசாரணையைத் தொடங்கும்படி ஒன்டாரியோ மாகாணக் காவல்துறைக்கு (OPP) அந்த மாகாணத்தின் அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நிறுவனத்தில் நடத்தப்பட்ட விரிவான தடயவியல் கணக்காய்வில் (forensic audit) “முறைகேடுகள்” கண்டறியப்பட்டதையடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஒரு வழக்கமான கணக்காய்வின் போது ஒரு “வெளிப்புற சேவை வழங்குநர்” குறித்து அவதானிக்கப்பட்டதாக, முதல்வரின் அலுவலகம் […]

கியூபெக்கில் உயிரிழந்த 13 வயது சிறுமியின் மரணம் குறித்து பொது விசாரணை!

கியூபெக்கின் தலைமை மரண விசாரணை அதிகாரி, கடந்த ஆண்டு லெவிஸ் பகுதியில் உயிரிழந்த 13 வயது சிறுமி மேலீன் லூகெஸின் (Maëlyne Lugez) மரணம் குறித்து பொது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். சிறுமியின் மரணம் விபத்தாக நடந்ததாகக் கூறிய முந்தைய விசாரணை அறிக்கையின் முடிவுகளை, அவரது தந்தை பகிரங்கமாக கேள்விக்குள்ளாக்கினார். அதைத் தொடர்ந்தே, கியூபெக்கின் தலைமை மரண விசாரணை அதிகாரியினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலீன் லூகெஸ் கடந்த நவம்பர் 6-ஆம் திகதி அன்று காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்டது. […]

கியூபெக் மருத்துவர்கள் ஒன்டாரியோவில் தம்மை பணிபுரிய அனுமதிக்குமாறு கோரிக்கை

ஒன்டாரியோவில் பணிபுரிய அனுமதி கோரி கியூபெக் மருத்துவர்கள் 263 பேர் விண்ணப்பித்துள்ளதாக ”ஒன்டாரியோ மருத்துவர்கள் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர்கள் கல்லூரி (CPSO)” அறிவித்துள்ளது. கியூபெக்கின் சர்ச்சைக்குரிய மசோதா 2 (Bill 2) நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்தே, இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை திடீரெனப் பெருகுவது, மருத்துவர்களின் ஊதியத்தைச்சீரமைப்பதுடன் கடுமையான செயல்திறன் இலக்குகள் மற்றும் அபராதங்களை விதிக்கும் புதிய கியூபெக் சட்டத்திற்கு நேரடியான எதிர்ப்பாகும் எனக் கருதப்படுகின்றது . கடந்த ஐந்து மாதங்களில் பெறப்பட்ட மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கையை […]