அறுகம்பேயில் வெளிநாட்டுப் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!
அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் ஒக்டோபர் 25 ஆம் திகதி அன்று வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரைக் கண்டுபிடிக்க உதவுமாறு பொத்துவில் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ், விசாரணையைத் தொடங்கியுள்ளது. மேலும், தகவல் தெரிந்தவர்கள் பொத்துவில் பொலிஸ் நிலையத்தை 063 2248022 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் அல்லது பொத்துவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை 071 8591168 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸ் […]
புதிய முயற்சியாக கருப்பு கேரட் உற்பத்தி
தற்போது புதிய முயற்சியாக கருப்பு நிற கேரட் உற்பத்திக்கான சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.கருப்பு கேரட் 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும். கேரட்… இளஞ்சிவப்பு(ஆரஞ்சு) நிறத்தில் இருக்கும். இது அனைவரும் அறிந்ததே…! ஆனால், கருப்பு நிறத்திலும் கேரட் இருக்கிறது. அதுபற்றி தெரியுமா…? ஆம்…அந்த கருப்பு கேரட் சாகுபடியில் களமிறங்கி இருக்கிறது, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத்துறை. புதுடெல்லியில் இருந்து விதைகள் இங்கு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கேரட் சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது தேயிலை சாகுபடிக்கு […]
பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஹெரோயின் வழங்கிய இருவர் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிறு ஊழியர்களுக்கு போதைப்பொருளை வழங்கிய இருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டதாக நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தில் உள்ள ஆண்கள் விடுதி அருகில் சந்தேகத்திற்கிடமான ஒருவர் நடமாடிக்கொண்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்திற்குள் இருந்த சந்தேக நபர், பல்கலைக்கழக மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை வழங்கி வருவதாகவும் வழியில் அவருக்காக காத்திருந்த நிலையில் கைது […]
தனிமையில் வசித்து வந்தவரே கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்டவர்
கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட பெண், கடந்த சில வருடங்களாக தனிமையில் வசித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் நேற்று முன்தினம் (14.11.2025) பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டார். 45 வயது உடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும், இவர் புலோலி வடக்கு பறித்துறை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சடலத்தின் பிரேத பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பான […]
131 பட்டப்படிப்புகளுக்கு வட்டியில்லா மாணவர் கடன்
அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் வழங்கும் 131 பட்டப்படிப்புகளுக்கு வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இது கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் செயல்படுத்தப்படும் வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்தின் கீழ் உள்ளடங்கியுள்ளது. 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 18 பட்டப்படிப்பு நிறுவனங்கள் […]
வாக்குறுதிகள் காற்றில்; வெளிநாட்டு தொழிலாளர்களின் முறிந்த வாக்குறுதிகள்
இன்றைய தினம், நுகேகொடையில் (நவம்பர் 21) நடைபெறவுள்ள பேரணி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டார அவர்கள் பெபிலியான புராண ராஜமஹா விகாரையை மையமாக கொண்டு ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தினார். அதில் அவர் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: இந்த ‘திசைகாட்டி’ அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவர முக்கிய பங்களிப்பை வழங்கியவர்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள். நமது நாட்டின் டொலர் கையிருப்புகளை வலுப்படுத்தும் முக்கிய ஆதாரம், வெளிநாட்டு தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் […]
இந்த ஆண்டின் வாகன இறக்குமதி
இந்த ஆண்டின் (2025) முதல் எட்டு மாதங்களில் 36,691 மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கபட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் 925 மோட்டார் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மோட்டார் வாகன இறக்குமதிக்கான தற்காலிக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், மோட்டார் வாகன இறக்குமதி கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மோட்டார் வாகனங்கள் மீதான வரியிலிருந்து கிடைக்கும் வருவாய் 640.5 […]
ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர்?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஒரு பெண் என்பதை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்களாம் போலீசார். சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் பகுதியில் இருக்கும் பங்களாவில் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அக்டோபர் மாதம் 27ம் தேதி ரஜினிகாந்த் மற்றும் அவரின் முன்னாள் மருமகனான தனுஷ் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. உடனே அவர்களின் வீடுகளில் […]
2026: அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான தொகை!
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 11 ஆயிரம் கோடி ரூபா வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், பொருளாதார பாதிப்புக்கு மத்தியிலேயே நாட்டைப் பொறுப்பேற்று நாட்டின் நிதி நிலைமையை ஸ்திரப்படுத்தி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம். அரச சேவையை வினைத்திறனாக்குவதற்கு டிஜிட்டல் மயப்படுத்தலுக்காக பல மில்லியன் ரூபா நிதி இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அரச ஊழியர்களின் சம்பள […]
தென் மாகாண ஆளுநர் காலமானார்
தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர இன்று(16) காலை காலமானார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார். 62 வயதான ஆளுநர் ஹரிச்சந்திர ஒரு மூத்த நிர்வாக அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். மேலும், அமைச்சகத்தின் செயலாளர், மாவட்ட செயலாளர் மற்றும் பல முக்கிய பதவிகளை அவர் வகித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.