வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு எச்சரிக்கை
கடும் மழை மற்றும் பலத்த இடி மின்னல், காற்று தொடர்பில் தயவு செய்து அவதானமாக இருக்குமாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை, அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்லுபடியாகும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அருகில் நிலவும் குறைந்த அழுத்தப் பகுதி காரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் […]
ஜெர்மனியில் 18 வயது நிரம்பியவர்களுக்கு கட்டாய ராணுவ சேவை
ஜெர்மனி ராணுவத்தில் சுமார் 1 லட்சத்து 82 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இதற்கிடையே, நேட்டோ கூட்டணி நாடுகள் மீது ரஷியா தாக்குதல் நடத்த நேரிடும் என ஜெர்மனி ராணுவ தலைவர் கார்ஸ்டன் ப்ரூயர் எச்சரிக்கை விடுத்தார். இதனால் வலிமையான ராணுவத்தை உருவாக்க ஜெர்மனி அரசாங்கம் முடிவு செய்தது. இதற்காக கட்டாய ராணுவ சேவை திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த உள்ளது. அதன்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் ராணுவத்தில் சேர்வதற்கான தகுதியை மதிப்பிடுவதற்கு மருத்துவ பரிசோதனையை எடுக்கவேண்டும். இந்த […]
அரசுக்கு எதிராக தீவிரமடைந்த போராட்டம்
மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாமின் அரசாங்கத்தில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் ஊழளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மெக்சிகோ நகரத்திற்குள் பேரணி நடத்தினர். இந்த பேரணியை GenZ இளைஞர் குழுக்கள் ஏற்பாடு செய்திருந்தன. இந்த போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. குறிப்பாக உருபான் மேயர் கார்லோஸ் மான்சோ சில வாரங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். இந்த படுகொலை இளைஞர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி போராட்டத்திற்கு வழிவகுத்தது. இந்நிலையில், GenZ இளைஞர்களின் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ளது. […]
அனுராதபுர யாத்ரீகர்கள் பஸ்ஸில் தீ!
கம்பளையிலிருந்து அனுராதபுரம் நோக்கி யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற சொகுசு பேருந்து கல்குளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை (16) காலை தீப்பிடித்து எரிந்து நாசமானதாக காவரக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில் உள்ள கல்குளம் கட்டுமான இயந்திர ஆபரேட்டர்கள் கல்லூரிக்கு முன்னால் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது, மேலும் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். காவல்துறையினரும் அனுராதபுரம் நகராட்சி தீயணைப்புத் துறை அதிகாரிகளும் இணைந்து தீயை விரைவாக […]
மகா பருவ உர மானியம்
இதுவரை 226,015 விவசாயிகளுக்கு மகா பருவ உர மானியம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தித் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. அதன்படி, விவசாயிகளுக்கு வழங்கப்படும் தொகை 2214 மில்லியன் ரூபாவாகும். இதுவரை மானியம் பெறாத விவசாயிகளின் கணக்குகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் பணம் வரவு வைக்கப்படும் என்று விவசாய மேம்பாட்டு ஆணையர் நாயகம் தம்மிக ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் உள்ளங்கையில் மறைக்கக்கூடிய துப்பாக்கியுடன் ஒருவர் கைது
நீர்கொழும்பு , குரன பகுதியில், உள்ளங்கையில் மறைத்து வைக்கக்கூடிய சுமார் 6 அங்குல நீளமுள்ள சிறிய துப்பாக்கியுடன் தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி இதுவரை பாதுகாப்புப் படையினரிடமும் இல்லை என தெரியவந்துள்ளது. குறித்த துப்பாக்கி பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் வகை என தெரியவந்துள்ளது. வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழிலதிபர் ஒருவரிடம் துப்பாக்கி இருப்பதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய சந்தேக நபரின் […]
பளை பொதுச்சந்தையில் வெள்ளம் தேக்கம்!
பச்சிலைப்பள்ளி பளை பொது சந்தை கடந்த இரு தினங்களாக பெய்த கன மழை காரணமாக அதிக வெள்ளம் தேங்கி சந்தை நிலப்பரப்பு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி காணப்படுகின்றது. இதனால் பச்சிலைப்பள்ளி மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தினமும் பொதுத்தனசந்தைக்கு வருகை தருவது வழக்கமான விடயமாகும். ஞாயிற்றுக்கிழமை (16) மக்கள் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மிகவும் நெருக்கடியினை எதிர்நோக்கி வருகின்றனர். பொது சந்தை சுற்றுச்சூழல் முழுவதும் வெள்ளம் வியாபித்து காணப்படுவதால் மக்கள் தமது […]
முதலாவது போட்டி இந்தியாவை வென்ற தென்னாபிரிக்கா
இந்தியாவுக்கெதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், கொல்கத்தாவில் புதன்கிழமை (14) ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை (16) முடிவுக்கு வந்த முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா தென்னாபிரிக்கா: 159/10 (துடுப்பாட்டம்: ஏய்டன் மார்க்ரம் 31, டொனி டி ஸொர்ஸி 24, வியான் முல்டர் 24, றயான் றிக்கெல்டன் 23, கைல் வெரைன் 16, ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆ.இ 15 ஓட்டங்கள். பந்துவீச்சு: ஜஸ்பிரிட் பும்ரா 5/27, குல்தீப் யாதவ் 2/36, மொஹமட் […]
இலுப்பைக்கடவை கடற்கரையில் டொல்பின் கூட்டம்
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலுப்பைக்கடவை கடற்கரை பகுதியை நோக்கி நேற்றையதினம் சனிக்கிழமை (15.11.2025) பிற்பகல் ஒரு தொகை டொல்பின் மீன்கள் கூட்டமாக கடற்கரையை வந்தடைந்துள்ளன. இந்தநிலையில், இதனை அறிந்த அப்பகுதி கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் சென்று அவற்றை பார்வையிட்டதோடு, சிறுவர்களுடன் டொல்பின் மீன்கள் விளையாடியதை அவதானிக்க கூடியதாக இருந்தது. குறித்த டொல்பின் மீன் இனம் மன்னார் மாவட்டத்தில் கரையோர பகுதிக்கு கூட்டமாக வருகை தந்தமை இதுவே முதல் […]
போதைப்பொருள் தடுப்பு; அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில் அதிரடி நடவடிக்கை
அனைத்து அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களிலும் போதைப்பொருள் தடுப்புக் குழுக்களை அமைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தொன் கணக்கிலும் கிலோகிராம் கணக்கிலும் போதைப்பொருட்கள் தொடர்ச்சியாகக் கைப்பற்றப்பட்டு வரும் நிலையிலும், நாட்டில் அவை இன்னமும் பெருமளவில் புழக்கத்தில் இருப்பதை அடுத்து, போதைப்பொருளை ஒழிக்கும் நோக்குடன் அரசாங்கம் புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், […]