சபரிமலை நடை இன்று திறப்பு: மண்டலகாலம் நாளை தொடக்கம்

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. நாளை அதிகாலை இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. சபரிமலையில் இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றிய பின்னர் 18 படிகள் வழியாக வந்து ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்த்து, பின்னர் புதிய மேல் சாந்திகளான சபரிமலை – பிரசாத் நம்பூதிரி, மாளிகைபுறம் – மனு ஆகியோரை சன்னி தானம் முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி மகேஷ் […]

‘யுனிசெப்’ இந்தியா அமைப்பின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ்

குழந்தைகள் உரிமைக்கான தூதராக நடிகை கீர்த்தி சுரேஷை ‘யுனிசெப்’ இந்தியா அமைப்பு நியமித்தது. ”யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்” என கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். யுனிசெப் என்பது ஐநாவின் குழந்தைகள் நல நிதியம். உலகின் 190 நாடுகளில் இந்த அமைப்பு செ யல்படுகிறது. மனிதாபிமான உதவி மற்றும் சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு போன்ற உரிமைகளை குழந்தைகளுக்கு வழங்கவும், வலியுறுத்தவும் இந்த அமைப்பு பாடுபடுகிறது. இதன் இந்திய பிரிவின் சார்பில், […]

கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதியின் அறிக்கைக்கு கடுமையான விமர்சனம்

கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நிகழ்வில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட அறிக்கையை ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “’குப்பை மேட்டிலிருந்து எங்கள் தலையில் விழுந்த கிரீடம் அல்ல’ என்ற ஜனாதிபதியின் அறிக்கை, நாட்டை ஒரு கிரீடத்துடன் கூடிய முடியாட்சிக்கு திரும்பச் செய்யும் முயற்சியா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால் தேசிய மக்கள் சக்தி வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் இருந்து வேண்டுமென்றே குறித்த வசனம் மட்டும் […]

செட்டிப்பாளையத்தில் மதிலை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்த லொறி!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிப்பாளையத்தில் நள்ளிரவு வேளையில் மதிலை உடைத்துக்கொண்டு வளவொன்றினுள் லொறி ஒன்று புகுந்துள்ளது. குறித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை சாலை வழியே குருநாகல் இருந்து மருதமுனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சிறிய ரக லொறி ஒன்று செட்டிபாளையம் பிரதான வீதியால் பயணிக்கும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியை விட்டு விலகி வீட்டு மதில் ஒன்றை உடைத்துக்கொண்டு வளவுக்குள் புகுந்துள்ளது. அந்தப் பிரதேசத்தில் […]

பதுளையில் மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

பதுளையில் மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பதுளை – ஹாலி – எல, உடுவர பகுதியில் இன்று(16) காலை இடம்பெற்றுள்ளது. உடுவர பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். சடலம் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஹாலி – எல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசிய பேரவை தமிழக தரப்பினரை தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் அணுகத் திட்டம்

தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்புகளையும் தமிழ்த் தேசிய பேரவை அணுக திட்டமிட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய பேரவையினர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனை நேற்று (15.11.2025) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இதனையடுத்து, சந்திப்பு குறித்து கருத்து வெளியிட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “இலங்கையை பொறுத்தவரையில் இந்தியா பலமாக உள்ளது. இந்தியாவுடன் இணைந்து போகாமல் இலங்கையின் மிக மோசமாகியுள்ள பொருளாதாரத்தை மீள உயர்த்த முடியாத நிலை உள்ளது. […]

ஒரு வீட்டில் திருடப்பட்ட லொரி மோதியதில் ஒருவர் பலி: நான்கு பேர் காயம்

கந்தான, மரியா மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று சனிக்கிழமை (15) இரவு நிறுத்தப்பட்டிருந்த லொரியைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபர் இரண்டு விபத்துகளில் ஒருவர் கொல்லப்பட்டார், மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். கந்தான காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த லொரியைத் திருடிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை லொரியின் உரிமையாளர் மற்றும் அவரது ஊழியர்கள் துரத்திச் சென்றனர். சந்தேக நபர் படகம நோக்கி […]

இன்று பொப்பி மலர் தினம்

ஆயுதப்படை நினைவு மற்றும் பொப்பி மலர் தினம் கொழும்பு விஹார மகா தேவி பூங்காவில் அமைந்துள்ள முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

புன்னாலைக்கட்டுவன் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள காயங்கேணி கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. காயங்கேணி கடற்கரையில் நேற்று சனிக்கிழமை மாலை சடலம் ஒன்று கரையொதுங்கிய நிலையில் கிடப்பதைக் கண்டு மீனவர்கள் வாகரைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். இதனையடுத்து சம்பவ இடத்துக்குத் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சகிதம் சென்ற பொலிஸார், உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.