விஜய் சேதுபதி வெளியிட்ட கீர்த்தி சுரேசின் ‘ ரிவால்வர் ரீட்டா’

முன்னணி பான் இந்திய நட்சத்திர நடிகையான கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக கனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரிவால்வர் ரீட்டா’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் ஜே கே சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், சுப்பர் சுப்பராயன், சுனில், அஜய் கோஷ், ரெடின் கிங்ஸ்லி, ஜோன் விஜய், […]

அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படம்

‘ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. அறிமுக இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தீயவர் குலை நடுங்க’ எனும் திரைப்படத்தில் அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், அபிராமி வெங்கடாசலம், பிரவீண் ராஜா, லோகு, வேல. ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், பிரியதர்ஷினி, பேபி அனிகா உள்ளிட்ட பலர் […]

‘தேரே இஷ்க் மே’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வரவேற்பிற்கு பிறகு முன்னணி பான் இந்திய நட்சத்திர நடிகரான தனுஷ் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தேரே இஷ்க் மே’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆனந்த எல். ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே’ எனும் திரைப்படத்தில் தனுஷ், கீர்த்தி சனோன், சுசில் தஹியா, மாஹீர் முஹிதீன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். துஷார் கான்ட்டி ராய் மற்றும் விஷால் சின்ஹா ஒளிப்பதிவு செய்திருக்கும் […]

பாவனையற்ற காணி ஒன்றிலிருந்து துப்பாக்கி மீட்பு

நெடுந்தீவு 9 ஆம் வட்டார பகுதியில் பாவனையற்ற காணியில் இருந்து துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றை பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் நேற்று (14) இரவு மேற்படி துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. ஊர்காவற்றை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சான்று பொருளாக துப்பாக்கி இன்று ஊர்காவற்றுறை பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு

முள்ளியவளையில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வு இன்று(15) காலை 11 மணியளவில் உலக தமிழரின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர் ஞானதாஸ் யூட்சன் தலைமையில் முள்ளியவளை பரிமத்தியா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, முல்லைத்தீவு, மாங்குளம், சிலாவத்தை, கொக்குத்தொடுவாய், கர்நாட்டுகேணி, வட்டுவாகல் , ஆறுமுகத்தான்குளம், உடையார்கட்டு , மூங்கிலாறு, ,முள்ளியவளை, விசுவமடு, செல்வபுரம், கூழாமுறிப்பு ஆகிய பிரதேசத்திற்குட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்களே மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். மாவீரர்களது பெற்றோர்கள் மங்கள வாத்தியத்துடன் அழைத்து வரப்பட்டு […]

முதல் டெஸ்டில் பரிதாபகரமான நிலையில் தென் ஆபிரிக்கா

இந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாக அமைந்த ஈடன் கார்ட்ன்ஸ் ஆடுகளத்தில் போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் தென் ஆபிரிக்கா அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் மேலும் 3 விக்கெட்கள் மீதம் இருக்க இந்தியாவை விட 63 […]

ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்றவருக்கு தண்டம்!

செல்லவச்சந்நிதி ஆலய சூழலில் சுகாதார சீர்கேட்டுடன் பானிப்பூரி விற்பனை செய்தவருக்கு, உணவக உரிமையாளருக்கும் 50 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் பொது சுகாதார பரிசோதகர் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது பானிப்பூரி விற்பனை செய்தவருக்கும், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத உணவக உரிமையாளருக்கும் எதிராக வல்வெட்டித்துறை பொது சுகாதார பரிசோதகரினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, தம் மீதான […]

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யுடன் ஒருவர் கைது

அனுராதபுரம்- கெக்கிராவ பிரதேசத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு மனித பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெயை வியாபாரத்துக்காக வாகனம் ஒன்றில் எடுத்து சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் இன்று(15) மட்டு.காந்தி பூங்காவுக்கு முன்னாள் உள்ள வீதியில் வைத்து மாவட்ட உணவு மருந்து பரிசோதகர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, 1900 லீற்றர் தேங்காய் எண்ணெய் மற்றும் வாகனம் ஒன்றை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஈ.உதயகுமார் தெரிவித்தார். மாவட்ட உணவு மருந்து […]

வவுனியா தேசிய கல்வியற்கல்லூரியில் ஆசிரிய மாணவர்களுக்கு திடீர் சுகவீனம்?

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஆசிரிய மாணவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (14) காலை திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து 7 மாணவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகவீனமடைந்த சில மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்ப்பட்ட நிலையில் தனியார் மருத்துவ நிலையங்களிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர். கல்லூரிநிர்வாகம் கூறியே தனியார் மருந்தகங்களுக்கு சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சுகவீனம் […]

சிறுமியை கொலை செய்ததாக கூறப்படும் இளைஞனும் மரணம்?

கம்பளை – மில்லகஹமுல, பன்விலத்தென்ன பகுதியில் உள்ள வீட்டில் சிறுமி ஒருவரை கொலை செய்ததாக கூறப்படும் சந்தேகநபரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 16 வயதுடைய சிறுமி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி நேற்று (14) இரவு கொலை செய்த 27 வயதுடைய சந்தேகநபர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டிருந்தனர். சந்தேகநபர் அடையாளம் காணப்பட்ட நிலையில், […]