சிறுவன் பரிதாப மரணம்

பொலன்நறுவையில் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்ற சிறுவன் உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளார். இந்த துயரச் சம்பவம் பொலனறுவை – மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 15 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அ்தோடு, விபத்தில் படுகாயமடைந்த தாத்தாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 7.30 மணியளவில் மேற்படி சிறுவன் தனது தாத்தாவுடன் வயலுக்குச் சென்று வீடு திரும்பி கொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த உழவு இயந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இந்தச் சம்பவம் […]
காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றுடன் நிறைவு
மன்னாரில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த காற்றாலை மின் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 105ஆவது நாளான இன்றைய தினம்(15.11.2025) மாலை நிறைவுக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் மாக்கஸ் அடிகளார் போராட்ட களத்தில் விசேட ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார். இதன்போது மன்னார் மறைமாவட்ட ஆயர் எஸ்.ஞானப்பிரகாசம் ஆண்டகை கலந்து கொண்டதோடு, போராட்ட களத்தில் அங்கம் வகித்தவர்களும் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார், மக்களின் வாழ்விடங்களையும் […]
தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள “கெஹெல்பத்தர பத்மே” வங்கி கணக்குகள் விசாரணை
தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்குச் சொந்தமான வங்கி கணக்குகள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு டி சில்வா நேற்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார். “கெஹெல்பத்தர பத்மே”வுக்கு சொந்தமான வங்கி கணக்குகள் தொடர்பில் விசாரணை செய்ய அனுமதி வழங்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வழங்கிய […]
சம்பள அமைப்பு கட்டமைப்பு இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு
அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் தயாரிப்பதற்கும், தொழில்சார் தரத்தை மேம்படுத்துவதற்கும் தேவையான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் அடங்கிய இடைக்கால அறிக்கை, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தலைமையில் அண்மையில் வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூடியபோதே இடைக்கால அறிக்கை கையளிக்கப்பட்டது. அரச சேவைக்காக முறையான சம்பளக் கட்டமைப்பைத் […]
என் தந்தை இல்லாமல் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன் – 14 வயது வீரர் சூரியவன்ஷி
எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர் என்னை கண்டிப்புடன் வளர்திராவிட்டால் நான் கிரிக்கெட்டில் இந்தளவு உயர்ந்திருக்கமாட்டேன்’ என இந்தியாவின் 14 வயதுடைய இளம் கிரிக்கெட் நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி தெரிவித்துள்ளார். கத்தாரின் தோஹாவில் நடைபெற்றுவரும் ஆசிய கிண்ண உதய தாரகைகள் (Rising Stars) கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக இந்தியா சார்பாக இரண்டாவது அதிவேக ரி20 கிரிக்கெட் சதத்திற்கான இணை சாதனையை ஏற்படுத்திய பின்னர் வைபவ் சூரியவன்ஷி இதனைத் தெரிவித்தார். அப் போட்டியில் 32 […]
பிரதி அமைச்சர் பற்றி சர்ச்சையைக் கிளப்பிய எதிரணி
அநுர அரசின் பிரதி அமைச்சர் ஒருவர் கொழும்பில் 50 கோடி ரூபா மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றார் என்றும், அதை அவருக்கு யார் நன்கொடையாக அளித்தார்கள் என்றும் எதிர்கட்சியினர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். வரவு – செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் போது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி ஆளும் கட்சியினர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே மேற்படி கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “நீதிமன்ற வழக்குகளுக்காக இந்தப் பிரதி அமைச்சரை […]
பொலித்தீன் பைகளுக்குப் பதிலாக காகிதப் பைகள்

பொலித்தீன் பைகளுக்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளை உற்பத்தி செய்யுமாறு பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும் போது பொலித்தீன் பைகளுக்கு காசு அறவிடும் முடிவு குறித்து கவனம் செலுத்தி, சுற்றாடல், கமத்தொழில் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அமைச்சகத்திற்கு பரிந்துரையை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேவா இசையில் உருவான ‘அனந்தா’ படத்தின் இசை வெளியீடு
மனிதராக பிறந்து மகானாக வாழ்ந்து கொண்டிருக்கும் புட்டபர்த்தி சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்களை மையப்படுத்தி சமூக பக்தி திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘அனந்தா’ எனும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அனந்தா’ எனும் திரைப்படத்தில் ஜெகபதி பாபு, சுகாசினி மணிரத்னம், வை. ஜி. மகேந்திரன், ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், அபிராமி வெங்கடாசலம், ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. எல். சஞ்சய் ஒளிப்பதிவு செய்திருக்கும் […]
‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்’ ராபின்ஹுட்’…

நகைச்சுவை நடிகரான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ராபின்ஹூட் ‘எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான ஹெச். வினோத் வெளியிட்டு , படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ராபின்ஹூட்’ எனும் திரைப்படத்தில் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர் என் ஆர் மனோகர் ,கே பி வை சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இக்பால் […]
நடிகர் சதீஷின் ‘முஸ்தபா முஸ்தபா’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நகைச்சுவை நடிகராக பிரபலமாகி கதையின் நாயகனாக உயர்ந்திருக்கும் நடிகர் சதீஷ் கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருக்கும் ‘முஸ்தபா முஸ்தபா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் டி. இமான்- இயக்குநர்கள் ராஜு முருகன் – வெங்கட் பிரபு ஆகியோர் இணைந்து அவர்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் பிரவீண் சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘முஸ்தபா முஸ்தபா’ எனும் திரைப்படத்தில் சதீஷ், சுரேஷ் ரவி, மோனிகா, மானசா […]