கனடிய மக்களைப் பாதுகாக்க பிணை மற்றும் தண்டனை சீர்திருத்தங்களை அறிமுகம்!
கனடாவின் புதிய அரசாங்கம், மார்க்கம்-தோர்ன்ஹில்லில் தொகுதியில் உள்ள குடும்பங்கள் மற்றும் அயலவர்கள் உட்பட, நமது சமூகங்கள் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், குடும்பத்தை வளர்ப்பதற்கும் பாதுகாப்பான இடங்களாக இருப்பதை உறுதிசெய்ய தீர்க்கமான நடவடிக்கை எடுத்து வருகிறது. பில் சி-14, பிணை மற்றும் தண்டனை சீர்திருத்தச் சட்டம், பிணைச் சட்டங்களை கடுமையாக்குவதன் மூலமும், மீண்டும் மீண்டும் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனைச் சட்டங்களை கடுமையாக்குவதன் மூலமும், சட்ட அமுலாக்கத்தை ஆதரிப்பதன் மூலமும், நீண்டகால குற்றத் தடுப்பில் முதலீடு செய்வதன் மூலமும் […]
உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சிறையில் இருந்த சஹ்ரான் எங்கே? – மட்டு.தேரர் கேள்வி

உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட சஹ்ரான், தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் எப்படி சிறைச்சாலைக்குள் இருந்து வெளியில் வந்து தாக்குதலை நடத்தினார் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். குண்டுத் தாக்குதலின் பின்னரே அவர் தொடர்பான காணொளிகளை பார்க்க முடிந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட […]
மழை குறித்து எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்காக இலங்கைக்கு அருகில் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவரும் வானிலை ஆய்வாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 15.11.2025 வரை தொடரும். மீளவும் ஒரு காற்றுச் சுழற்சி எதிர்வரும் 17.11.2025 அன்று வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் உருவாகும். அது கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நிலை கொள்ளும். […]
இத்தாலியிலுள்ள உறவினரின் சொத்தினை வைத்து இலங்கையில் விற்பனை செய்தவர் கைது

இத்தாலியில் தனது உறவினர் வசித்து வரும் நிலையில், அவருக்கு சொந்தமான சொத்துக்களை விற்பனை செய்து சூதாடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் வென்னப்புவ பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட சொத்துக்களை அவருக்கு தெரியாமல் பல்வேறு தரப்பினருக்கு விற்பனை செய்துள்ளதாக இத்தாலியிலுள்ள உறவினர் அறிந்துள்ளார். இது தொடர்பில் பொலிஸில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய உடமைகளை விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் விற்பனை […]
டிசம்பர் 6ஆம் திகதி டெல்லியில் அடுத்த தாக்குதலுக்கு திட்டம்?
எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பல இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவம் தொடர்பான இந்திய அரசின் விசாரணையில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த வைத்தியர் உமர் நபி உட்பட பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய மருத்துவர்கள் இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்தத் திட்டம் […]
தவிசாளர் முட்டாள் என திட்டியதால் பதவி விலக தீர்மானித்துள்ள பெண் பிரதேச சபை உறுப்பினர்
ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான நிகினி அயோத்யா, பிரதேச சபை தவிசாளரால் அச்சுறுத்தப்பட்டதையடுத்து, தனது பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார். பிரதேச சபை தலைவர் ஜயரத்ன ஜயசேகர தன்னைத் திட்டி, முட்டாள் என்று கூறி, சபைக்கு மீண்டும் வர வேண்டாம் என அச்சுறுத்தியதாகக் கூறி, நிகினி அயோத்யா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். சிலாபத்தில் நேற்று (13) ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தமது பதவி விலகல் முடிவை அறிவித்தார். இங்கு பேசிய உள்ளூராட்சி […]
நாடளாவிய ரீதியில் யாழ். இந்துக் கல்லூரி சாதனை
2024 க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின்படி, நாடு தழுவிய அளவில் பல்கலைக்கழக நுழைவுக்கான மாணவர்களின் மருத்துவ பீட விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இலங்கையில் 18 பாடசாலைகளில் மாத்திரமே இரட்டை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள், சிறப்பு தேர்ச்சியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர். அதில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகிய மாணவர்களில் சிறப்பு தேர்ச்சியில் தெரிவாகிய மாணவர்களின் சதவீதம் 85.19 எனும் அதிகூடிய அளவை பதிவு செய்துள்ளது. அதேவேளை, கொழும்பு ஆண்கள் பாடசாலையான ரோயல் கொலேஜ் மற்றும் […]