பிரதேச சபையின் பட்ஜெட் தோல்வி
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தில் கீழுள்ள பிரதேச சபையின் பட்ஜெட் தோற்கடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள தொடங்கொட பிரதேச சபையின் முதல் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவு வியாழக்கிழமை (13) தோற்கடிக்கப்பட்டது. வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் கிடைத்தன.
மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடி சென்றவர் கைது
சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் வியாழக்கிழமை (13) காலை கைது செய்யப்பட்டுள்ளார். மரைன் பொலிஸார் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை (13) காலை ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கடற்கரையில் சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியது தெரியவந்துள்ளது. அவரை கைது செய்த மரைன் […]
வீதியோரத்தில் இருந்து கடவுச்சீட்டுகள் மீட்பு
புல்மோட்டை 13வது தூண் பகுதியில் வீதியோரத்தில் கைவிடப்பட்டிருந்த இலங்கையர்களுக்குச் சொந்தமான ஏழு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை புல்மோட்டை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த கடவுச்சீட்டுகள் தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புதன்கிழமை (12) மதியம் இந்த கடவுச்சீட்டுகளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த கடவுச்சீட்டுகளை யாரோ இந்த இடத்தில் விட்டுச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த கடவுச்சீட்டுகளை இந்த இடத்தில் யார் விட்டுச் சென்றனர் என்பதைக் கண்டறிய புல்மோட்டை பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
வளமான விளைநிலங்கள் உவராகும் தன்மை அதிகரிக்கிறது!
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் இரசாயன உரப்பாவனையால் வளமான விளைநிலங்கள் உவராகும் தன்மை அதிகரித்து வருவதாக விவசாய ஆராய்ச்சி பிரிவின் மேலதிக பணிப்பாளர் எஸ் ராஜேஸ்கண்ணா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டு வரும் பெருந்தொகையான காணிகளில் தற்போது உவர் தன்மை அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பூநகரி அக்கராயன்குளம் தட்டுவன்கொட்டி கண்டாவளை ஊரியான் போன்ற பகுதிகளில் இவ்வாறு விவசாய நிலங்கள் மிக வேகமாக உவராகி வருகின்றன. ஏற்கனவே கானப்பட்ட உவர் நீர் தடுப்பணைகள் அழிவடைந்துள்ளமை […]
டிசம்பரில் ‘லங்கா ரைட் 2025’ சைக்கிள் ஓட்டப் போட்டி
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒழுங்கு செய்யப்படும் ‘லங்கா ரைட் 2025’ சைக்கிள் ஓட்டப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 18 முதல் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. டிசம்பர் 18ஆம் திகதி லேக் ஹவுஸ் வளாகத்தில் தொடங்கி, பேலியகொடை பொலிஸ் நிலையம் வரை சென்று அங்கிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் இப்போட்டியின் முதல் நாளில் 106 கி.மீ. பயணித்து கன்னொருவயை வீரர்கள் அடைவார்கள். இரண்டாம் நாள் கண்டியில் இருந்து அனுராதபுரம் வரையிலும், மூன்றாம் […]
கடற்றொழில் துறையின் மேம்பாடு தொடர்பாக முக்கிய கலந்துரையாடல்
இலங்கை கடற்றொழில் துறையின் (Cold Chain) மேம்பாடு தொடர்பாக உலக வங்கி குழுவும் நெதர்லாந்தின் Wageningen பல்கலைக்கழக நிபுணர்களும் இணைந்து கடற்றொழில் அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, தற்போது இலங்கையில் 60 அடிக்கு குறைவான பெரும்பாலான பலநாள் கடற்றொழில் டகுகள் பனிக்கட்டியை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. கப்பலிலுள்ள குளிரூட்டும் (refrigeration) அமைப்புகள் பெரும்பாலும் இல்லை. அதிகளவு பனிக்கட்டியை ஏற்றிச் செல்ல வேண்டியதனால் படகுகளின் எடை மற்றும் எரிபொருள் நுகர்வு அதிகரிக்கிறது. இதனால் மீன்களின் தரம் […]
டெல்லியில் வெடிப்பு ஏற்பட முன் வெளியிடப்பட்ட சுவரொட்டி!
13 பேர் உயிரிழந்த டெல்லி வெடிப்பு சம்பவத்திற்கு இருபத்தி ஆறு நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தடைசெய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது குழுவின் துண்டுப்பிரசுரம் ஒன்று ஸ்ரீநகருக்கு அருகிலுள்ள நவ்காமில் வெளியிடப்பட்டுள்ளது. குறி்த துண்டுபிரசுரமானது, காஷ்மீரின் இந்தியப் படைகள் மற்றும் உள்ளூர்வாசிகளை எச்சரிக்கும் வகையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 1990கள்-2000களில் இதுபோன்ற தீவிரவாத எச்சரிக்கைகள் பொதுவாக விடுக்கப்பட்டு வருவதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், 2019இல் இந்தியா – காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்ததிலிருந்து இது குறைந்து விட்டதாக […]
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மக்கள் சேவைக்கு அவமானத்தை ஏற்படுத்திய செல்வம் அடைக்கலநாதன் பதவி விலக வேண்டும்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமை பதவியிலிருந்து விலக மக்கள் சேவை என்பதற்கு அவமானத்தை ஏற்படுத்திய செல்வம் அடைக்கலநாதனுக்கு நெருக்குவாரம் கொடுக்கும் வகையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் பலர் ‘போர்க் கொடி’ பிடித்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு இணங்கியுள்ளார். எனவே வவுனியாவில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின்தலைமைக் குழு கூட்டத்தில், செல்வம் உடனடியாக தலைமை பதவியிலிருந்து விலக வேண்டுமென உறுப்பினர்கள் பலர் கடுமையாக வலியுறுத்தினர். இதன்போதே தனது பதவியை ஜனவரி மாதம் […]
மக்களின் பணத்தில் இனவாதக் குழுக்களுக்கு சம்பளம் வழங்கியது கடந்த அரசாங்கம் – ஜனாதிபதி
மக்களின் பணத்தில் இனவாதத்தை தூண்டுபவர்களுக்கு கடந்த அரசாங்கங்களில் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிப்படுத்தியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் 36 ஆவது கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த தினம் நேற்று (13.11.2025) விகாரமாதேவி திறந்த வெளியரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மேலும் அது தொடர்பில் உரையாற்றிய அவர், அண்மையில் இராணுவ புலனாய்வாளர்களை சந்தித்து கலந்துரையாடிய போது, மக்களின் வரிப்பணத்தில் அதாவது ஒரே வங்கி கணக்கில் இரு வேறுப்பட்ட இனவாத […]
புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்து விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
லிபியா நாட்டிலிருந்து புறப்பட்ட புலம்பெயர்வோர் படகொன்று கடலில் கவிழ்ந்ததில் 42 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக ஐ.நாவின் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இம்மாதம் 3ஆம் திகதி, வட ஆப்பிரிக்க நாடான லிபியா நாட்டிலுள்ள Zuwara என்னுமிடத்திலிருந்து 47 ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம் 49 பேருடன் புலம்பெயர்வோர் படகொன்று புறப்பட்டுள்ளது. சில மணி நேரத்துக்குள் படகின் இயந்திரம் பழுதானமையால் கடல் அலையில் சிக்கி படகு கவிழ்ந்துள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது. இந்நிலையில், லிபியா அதிகாரிகள் நடத்திய […]