மேடையிலேயே சரிந்து விழுந்த ரஷ்ய ஏஐ மனித ரோபோ
மாஸ்கோவில் நடந்த அறிமுக நிகழ்ச்சியின் போது மேடையில் தடுமாறி கீழே ரஷ்யாவின் முதல் மனித உருவிலான ஏ.ஐ. ரோபோ சரிந்து விழுந்தது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ரஷ்யாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோ பொதுமக்கள் முன்னிலையில் மேடையிலேயே தடுமாறி விழுந்தது. மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில், AIdol என்று பெயரிடப்பட்ட மனித உருவிலான ஏ.ஐ., ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டது. ‘ராக்கி’ திரைப்படத்தின் இசை பின்னணியில் ஒலிக்க, ரோபோ மிகவும் மெதுவாக மேடையில் நடந்து […]
பிபிசியின் செயற்பாட்டால் அதிபர் டிரம்ப் மிகவும் கவலை அடைந்தார்!
தனது உரையை பிபிசி வேண்டுமென்றே மற்றும் நேர்மையற்ற முறையில் திருத்தியதால் அதிபர் டிரம்ப் மிகவும் கவலைப்பட்டார் என அமெரிக்க வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். இது குறித்து, பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் நிருபர்களிடம் கூறியதாவது: பிபிசி ஒரு இடதுசாரி பிரசார இயந்திரம். துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் வரி செலுத்துவோரால் மானியம் வழங்கப்படுகிறது என அதிபர் டிரம்ப் மிக தெளிவாக கூறியுள்ளார். இது பிரிட்டன் மக்களுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதிபர் உரை நேர்மையற்ற முறையில் […]
உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண் – உலக வங்கி நிபுணர் கருத்து
சர்வதேச அளவில் ஏற்படும் பொருளாதார பிரச்னைகளின் பாதிப்பை, இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு சந்தை தான் குறைத்து விடுவதாக, உலக வங்கியின் முதன்மை பொருளாதார நிபுணர் ஆரேலியன் க்ரூஸ் தெரிவித்துள்ளார். இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரி விதிப்பால், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. இந்நிலையில், இந்திய பொருளாதாரம் உள்நாட்டு நுகர்வையே அதிகம் சார்ந்திருப்பதாகவும், ஏற்றுமதியை அதிகம் நம்பியில்லை என்ற பொருள்படும் வகையில் ஆரேலியன் க்ரூஸ் பேசியுள்ளார். அவர் […]
ஷேக் ஹசீனாவுக்கு 17ஆம் திகதி தண்டனையை அறிவிக்கிறது சர்வதேச குற்ற தீர்ப்பாயம்
மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வழக்கில், வரும் நவ.,17ம் தேதி அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் தண்டனையை அறிவிக்க உள்ளது. கடந்தாண்டு வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் […]
2026ஆம் ஆண்டில் ஜப்பான் செல்லவுள்ள இலங்கையருக்கு…
2026ஆம் ஆண்டில் ஜப்பான் மேற்கொள்ளவுள்ள விசா கட்டண உயர்வால் கடுமையான பயண சவாலை இலங்கை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்படுகின்றது. அது மாத்திரமன்றி, வியட்நாம், இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளுக்கு இந்த சிக்கல் ஏற்படும் எனவும் கூறப்படுகின்றது. கிட்டத்தட்ட ஐந்து தசாப்தங்களில் முதல் முறையாக, ஜப்பான் விசா கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளது. இது சர்வதேச வருகையின் சாதனை அதிகரிப்புக்கு பதிலளிக்கும் விதமாகும். இது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் பிரபலமான சுற்றுலா தலங்களில் பெரும் […]
கொக்குவிலில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பொலிஸார் யாழ்ப்பாணம் கொக்குவில் கலட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 50 போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20, 21, 22 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஜனவரி 26 செங்கோட்டையில் தாக்குதல் நடத்தத் திட்டம்?
புதுடெல்லி செங்கோட்டையில் கடந்த ஜனவரி 26ம் திகதியே தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ”கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜம்மிலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, அவர் தாக்குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை ஆய்வு செய்தோம். அப்போது அந்த செல்போனில் அழிக்கப்பட்ட […]
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெங்காய மாலைகளை அணிந்து கூட்டத்தில் பங்கேற்பு
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெங்காய மாலைகளை அணிந்து கூட்டத்தில் gq;Nfw;G தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழு செவ்வாய்க்கிழமை (11) அன்று நடைபெற்ற பிரதேச சபையின் பொதுக் கூட்டத்தில், உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகளின் அறுவடைக்கு நியாயமான விலை கிடைக்காததை எதிர்த்து வெங்காய மாலைகளை அணிந்து கலந்து கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் வெங்காய மாலைகளை அணிந்துகொண்டு தம்புள்ளை பிரதேச சபை வளாகத்திற்கு பேரணியாகச் சென்று, “விவசாயி மகன் ராஜாவாகிவிட்டான், […]
மேலும் இருவர் கொழும்பில் கைது
கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டிற்கு உதவிய குற்றச்சாட்டில் மேலும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்றையதினம் குறித்த (13) கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர், இந்தக் குற்றத்தைச் செய்ய துப்பாக்கிதாரி வந்த காரின் சாரதியாக இருந்தவர் என்றும், சந்தேகநபரான பெண், இந்தக் குற்றத்தைச் செய்ய சந்தேகநபர்களுக்குத் தங்குமிட வசதிகளை வழங்கியவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் சந்தேகநபருக்கு 27 வயது எனவும், […]
தங்காலையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருளும் அதன் பின்னணியும்
தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை குறித்து அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இவை இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பியதாகக் கூறப்படும் ‘ரண் மல்லி’ என்ற நபர், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கடாவின் போதைப்பொருளை நாட்டுக்குள் விநியோகித்தவர் என்றும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் […]