போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவத்தினரின் தலையீடு இன்றி மேற்கொள்ள முடியாது

நாட்டின் போதைப் பொருள் வர்த்தக நடவடிக்கைகளுடன் முன்னாள் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கம் போதைப் பொருளுக்கு எதிராக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஆதரவினை வழங்குகின்றோம் அதில் எவ்வித மாற்று கருத்தும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதை பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை ராணுவத்தினரின் தலையீடு இன்றி மேற்கொள்ள முடியாது நான் அதனை மீண்டும் வலியுறுத்தி கூறுகின்றேன் என […]

நீதிமன்றத்தில் சரணடைய வந்தார் துசித ஹல்லொலுவ

பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளரான துசித ஹல்லொலுவ, நீதிமன்றத்தில் சரணடைவதற்காக வருகை தந்துள்ளார். நாரஹேன்பிட்டி பகுதியில் தாம் பயணித்த வாகனம் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, போலியான முறைப்பாடு செய்த சம்பவம் தொடர்பில் துசித ஹல்லொலுவ சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று (13) விசாரணைக்கு வந்தபோது, சந்தேக நபரான துசித ஹல்லொலுவ நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. இதையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்திருந்தார்.

விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் அரசியல் இலக்குகள் குறித்து உவிந்து விஜேவீர கடும் விமர்சனம்!

‘இரண்டாம் தலைமுறை’ கட்சியின் தலைவர் உவிந்து விஜேவீர (ஜேவிபி முன்னாள் தலைவர் ரோஹண விஜேவீரவின் மகன்), இன்று கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் இலங்கையின் விவசாயிகள் எதிர்கொள்ளும் கடும் நெருக்கடிகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அரசாங்கத்தின் குறைபாடுள்ள கொள்கைகள் காரணமாக விவசாயிகள் மீண்டும் தெருக்களில் போராடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். விவசாயிகளின் நெருக்கடி மற்றும் அரசின் பேச்சுவார்த்தை முறை: உவிந்து விஜேவீர, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய விவசாயிகள் சமீபத்தில் […]

புனித யாத்திரையாக ஐயப்ப யாத்திரை அரசால் பிரகடனம்!

ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அரசால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்த ஐயப்ப யாத்திரையைப் புனித யாத்திரையாகப் பிரகடனப்படுத்தும் கோரிக்கை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளுக்கிணங்க, புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி ஆலோசனை பிரகாரம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பரிந்துரைக்கமைய அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. அதையடுத்து அதற்கான […]

உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்

உள்ளூராட்சிமன்றங்கள் உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். உள்ளூர் கடன்கள் அபிவிருத்தி நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் கௌரவ தவிசாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு கிளிநொச்சியில் அமைந்துள்ள முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி அலகில்  நேற்று வியாழக்கிழமை (13.11.2025) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநர் உரையாற்றியபோது, “வடக்கு மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தங்கள் பிரதேசங்களுக்கு முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டியது […]

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ்

புதிய தேர்தல் ஆணையாளர் நாயகமாக ரசிக பீரிஸ் இன்று (14) முதல் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். தேர்தல் ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய சமன் ஸ்ரீ ரத்நாயக்க நேற்று(13) முதல் தனது பதவியிலிருந்தும் அரச சேவையிலிருந்தும் ஓய்வு பெற்றார். அரச துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் தான் பதவி விலகுவதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிரந்தர நியமனங்கள் கிடைப்பதற்காக நான் குரல் கொடுத்தேன். ஆனால், நியமனங்களை நான் யாருக்காகவும் கோரியதில்லை என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதில் அரச தரப்பு எம்.பி. ஒருவர், தனது அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும், தன்னுடைய அனுமதியுடனுமே நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார் என்று ஊடகங்களில் வெளியான செய்திக்கு மறுப்புத் தெரிவித்து, ரஜீவன் இதனை குறிப்பிட்டுள்ளார். […]

தலாவ விபத்து; கவலைக்கிடமான நிலையில் இருவர்

அநுராதபுரம் – தலாவ சுனாமி சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளும், மோட்டார் வாகனமும் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த இருவர் தற்போது அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அநுராதபுரம் திசையிலிருந்து தலாவ நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் திடீரென பிரதான வீதியில் வைத்து மீண்டும் அனுராதபுரம் நோக்கி ‘யு-டர்ன் எடுத்தபோது, ​​பின்னால் வந்த […]

தட்டுவன் கொட்டியில் பெண்ணின் சடலம்

கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடத்துக்குப் பின்னால் பெண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்வம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருமதி பரமசாமி கிருஸ்ணபவானி (தவம்)

யாழ். மானிப்பாய் பொன்னம்பலம் வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவுகம் கொண்ட பரமசாமி கிருஸ்ணபவானி அவர்கள் 14-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் செல்லம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பரமசாமி(பாலசிங்கம் வாகன விற்பனையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான காங்கேசு, அன்னலட்சுமி, சிவபாக்கியம், சரஸ்வதி மற்றும் நவரட்ணம்(கனடா), கோகிலாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பரமேஸ்வரி(லண்டன்), சிவபாக்கியம்(லண்டன்), தர்மராஜா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற […]