தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார்?
சுந்தர் சி தலைவர் 173 படத்தை தான் இயக்கப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து தலைவர் 173 படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்கள் விவாதித்து கொண்டு இருக்கின்றனர். இரு இயக்குனர்களின் பெயர்கள் தான் தலைவர் 173 படத்திற்காக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சி இணைகின்றனர் என கடந்த ஒரு சில மாதங்களாக சொல்லப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த வாரம் இதை அதிகாரபூர்வமாகவே அறிவித்தனர். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல் தலைவர் 173 […]
ஷங்கர் இயக்கவிருக்கும் வேள்பாரி
இயக்குனர் ஷங்கர் கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு வேள்பாரி என்ற திரைப்படத்தை தான் இயக்கவுள்ளார் என சொல்லப்படுகின்றது. எந்திரன் எப்படி தனக்கு ஒரு கனவு படமாக இருந்ததோ அதுபோல வேள்பாரி திரைப்படமும் தனக்கு ஒரு கனவு படம் தான் என ஷங்கர் கூறியிருக்கின்றார். எனவே தற்போது வேள்பாரி கதையை படமாக எடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் ஷங்கர். முதலில் வேள்பாரி படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது. பிறகு பாலிவுட் நடிகர்களில் ஒருவர் வேள்பாரி படத்தில் நடிக்க […]
ரஜினி குஷ்பு கூட ஆடலாமா?
தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி. விலகியது குறித்து தன்னை வைத்து மோசமாக ஒருவர் ட்வீட் போட்டதை பார்த்த குஷ்பு அவருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். குஷ்புவின் பதில் பலரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டது. ரஜினி பட வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தில் இருந்த சுந்தர் சி.யிடம் இருந்து இப்படியொரு அறிவிப்பு வரும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. அதனால் சுந்தர் சி. வெளியிட்ட அறிக்கையை பார்த்த சினிமா ரசிகர்களால் அவர்களின் கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை. இந்நிலையில் சிலரோ குஷ்புவால் […]
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கும் சட்டமூலத்தை பகிரங்கப்படுத்துங்கள்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழுவானது, நீதி அமைச்சரிடம் கையளித்துள்ள அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் பகிரங்கப்படுத்துமாறு அரசாங்கத்தையும் குறிப்பாக நீதி அமைச்சரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என சர்வ ஜன நீதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இன்றைய தினம் (14) சர்வ ஜன நீதி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்காக நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையையும் வரைவு சட்டமூலத்தையும் நீதி […]
ரஜரட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்கிறது
ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பேரவையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வேட்பாளர்களில் ஒருவரை உடனடியாக பல்கலைக்கழகத்தின் நிரந்தர துணைவேந்தராக நியமிக்கக் கோரி ரஜரட்ட பல்கலைக்கழக ஆசிரியர்கள் விரிவுரையாளர்கள் சங்கம் (RUTA) பதினைந்து நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தத்தில் இன்றும் (14) ஈடுபட்டுள்ளது. பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய கடந்த 4ஆம் திகதி இந்தப் பிரச்சினைக்கு சாதகமான தீர்வினை வழங்குவதாக உறுதியளித்தபோதிலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று விரிவுரையாளர்கள் கூறுகின்றனர். இந்த விடயத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் […]
2026ஆம் ஆண்டுக்கான பாதீடு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் நிறைவேற்றம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு தொடர்பான அமர்வு தவிசாளர் வேலாயுதம் கரிகாலன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இடம்பெற்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆளுகையில் உள்ள இந்த சபையின் முதலாவது பாதீடாக இது அமைந்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வருமானம் கூடிய சபைகளில் ஒன்றாக காணப்படுகின்ற இந்த சபையின் உடைய பாதீடு இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் உறுப்பினர் ச.சத்தியசுதர்சன் அவர்களால் ஏற்கனவே சின்னச்சாளம்பன் […]
இஸ்ரேலில் இலங்கையர் கொலை

இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக சென்ற இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் நிர்மாணத்துறை வேலைக்காக இஸ்ரேலுக்கு சென்ற 38 வயது இலங்கையரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவரால் அவர் கொல்லப்பட்டதாக இலங்கைக்கான இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நேற்று இரவு இந்த கொலை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த இலங்கையரின் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. […]
தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு குறித்து செந்தில் தொண்டமான் கருத்து
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட விடயம் தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) தலைவர் செந்தில் தொண்டமான் அவர்கள் நேற்று ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தார். சம்பள உயர்வை வரவேற்ற அவர், இதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிற்சங்கத்தின் ஆதரவு நிலைப்பாடு குறித்தும் விளக்கமளித்தார். வரவுசெலவுத் திட்ட ஒதுக்கீட்டை வரவேற்பு தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூ. 200 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டமை குறித்து கருத்து தெரிவித்த செந்தில் தொண்டமான், […]
பெற்றோரை பராமரிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம்
திருமணத்தைப் பற்றி யோசிக்காமல் பெற்றோரை பராமரிப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பிள்ளைகளுக்கு ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான பிள்ளைகளுக்கு 26 வயதை எட்டிய பின்னர் ஓய்வூதியம் வழங்க சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபயரத்ன நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். வயதான பெற்றோரைப் பராமரிப்பதற்காக பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பது ஒரு சிறப்பு விடயம் எனவும், இதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை […]
வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் 7ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதேவேளை, மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.