வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ள துயிலும் இல்லங்களை மக்களிடம் கையளியுங்கள்!

“வடக்கு மற்றும் கிழக்கில் இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ள சகல மாவீரர் துயிலும் இல்லங்களையும் அங்குள்ள மக்களிடம் கையளித்து, அந்த இடங்களை அங்கீகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார். மாவீரர் துயிலும் இல்லங்கள் மக்களிடம் கையளிக்கப்படும் பட்சத்தில் அவற்றைப் பராமரிக்கும் செலவை தமிழர்களாகிய நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் […]
போதைப்பொருள் சுற்றிவளைப்பு 16000இற்கும் மேற்பட்டோர் கைது!

நாடு முழுவதும் ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 13 ஆம் வரை மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது 16 ஆயிரத்து 738 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றிவளைப்பில் நாடளாவிய ரீதியில் 16 ஆயிரத்து 915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் 110 கிலோ 556 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 600 கிலோ 947 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 10 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 458 கிலோ 216 கிராம் கஞ்சா போதைப்பொருளும் […]
ஆர்ப்பாட்ட பேரணியில் ஐ.தே.கவும்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக்குழு அனுமதி தெரிவித்துள்ளது.
பிள்ளையானை கண்காணிக்க சென்ற கோட்டை நீதவான்

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 9 சந்தேக நபர்களைக் கண்காணிக்க கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமாரகே சென்றுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு விஜயம் மேற்கொண்டு குறித்த 9 பேர் குறித்து கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாகக் கூறப்படும் வழக்கறிஞரையும், பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் சந்தேக நபர்கள் குழுவையும் நீதவான் […]
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் நொறுங்கியது

மாமல்லபுரம் அருகே பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உப்பளம் பகுதியில் சிறிய ரக பயிற்சி விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானம் தொழற்சாலைக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, விபத்துக்குள்ளானது. தாம்பரம் விமானப்படை தளத்துக்கு சொந்தமானதாக கருதப்படும் இந்த விமானத்தில் இருந்த 3 பேர் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பியதாக தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. […]
பாதாள உலக “டுபாய் தனுஷ்க”வின் சகாக்கள் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “டுபாய் தனுஷ்க” என்பவரின் சகாக்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு வெல்லம்பிட்டி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 200 கிராம் 590 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சர்ச்சையில் சிக்கிய அதிபர் தொடர்பில் வெளியான புதிய தகவல்
அநுராதபுரம் – எப்பாவல பிரதேசத்தில் போதைப்பொருள் சர்ச்சையில் சிக்கியுள்ள பாடசாலை அதிபர் இலங்கை அதிபர் சேவையின் தரப்படுத்தப்பட்ட அதிகாரி அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அதிபர் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் இலங்கை தொழிற்சார் அதிபர்கள் சங்கம் இன்று (14) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிபர் தொடர்பில் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அநுராதபுரம் – எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் ஒரு கிலோ கிராமுக்கு அதிகமான ஹெரோயினுடன் கடந்த மாதம் […]
சந்தனமடு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முற்றுகை
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடங்களை சுற்றிவளைத்து தடுக்கும் முகமாக சந்திவெளி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட சித்தாண்டி சந்தனமடு பகுதி அண்மித்த இடங்களில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற சுற்றி வளைப்பு தேடுதலில் சந்தேகத்திற்கு இடமான 4 பேர் தப்பியோட்டம், 2 வரல்களில் 80 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படும் 2 தகர வரல்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டது. சித்தாண்டி சமூகமட்ட இளைஞர்கள் மற்றும் சந்திவெளி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் […]
ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் கைது!

மதுபோதையில் கடமையில் ஈடுபட்டிருந்த ரயில் கடவை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளால் நேற்று வியாழக்கிழமை (13) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார். ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி – உத்தராகன்த பகுதியில் உள்ள ரயில் கடவைக்கு அருகில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு கொம்பனிவீதி ரயில் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் ஆவார். இது தொடர்பில் ரயில்வே திணைக்கள பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித் – விஜய் பற்றி இயக்குனர் பேரரசு
பல ஹிட் படங்களை இயக்கியிருப்பவர் தான் பேரரசு. அவர் விஜய் மற்றும் அஜித் என இருவரையும் வைத்து படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையே இருக்கும் வித்யாசங்கள் பற்றி இயக்குனர் பேரரசு பேசியிருக்கிறார் விஜய் மற்றும் அஜித் என இருவரையும் வைத்து ஹிட் கொடுத்த ஒரு சில இயக்குனர்களில் பேரரசுவும் ஒருவர். விஜய்யை வைத்து திருப்பாச்சி என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் பேரரசு. அப்படத்தின் வெற்றி பற்றி அனைவரும் அறிந்தது தான். […]