கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோவிற்கு முதல்முறையாக ரெட்கார்ட்

போர்த்துகல் கால்பந்துவீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 22 வருட கால்பந்து வாழ்க்கையில் முதன் முதலாக அவருக்கு ரெட்கார்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், 2026 பிபா கால்பந்து உலக கோப்பையில் ரொனால்டோவிற்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்றையதினம்(13) நடைபெற்ற 2026 பிபா கால்பந்து உலக கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய போட்டி டப்லினில் நடைபெற்றது. இதில், 2-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது, […]

பருத்தித்துறை நகரசபையின் புதிய சந்தை குறைபாடுகள்

புதிய சந்தையில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நேற்றையதினம் வியாபாரிகள் பருத்தித்துறை நகரிலுள்ள நவீன சந்தை தொகுதிக்கு சென்றிருந்த நிலையில், நேற்று பருத்தித்துறை தவிசாளர் தலமையில் 8 நகரசபை உறுப்பினர்களுடன் பருத்தித்துறை வர்த்தகர்களும் இடையில் அவசர கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது. அதில் வர்த்தகர்கள் புதிய சந்தைக்கு சென்று வியாபாரம் செய்யமாட்டோம் என விடாப்பிடியாக நின்ற நிலையில் இன்று பிற்பகல் 12 மணியுடன் புதிய சந்தையை மழை காலம் முடியும்வரை தற்காலிகமாக நவீன சந்தை தொகுதியில் இயங்கவுள்ளது. இதேவேளை, யாராவது […]

தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டியவர் உயிரிழப்பு!

தற்கொலை செய்யப்போவதாக மனைவியை மிரட்டியவர், கழுத்தில் போடப்பட்ட சுருக்கு இறுகி மூச்சுத் திணறல் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெள்ளிக்கிழமை (14) அதிகாலை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் தெற்கு, உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேந்தன் (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், இவர் கடந்த எட்டாம் திகதி இரவு மது போதையில் வீட்டுக்கு வந்து மனைவி பிள்ளைகளுடன் முரண்பட்ட நிலையில் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் […]

லண்டனில் 100 ஆண்டு பழமையான ‘வீராசாமி’ உணவகத்தை மூடும் நிலை?

‘லண்டனில், 100 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், ‘வீராசாமி’ என்ற இந்திய உணவகத்தை மூடும் நிலைக்கு தள்ளக்கூடாது’ என, பிரிட்டனைச் சேர்ந்த பிரபல சமையல் கலைஞர்கள் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் மையப்பகுதியில் உள்ள ரீஜென்ட் ஸ்ட்ரீட்டில், 1926-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, ‘வீராசாமி’ உணவகம். இது, இந்தியா — பிரிட்டன் இடையிலான உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் விதமாக, 100 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. ராணி இரண்டாம் எலிசபெத், மஹாத்மா காந்தி, நேரு, இந்திரா, […]

புவி கண்காணிப்பு; மூன்று செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் ஏவுகிறது ஈரான்

உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ‘பயா, ஜாபர், கோவ்சர்’ ஆகிய மூன்று புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களை, அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் விண்ணில் ஏவ திட்டமிட்டு உள்ளது. இது குறித்து, ஐ.எஸ்.ஏ., எனப்படும் ஈரான் விண்வெளி அமைப்பின் தலைவர் ஹசன் சலாரியே கூறியதாவது: பல ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகள் விதித்த பல்வேறு தடைகள் இருந்த போதும், […]

 உலக காப்புரிமை போட்டியில் சீனா தொடர்ந்து முன்னிலை

‘உலக நாடுகள், கடந்த, 2024ம் ஆண்டில் தாக்கல் செய்த மொத்த காப்புரிமை விண்ணப்பங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்டவை சீனா தாக்கல் செய்தவை’ என, டபிள்யு.ஐ.பி.ஓ., வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. டபிள்யு.ஐ.பி.ஓ., எனப்படும், உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2024ல் காப்புரிமை தாக்கல் செய்ததில், சீனா தொடர்ந்து முன்னிலை வகித்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. அறிக்கையின்படி, சீனா, 18 லட்சம் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளது. இவ்விண்ணப்பங்களில் பெரும்பாலானவை உள்ளூர் கண்டுபிடிப்பாளர்களிடம் இருந்து […]

நவம்பர் 21ஆம் திகதி ஆட்சிக் கவிழ்ப்புக்கான பேரணியா?

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவுள்ள பேரணியானது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்தரும் முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள எதிரணியின் பேரணி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நவம்பர் 21 ஆம் திகதி பேரணி வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும். இது ஆட்சிக் கவிழ்ப்புக்குரிய போராட்டம் அல்ல என்பதை மீண்டும் […]

மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகள் நல்லூரில் ஆரம்பம்

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து நல்லூரில் யாழ். மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளன. மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள நிலையில் குறித்த காணியில் ஆரம்ப கட்டப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போது யாழ். மாநகர மேயர், பிரதி மேயர், சபை உறுப்பினர்கள், முன்னாள் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர். நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக உள்ள […]

பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாகவும் வலுப்படுத்துங்கள் – சஜித் பிரேமதாஸ

பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில், சம்பந்தப்பட்ட தோட்ட நிறுவனம் ரூ.200 வையும், அரசாங்கம் ரூ.200 வையும் செலுத்தும் தீர்மானத்தற்கு வந்துள்ளது. துயர் நிறைந்த வாழ்க்கையை நடத்தி வரும் பெருந்தோட்ட சமூகத்தினருக்கு, இந்த ரூ.400 சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள எடுத்த தீர்மானம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த தொகையை மேலும் அதிகரிக்க வேண்டும். இதை விட அதிக ஒதுக்கீடு இதற்காக மேற்கொள்ளப்பட வேண்டும் என […]

புலி ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல் எனக்கும் என் குடும்பத்துக்கும் விடுக்கப்பட்டது – அருண் சித்தார்த்

சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளருமான அருண் சித்தார்த் தனக்கும் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் புலி ஆதரவாளர்களால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக தெரிவித்தார். இன்று அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நேற்றுமுன்தினம் 12/11/2025 இரவு சுமார் 10:40 மணியளவில் தனது கட்சி அலுவலகம் மற்றும் வீடு அமைத்துள்ள 238 கே. கே. எஸ் வீதி தாவடி எனும் முகவரிக்கு இரண்டு வாகனங்களில் […]