ஒன்டாரியோ மாகாணத்தில் மிசிசாகா வீடொன்றில் தீ; ஒருவர் பலி

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரின் குக்ஸ்வில் (Cooksville) பகுதியில்  ஏற்பட்ட குடியிருப்பு தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேர்த் சேர்விஸ் வீதி மற்றும் அஸ்டா டிரைவ் அருகிலுள்ள கட்டிடத்தில் தீ பரவியதாக பீல் போலீஸ் தெரிவித்துள்ளது. கட்டிடத்தின் முதல் தளத்தில் கடும் புகையும் தீயும் பரவியிருந்தது எனவும் எங்கள் குழுவினர் விரைவாக தீயை கட்டுப்படுத்தினர் எனவும் மிசிசாகா தீயணைப்பு மற்றும் அவசர சேவை (MFES) பிரிவின் பிளாட்டூன் தலைவர் […]

கனடிய பொலிஸார் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்!

கனடாவின் ஹால்டன் பிராந்திய காவல் துறை (Halton Regional Police Service) அவசரமற்ற தொலைபேசி அழைப்புகளை நிர்வகிக்க தானியங்கி செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. 911 அவசர அழைப்புகள் தொடர்ந்தும் மனித முகவர்கள் (live agents) மூலம் மட்டுமே பராமரிக்கப்படும் எனவும், ஆனால் அவசரமற்ற அழைப்புகள் இனி “SARA (Smart Answering Routing Assistant)” எனப்படும் நுண்ணறிவு குரல் உதவியாளர் மூலம் நிர்வகிக்கப்படும் எனவும் வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. அழைப்பாளர்களிடம் சில குறுகிய கேள்விகள் கேட்டு, […]

மனைவியை கொல்ல முயன்ற ஐரோப்பா வாழ் கணவன் கைது ; இலங்கையில் சம்பவம்

மாத்தறை திக்வெல்ல பிரதேசத்தில் தனது இலங்கை மனைவியை காரில் ஏற்றிச் செல்ல முயன்றதாக சந்தேகத்தின் பேரில், இத்தாலிய நாட்டவர் மற்றும் அவரது ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைப் பெண் வழங்கிய முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளில், மனைவி மீது காரை ஏற்றி கணவன் கொல்ல முயன்றது தெரியவந்ததாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த தம்பதி திக்வெல்ல பகுதியில் […]

இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை?

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்திருந்தாலும் அந்தச் சம்பவங்களால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வின்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “நாட்டில் உளவுத்துறை அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் பாதுகாப்புப் பிரச்சினை இல்லை. இலங்கைக்கு இது போன்ற அச்சுறுத்தல் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இலங்கையின் உளவுத்துறை தீவிரமாக உள்ளது. நமது பாதுகாப்புத்துறை, குறிப்பாக ஆயுதப் […]

விசேட மருத்துவர்கள் நாட்டை விட்டு அதிகமாக வெளியேறுவதால் சிக்கல்!

ஒவ்வொரு வருடமும் சராசரியாக 25 விசேட மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால், நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன என்று மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்கள் சங்கக் கூட்டணியின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்ஜீவ எச்சரித்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளியான ஓர் அறிக்கையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை ஓராண்டில் மட்டும் 24 விசேட மருத்துவர்கள் சுகாதார சேவையை விட்டு வெளியேறியுள்ளனர். தேசிய சுகாதாரத் […]

கிட்டு பூங்காவில் ஆரம்பமாகும் கார்த்திகை வாசம் நிகழ்வு!

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு நடாத்துகின்ற ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நல்லூர் கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) வெள்ளிக்கிழமை (14.11.2025) பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இத்தொடக்க விழாவில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவன் கௌரவ விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணியின் துனைச் செயலாளர் தம்பிராசா யுகேஸ் தலைமையில் நடைபெறவுள்ள இத் தொடக்க நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் […]