இடிந்து விழுந்த ஹாங்கி பாலம்
தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இருந்து திபெத்தை இணைக்கும் வகையில் பாலம் கட்டப்பட்டது. ஹாங்கி என்று பெயரிடப்பட்ட அந்த பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இந்த நிலையில் திபெத்துடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஷுவாங்ஜியாங்கோ நீர்மின் நிலையத்தில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து 758 மீட்டர் […]
கனடாவின் பீல் பிராந்தியத்தில் துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்புடையவர் கைது
கனடாவின் பீல் பிராந்தியத்தில் (Peel Region) நடந்த இரு கப்பம் கோரல்களுடன் (extortion)-சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடுகள் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொரு சந்தேகநபர் இன்னும் தேடப்பட்டு வருகிறார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் அக்டோபர் 26 அன்று கலிடன் (Caledon) பகுதியில் உள்ள ஓல்ட் ஸ்கூல் ரோடு மற்றும் கிரெடிட்வியூ ரோடு அருகே, ஹைவே 10-இன் மேற்கு பக்கத்தில் நடைபெற்றது. அந்த நாளில் அதிகாலை 3 மணிக்கு முன், வெள்ளி நிற பி.எம்.டபிள்யூ […]
கனடியர்கள் விடுமுறை கால செலவுகளை கட்டுப்படுத்தத் தீர்மானம்!
கனடியர்கள் விடுமுறை கால செலவுகளை வெகுவாக குறைப்பதற்கு தீர்மானித்துள்ளனர். இந்த ஆண்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, கிறிஸ்துமஸ் விடுமுறை காலச் செலவுகளை பெரிதும் குறைக்கும் என புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஹரிஸ் என்ட் பார்ட்னர்ஸ் Harris & Partners என்ற நிதி ஆலோசனை நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பின் படி, பெரும்பாலான கனேடியர்கள் இந்த ஆண்டு எளிமையான கிறிஸ்துமஸ் கொண்டாடத் தயாராகியுள்ளனர். 1,820 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 72 சதவீதம் பேர் இந்த ஆண்டில் […]
ஹிருணி விஜேசிங்க எம்.பியிடம் சுஜீவ சேனசிங்க மன்னிப்புக் கோரவேண்டும்!
ஹிருணி விஜேசிங்க எம்.பியிடம் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி சுஜீவ சேனசிங்க மன்னிப்புக் கோரவேண்டும் என லக்மாலி எம்.பி நாடாளுமன்றில் நேற்று (12.11.2025) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வரவு செலவுத்திட்டத்தின் நான்காம் நாள் விவாதத்தில் ஒழுங்குப் பிரச்சினை ஒன்றை முன்வைத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை சுஜீவ சேனசிங்க எம்.பி ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவை விழித்து உரையாற்றும் போது, அருகில் அமர்ந்திருந்த […]
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரைக்கு செல்பவர்களுக்கு எச்சரிக்கை
வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்பகுதிக்கு வரும் சுற்றுலாவாசிகள் கடலுக்குள் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வருபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு வடமராட்சி கிழக்கு பிரதேச மக்கள் கேட்டு நிற்கின்றனர். வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு அதிகளவான சுற்றுலாவாசிகள் நாளாந்தம் வருகை தந்து பொழுதை கழிப்பதுடன்,அதில் சிலர் கடல் விளையாட்டுக்களிலும் ஈடுபடுகின்றார்கள். மற்றும் சிலர் புகைப்படங்கள் எடுப்பது கடலில் குளிப்பது நீச்சல் அடிப்பது போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் […]
பேராறு நீர்த்தேக்க மீன்களை உண்பதை தவிர்க்கவும்!
பேராறு நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதை தவிர்க்குமாறும், அந்த மீன்களை உணவாக உட்கொள்வதை தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பாலேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் பெருமளவான மீன்கள் இறந்து ஒதுங்கி காணப்படுகின்றது. இதனையடுத்து அவர் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில, வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம், பேராறு நீர்த்தேக்கத்தில் மிக அதிகளவான மீன்கள் நேற்று மாலை (12) தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை […]
இந்த அரசு ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் காணிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை – தவிசாளர் சுகிர்தன்
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையிலும் மக்களின் காணிகள் விடுவிக்கப்படவில்லை என வலி வடக்கு தவிசாளர் சுகிர்தன் தெரிவித்துள்ளார். வலி வடக்கு பிரதேசசபையின் உள்ளூராட்சி வார இறுதி நாள் நிகழ்வும் விருது வழங்கலும் பன்னாலை வர்த்தலம் விநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது வலி வடக்கு பிரதேசமானது இராணுவ ஆக்கிரமிப்புக்குள் இருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்ட போதிலும் 20 சதவீதமான நிலங்கள் மக்கள் மீள் […]
கிளிநொச்சி மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாறவுள்ளது
பூநகரி கௌதாரி முனை பகுதியானது எதிர் காலத்தில் இலங்கையில் மிகப்பெரிய சுற்றுலா மையமாக மாற உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் கூட்டுறவு வார நிகழ்வும் முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரும் மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகருமான தி.இராசநாயகம் அவர்களது நினைவான கூட்டுறவு வார நிகழ்வும் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூத்த தலைவர்களை மதிப்பளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து […]
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கண்களைக் கட்டிக் கொண்டு கொழும்பு மேயர் நடைப்பயணம்
கொழும்பு மேயர் வ்ரே காலி பால்தசார் பார்வைக் குறைபாடுள்ளவர்கள் தினமும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு குழுவுடன் இணைந்தார். பார்வைக் குறைபாடுள்ளவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அனுபவித்து எடுத்துக்காட்ட மேயர் பால்தசார் கண்களை கட்டிக்கொண்டு கொழும்பில் ஒரு நடைப்பயணம் மேற்கொண்டார். அவருடன் இலங்கையின் முதல் பார்வைக் குறைபாடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வாவும் இருந்தார். “என் கண்கள் கட்டப்பட்டிருக்கின்றன, அதனால் பார்வை இல்லாமல் நகரத்தில் இருப்பது எப்படி இருக்கும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” […]
நியூஸிலாந்தின் புதிய பருவகால விசாக்கள் அறிவிப்பு!
நியூஸிலாந்தில் இரண்டு புதிய பருவகால விசா வகைகளுக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விசாக்களுக்கு இலங்கை, இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் விண்ணப்பிக்க முடியும். வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புக் காலங்களில் அதிக வாய்ப்புகளை வழங்கும் வகையில் இந்த அறிவிப்பினை நியூஸிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ளது. உலகளாவிய தொழிலாளர் பருவகால விசா, உச்ச பருவகால விசா ஆகிய இரண்டு புதிய விசா வகைகளும் […]