பாதுகாப்பு அச்சுறுத்தல் பாகிஸ்தானில் விளையாட முடியாது – இலங்கை வீரர்கள்
பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வரும் இலங்கை வீரர்கள், உடனடியாக நாடு திரும்ப முடிவு எடுத்துள்ளனர். 2009ம் ஆண்டு இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், கிரிக்கெட் வீரர்கள் பலத்த காயமடைந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, 10 ஆண்டுகளாக பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படாமல் இருந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு முதல் தான் பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் […]
‘மை டியர் சிஸ்டர் ‘ எனும் படத்தின் அறிமுக காணொளி வெளியீடு
தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான அருள்நிதி கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘மை டியர் சிஸ்டர்’ என பெயரிடப்பட்டு, அதன் அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மை டியர் சிஸ்டர்’ எனும் திரைப்படத்தில் அருள்நிதி, மம்தா மோகன் தாஸ், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார். சகோதர பாசத்தை மையப்படுத்தி கொமர்சல் […]
பிரபலத்தின் வாழ்வியலை விவரிக்கும் திரில்லராக ‘அன்கில்_123’
பொலிவுட் இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘அன்கில்_123’ எனும் திரைப்படம்- சமூக ஊடகத்தின் புகழ் வெளிச்சத்திற்கு ஆளான பிரபலத்தின் வாழ்வியலை விவரிக்கும் திரில்லராக தயாராகிறது என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் ‘ அன்கில்_123’ எனும் திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்- சங்கீதா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜெரார்டு ஃபெலிக்ஸ் இசையமைக்கிறார். சைக்காலஜிகல் திரில்லராக தயாராகும் […]
‘யெல்லோ’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு
‘பிக் பொஸ் ‘சீசன் 7 மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் அறிமுகமாகி, பிரபலமான நடிகை பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘யெல்லோ’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘யெல்லோ’ எனும் திரைப்படத்தில் பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், சாய் பிரசன்னா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், இயக்குநரும், நடிகருமான பிரபு சாலமன், லோகி உள்ளிட்ட பலர் […]
வழக்கைத் தொடர ஆலோசனை பெற முடியாத நிலையில் பிரதிவாதி 98 வயதான டெய்சி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷிதவுக்கு எதிரான வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான 98 வயதான டெய்சி ஃபோரஸ்ட், மறதி நோய் அல்லது டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், வழக்கைத் தொடர ஆலோசனை பெற முடியாது என்று அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் அனில் சில்வா நீதிமன்றத்தில் புதன்கிழமை(12) தெரிவித்தார். கங்கொடவில மாவட்ட நீதிமன்றம், அவரது மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்தபோது, அவர் தனது சொத்தை சுயாதீனமாகப் பயன்படுத்த முடியவில்லை என்றும், 2017 ஆம் ஆண்டில் வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டதாகவும் […]
பந்துவீச்சாளர்களின் தரவரிசை; மூன்றாமிடத்துக்கு முன்னேறிய டஃபி
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி முன்னேறியுள்ளார். மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான முதல் மூன்று போட்டிகளிலும் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே ஒன்பதாமிடத்திலிருந்து ஆறு இடங்கள் முன்னேறி மூன்றாமிடத்தையடைந்துள்ளார். இந்தியாவுக்கெதிரான நான்காவது போட்டியில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவுஸ்திரேலியாவின் நாதன் எலிஸ், 11ஆம் இடத்திலிருந்து இரண்டு இடங்கள் முன்னேறி ஒன்பதாமிடத்தையடைந்துள்ளார். முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு, வருண் சக்கரவர்த்தி, 2. ரஷீட் கான், 3. […]
மன்னார் சிறுமி துஷ்பிரயோக குற்றவாளிக்கு கடூழிய சிறை
மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தக் குற்றம், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி . எம். மிஹால் முன்னிலையில் நேற்று புதன்கிழமை (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் நீண்ட விசாரணைகளின் […]
35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு நிறைவு
இலங்கை, இந்திய கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படைகளுக்கு இடையிலான 35வது சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு சந்திப்பு கடந்த 11ஆம் திகதி, காங்கேசன்துறைக்கு வடக்கே உள்ள இந்தோ – இலங்கை கடல்சார் எல்லைக் கோட்டில் INS சுகன்யா கப்பலில் நடைபெற்றது. இரு நாடுகளின் கடற்படைகள் மற்றும் கடலோர காவற்படையினர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பகிரப்பட்ட கடல்சார் சவால்களை எதிர்கொள்ள செயற்படுத்தக்கூடிய கூட்டு உத்திகளை ஆராய்வதும், உறவுகளை வலுப்படுத்துவதும் வருடாந்திர IMBL கூட்டத்தின் நோக்கமாக காணப்படுகிறது. வடக்கு கடற்படைப் […]
தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் பணியை விரைவுபடுத்தவும்!
தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதில் தற்போது நிலவும் தாமதத்தை துரிதமாக சீரமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஆட்பதிவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2025 ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வளாகத்தில் ஜனாதிபதியும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சருமான அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்றது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL), ஆட்பதிவுத் திணைக்களம் (DRP) […]
மாபெரும் போராட்டம்; பாரிய மக்கள் அலையுடன் நாமல்!
சமகால அநுர அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக எச்சரித்துள்ளன. போதைப்பொருள், ஊழல் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தும் அரசாங்கம், மக்களின் நலன்கள் தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என எதிர்க்கட்சிகள் சாடுகின்றன. இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி மாபெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நுகேகொடையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன்போது அரசாங்கம் மீது அதிருப்தி கொண்டுள்ள பெருமள மக்கள் ஒன்றிணைவார்கள் என பொதுஜன பெரமுனவின் […]