மூத்த எழுத்தாளர் தி.இராஜகோபாலன் காலமானார்!

மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார். லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார். வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன. வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார். இவர் […]

எதிர்க்கட்சிகளின் பேரணி : கொழும்பில் முக்கிய சந்திப்பு

தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் நடத்த திட்டமிட்டுள்ள எதிர்ப்பு பேரணி குறித்த கலந்துரையாடல் நேற்று(12) இரவு இடம்பெற்றுள்ளது. பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியத் தலைவர்களிடையே, இந்த சந்திப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் நடத்தும் முக்கிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த பேரணிக்கான நோக்கங்கள், ஒருங்கிணைப்பு மற்றும் எதிர்பார்க்கப்படும் பொதுமக்கள் பங்கேற்பு குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது. இந்த சந்திப்பில், உதய கம்மன்பில, நாமல் ராஜபக்ச, […]

வட மாகாணத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோரை அறியப்படுததுங்கள் – அருண ஜயசேகர

வட மாகாணத்தில் போதைப்பொருள்கள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், பொலிஸாரும் ஈடுபடவில்லை, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரால் (ஓய்வு நிலை) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கில் போதைப்பொருள் வியாபாரத்தில் இராணுவத்தினரும், […]

நுகேகொட பேரணியில் கலந்து கொள்வது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை

2025 நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொட பேரணியில் கலந்து கொள்வது குறித்து, தமது கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இறுதி முடிவு சில நாட்களில் எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த விடயம் இன்று கட்சியின் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேராணியில் பங்கேற்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் […]

இறால் தொழில்துறை தகவல் முறைமை அறிமுக விழா

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), இலங்கை கடற்றொழில் அமைச்சு, தேசிய நீரியல் வாழ் செய்கை அபிவிருத்தி அதிகார சபை (NAQDA), தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை (DAPH) மற்றும் நீர்வாழ் நோய் கண்டறிதல் மற்றும் ஆராய்ச்சி மையம் (CADDA) ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கிய *இறால் தொழில்துறை தகவல் முறைமை (SIIS)*யை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறது. இந்த நிகழ்வு, இலங்கையின் இறால் […]

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த ரோபோ இயந்திரம்!

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையான (MEPA) கொழும்பின் நீர்நிலைகளில் மிதக்கும் கழிவுகளைத் தானாகச் சேகரிக்கும் ரோபோ இயந்திரத்தை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அதிநவீன இயந்திரம் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செயல்படுவதுடன், அதன் செயல்திறன் மற்றும் நிகழ்நேரக் கண்காணிப்புக்காகச் சிறப்பான டிஜிட்டல் தரவு முறைமை ஒன்றையும் கொண்டுள்ளது. இலங்கையில் சுற்றுச்சூழல் தூய்மைக்கான இந்த முக்கியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, நேற்று கொழும்பில் சுற்றுச்சூழல் அமைச்சர் டொக்டர் தம்மிக பெதபெண்டி தலைமையில் நடைபெற்றது. முக்கிய அம்சங்கள்: * திட்டம்: […]

புதிய நடைமுறை வடக்கு மாகாணத்திற்கு மட்டும் ஏன்?

மாகாண சுகாதர சேவை பணிப்பாளரின் வடக்கு மாகாணத்திற்கான புதிய நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பு நேற்றையதினம் (12.11.2025) இடம்பெற்றுள்ளது. “முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட பிரதேசத்தின் ஏனைய மருத்துவமனையில் பணியாற்றும் தாதியர்கள் இந்த பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர். இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அரச தாதியர் வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் செ.விஜயதீபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தாதிய உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள். இலங்கையின் எந்த […]

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையினுள் கொலை முயற்சி!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் போதை குற்றச்சாட்டில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட முயற்சியிலிருந்து அவர் தப்பியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இருக்கும் சஸ்மின் நுராஜ் என்பவரை சிறையினுள் ஒரு குழு குறித்த நபரை சுற்றிவளைத்து பிடித்து கழுத்தை அறுத்து கொள்ள முயற்சித்த போது,பெரும் போராட்டத்தின் மத்தியில் சஸ்மின் நுராஜ் தப்பியுள்ளார். ஆனாலும் அவரின் வலது கையிலும் வாய் பகுதியில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர்களின் பொற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் […]

அதிகரிக்கும் தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை இன்றைய தினம் 310,800 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 336,000 ரூபாவாக உயர்ந்துள்ளது. இவேளை நேற்றைய தினம் கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுண் 301,500 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் 326,000 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது. இதனடிப்படையில் பார்க்கும் போது நேற்றை விட இன்று தங்கத்தின் விலை சுமார் பத்தாயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக […]

அரசியல்வாதிகளின் கடன் பெயர்ப்பட்டியலை வெளியிட்ட அமைச்சர்

அமைச்சர் சமந்த வித்யாரத்ன, உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை பெயரிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசிய வித்யாரத்ன, இந்த நிதி விவசாயத் துறை வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும், ஒரு பகுதி தொழில்முனைவோர் மற்றும் தொழில் தொடர்பான முயற்சிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இந்தப் பட்டியல் நீண்டது, எனவே நான் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன் என்று அவர் கூறியுள்ளார். பெயரிடப்பட்டவற்றில், முன்னாள் அமைச்சர் தயா கமகேயின் மனைவி அனோமா கமகேவுடன் […]