இணைந்த செயற்பாட்டுக்கு தமிழரசுக் கட்சி அழைப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற்கொண்டு இலங்கை தமிழரசுக் கட்சி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியுடன் கலந்துரையாடலை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானத்திற்கமைய அக்கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.இரட்ணலிங்கத்துக்கு கடிதம் மூலம் கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். தமிழினம் சார்ந்த பல பொது விடயங்களில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மை தொடர்பாக முன்வைக்கப்படுகின்ற பாரிய விமர்சனங்கள் தொடர்பாக […]

திருமலை முத்துநகர் விவசாயிகளின் பிரச்சினை குறித்து பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல்!

திருகோணமலை மாவட்டம் முத்துநகர் கிராமத்தைச் சேர்ந்த 351 குடும்பங்கள் தங்களது விவசாய நிலங்களை இழந்ததன் காரணமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இந்த பயிர் சீசனுக்கான நெல் பயிரிடும் பணிகளும் தாமதமாகியுள்ளது. இத்தகவல் தொடர்பாக அரசாங்கத்துடன் பலமுறை கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இதுவரை தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை. சுமார் ஒரு ஒரு மாதத்துக்கு முன்பு பிரதமர் விவசாயிகளை சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும், அதுவும் மேலும் தாமதமடைந்த நிலை காணப்படுகிறது. இதனால் இன்று வியாழக்கிழமை […]

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தொல். திருமாவளவன்…

முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தன்னுடைய “ஆயிரம் கவிதைகள்” நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார். பின்னர் திருமாவளவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, […]

லைக் மற்றும் கமெண்ட் பட்டன்களை நீக்கும் ஃபேஸ்புக்

வெளிப்புற வலைத்தளங்களிலிருந்து பிரபலமான பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்களை 2026 பெப்ரவரி 10 ஆம் திகதி, முதல் நிறுத்துவதாக மெட்டா தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை அதன் கருவிகளை எளிமைப்படுத்தவும் நவீனமயமாக்கவும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும் . இருப்பினும், இந்த மாற்றம் பேஸ்புக்கின் சொந்த தளத்தில் உள்ள லைக் பட்டனை பாதிக்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பயனர்கள் தங்கள் கணக்குகளில் வழக்கம்போல post-கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை லைக் செய்ய முடியும். 2026 […]

தொன் கணக்கில் மீட்கப்பட்ட போதை பொருட்கள்

இந்த ஆண்டின் பத்து மாதங்களில் 4 தொன்களுக்கும் அதிகமான போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நேற்று (12.11.2025) வரை நடத்தப்பட்ட சோதனைகளில் பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் 4 தொன்களுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்கள் தொகையின் மதிப்பு ரூ. 5,000 கோடிக்கும் அதிகமாகும். ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களின் எண்ணிக்கை 137,000 க்கும் […]

தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது – பொன்சேகா புகழாரம்

இலங்கையில் கடந்த கால அரசுகள் பயணித்ததை விட தற்போதைய அரசின் பயணம் சிறப்பாக உள்ளது என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “தேசிய மக்கள் சக்தி அரசு, ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு இடமளிக்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றாக வேண்டும். ரணிலை சிறையில் அடைத்தபோது அதேபோல ஊழல் வலையமைப்பை முற்றாக இல்லாதொழிப்பதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். ஆனால் அதற்குரிய முயற்சி […]

இலங்கையில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார். அண்மைய தரவுகளின்படி, நீரிழிவு […]

இணையவழி கடன் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச

அத்தனக்கல்லைப் பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (13) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது போன்ற இணையவழி கடன் வழங்கும் பல சட்டவிரோத நிறுவனங்கள் காணப்படுவதனால், இது தொடர்பாக ஒரு முறையானதொரு சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும் […]

புதிய தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர். இன்று தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பின்வருமாறு. 1. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின் Ms. Isabelle Marie Catherine Martin, High Commissioner of Canada, based in […]

விடுதலைப் புலிகளின் தேசிய கொடி இங்கிலாந்தில் இன்னும் பறக்கிறது

இங்கிலாந்தில் இன்னும் விடுதலைப் புலிகளின் தேசிய கொடி பறப்பதாகவும் அதை நிறுத்துவதற்கு இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்று (12.11.2025) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், இங்கிலாந்து தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்கு பெரும் உதவி செய்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச தலைமையகம் இங்கிலாந்திலேயே அமைந்துள்ளது. மேலும் விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரான அன்டன் பாலசிங்கம் இங்கிலாந்து குடியுரிமை பெற்றிருந்தவர். கரன்னாகொட, […]