பிரசன்ன ரணதுங்க கைது
முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஊழல் குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (12) காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வாக்குமூலம் அளிக்க வந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சரவை அமைச்சராக இருந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் சம்பவத்துடன் இந்தக் கைது தொடர்புடையது என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடந்து வரும் விசாரணை குறித்து முறையான அறிக்கை […]
இந்த வரவு செலவுத் திட்டம் ஏழைகளிடம் இருந்து பணத்தைப் பெற்று செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது
கடந்த கால வரவு -செலவுத் திட்டங்களில் செல்வந்தர்களிடம் இருந்து பெற்று, ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கப்பட்டது, ஆனால் இந்த வரவு செலவுத் திட்டம் ஏழைகளிடம் இருந்து பெற்று செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி. நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார கடந்த காலங்களில் எதிர்க்கட்சி எம்.பி.யாக பாராளுமன்றத்தில் பேசிய விடயங்களை ஹன்சாட்டில் இருந்து தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான […]
விசேட சோதனை; 300 கிலோ போதைப்பொருளுடன் ஆறு பேர் கைது
கிரிந்த பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 300 கிலோகிராம் போதைப்பொருளுடன் ஆறு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினரும், தெற்கு மாகாண பொலிஸ் குழுவும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ் மக்கள் மீதான கட்டமைக்க இன அழிப்பின் வடிவம் ’கிவுல் ஓயா’வுக்கான நிதி
‘கிவுல் ஓயா’ நீர்த்தேக்க திட்டத்திற்கு 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் 2.5 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை தமிழ் மக்கள் மீதான கட்டமைக்க இன அழிப்பின் வடிவமாகும் என தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம்சாட்டினார் பாராளுமன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத்திட்டம் மீதான 3 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டினார். வவுனியா வடக்கில் தமிழ் மக்களின் பூர்வீக குளங்கள், வயல் காணிகள், பழந்தமிழ் கிராமங்கள் […]
வெளிப்படைத்தன்மை இல்லாமல் சிறந்த ஆளுமையைக் கட்டி எழுப்ப முடியாது – அவுஸ்திரேலிய பேராசிரியர் ஜெவ் டிக்சன்
வெளிப்படைத்தன்மை இல்லாமல் சிறந்த ஆளுமையைக் கட்டி எழுப்ப முடியாது. எல்லாவற்றுக்கும் சிறந்த ஆளுமைதான் பிரதானம். அதற்கான சீர்திருத்தம் இலங்கையில் அவசியம். ஆளுகை சீர்திருத்தமானது நல்ல முடிவுகளை எடுப்பதற்கான விதிகளை வழங்குகிறது. ஆனால், கலாசாரம்தான் (பண்புகள்) அந்த விதிகளுக்கு உயிர் கொடுக்கிறது என அவுஸ்திரேலியாவின் மேல்பர்ன் லா ட்ரோப் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெவ் டிக்சன் தெரிவித்தார். இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவினால் ஒலிம்பிக் இல்லத்தின் ஹேமசிறி பெர்னாண்டோ கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கை […]
மெஸ்ஸி பார்சிலோனாவுக்கு திரும்புகிறார்?
ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனாவுக்கு ஒரு நாள் திரும்ப எதிர்பார்ப்பதாக அக்கழகத்தின் முன்னாள் வீரர் லியனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். பார்சிலோனாவில் 13ஆவது வயதில் இணைந்து 21 ஆண்டுகள் இருந்த 38 வயதான மெஸ்ஸி புதிய அரங்கத்துக்கு விஜயம் செய்த பின்னரே இக்கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். மெஸ்ஸியைத் தக்க வைக்கக் கூடிய நிதி நிலைமையை பார்சிலோனா கொண்டிருக்காத நிலையில் 2021ஆம் ஆண்டு பார்சிலோனாவிலிருந்து வெளியேறிருந்தார். வீரரொருவராக ஒருபோதும் செய்ய முடிந்திருக்காத பிரியாவிடையை மாத்திரம் சொல்வதற்காக மட்டுமன்றி ஒருநாள் தான் […]
இஸ்லாமாபாத்தில் தாக்குதலில் தொடரும் மர்மம்…
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்றத்திற்கு வெளியே நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 27 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்தார். மாவட்ட நீதிமன்றத்தைத் தாக்க ஒரு குண்டுவெடிப்பாளர் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குண்டுவெடிப்பாளரை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அந்நாட்டு உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்தியாவால் […]
ஜோர்ஜியாவின் நடுவானில் 20 பேருடன் பற்றி எரிந்த விமானம்…
அஜர்பைஜான் எல்லைக்கு அருகில் ஜோர்ஜியாவில் 20 பேருடன் சென்ற துருக்கிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம், அஜர்பைஜானில் இருந்து புறப்பட்ட C-130 சரக்கு விமானம் விபத்துக்குள்ளான காரணம் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன. துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம், விமானக் குழுவினர் உட்பட 20 துருக்கி பணியாளர்கள் C-130 விமானத்தில் இருந்ததாகக் கூறியது, ஆனால் […]
திருகோணமலை வளாக பல்கலைக்கழக மாணவர்களின் வீதி நாடகம்
கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக மாணவர்களினால் சமத்துவமும் உரிமைகளும் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி என்ற தொனிப்பொருளில் வீதி நாடகம் ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை (11) காலை திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு முன்பாக நிகழ்த்தப்பட்டது. இதில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுப் பாலினம் ஆகியோரின் உரிமைகள் தொடர்பாக பேசப்பட்டது. தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம்பெற்ற குறித்த விழிப்புணர்வு வீதி நாடகம் மத்திய பேரூந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நிகழ்த்தப்பட்டிருந்தது.
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் மூடல்
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம் ஒன்று நேற்று (11) சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. மாநகரசபை சுகாதார பரிசோதகர்களால் நேற்று (11) குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, சுகாதார சீர்கேட்டுடன் குறித்த உணவகம் இயங்கியதாகவும் தெரிவித்து வவுனியா மாநகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் நீதிமன்ற உத்தரவுக்கமைய மூடப்பட்டது. அத்தோடு நேற்றைய தினத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை குறித்த உணவகம் மூடப்பட்டுள்ளது. குறித்த […]