பஸ் சாரதிக்கு விளக்கமறியல்

தலாவ ஜயகஹா விபத்தில் தொடர்புடைய பேருந்து ஓட்டுநர் நவம்பர் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அனுராதபுரம், தலாவ ஜயகஹா சந்தி பகுதியில் நவம்பர் 10 ஆம் திகதி மதியம் நடந்த இந்த துயர சம்பவத்தில் ஒரு பாடசாலை மாணவர் உயிரிழந்தார் மற்றும் கிட்டத்தட்ட 50 பேர் காயமடைந்தனர். மோட்டார் சைக்கிளுக்கு வழிவிடும்போது தனியார் பேருந்து கவிழ்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் தனியார் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

தேசிய மக்கள் சக்தி எம்.பி பொலிஸில் முறைப்பாடு

தேசிய மக்கள் சக்தி (NPP) பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த லலித் குமார, போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறி சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளுக்கு எதிராக மீரிகம பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நேற்று மீரிகம பொலிஸில் முறைப்பாடு அளித்தார். “இந்தக் கூற்றுகளுக்குப் பொறுப்பானவர்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். பல கணக்குகள் போலியானவை. நான் ICE மற்றும் ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடையவன் என்று கூறும் அறிக்கைகள் […]

சர்வாதிகாரிக்கு கௌரவமா என எதிர்ப்பு; இந்தோனேஷியாவின் முன்னாள் அதிபருக்கு ‘தேசிய ஹீரோ’ அந்தஸ்து!

இந்தோனேஷிய முன்னாள் அதிபர் சுகார்த்தோவுக்கு, நாட்டின் ‘தேசிய ஹீரோ’ என்ற அந்தஸ்து வழங்குவதாக, தற்போதைய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். புகழாரம் தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில், சுதந்திர போ ராட்டத்தில் உயிரிழந்த வீரர்களையும், தேசியத் தலைவர்களையும் நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் விழா கொண்டாடப்படுகிறது. அந்நாட்டின் தேசிய ஹீரோவாக அறிவிக்கப்படுபவருக்கு ‘பிந்தங் மஹாபுட்டிரா’ என்ற உயரிய அந்தஸ்து வழங்கப் படுகிறது. இந்த விழாவில் பங்கேற்ற அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, முன்னாள் […]

பூடானில் நீர்மின் திட்டம்; திறந்து வைத்தார் இந்தியப் பிரதமர் மோடி

பூடானில் 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து பிரதமர் மோடி திறந்து வைத்தார். 2 நாள் அரசு முறைப் பயணமாக பூடான் நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் மோடி இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்ட 1,020 மெ.வா.நீர்மின் நிலையத்தை அந்நாட்டு மன்னருடன் சேர்ந்து திறந்து வைத்தார். இது குறித்து பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ இந்தியா மற்றும் பூடான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையான உறவுகளில் எரிசக்தி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்று […]

கனடா அமைச்சர் அனிதா ஆனந்துடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

அரசு முறைப் பயணமாக கனடா சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டில்லியில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு அனிதா ஆனந்த் கவலை தெரிவித்தார். ஜி7 நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி,ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு, கனடாவின் ஒண்டாரியாவில் உள்ள நயாகரா பகுதியில் நடைபெற்றது. இதில், இந்திய வெளியுறவுத்துறை […]

ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதா? நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்க துறை விசாரணை

சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து, நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர், கோகைன் போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் நண்பர்களுக்கு விற்றது தொடர்பாக, கடந்த ஜூனில் கைது செய்யப்பட்டனர். பின், ஜாமினில் வெளியே வந்துள்ளனர். போலீசாரின் விசாரணையில், ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோரது பின்னணியில், சர்வதேச போதை பொருள் கும்பல் இருப்பது தெரியவந்தது. போலீசாருக்கு ரூ.50 லட்சம் கொடுக்கப்பட்டதா? நடிகர் ஸ்ரீகாந்திடம் அமலாக்க துறை கிடுக்கிப்பிடி பிரதீப்குமாரை, அ.தி.மு.க, நிர்வாகியாக இருந்த அஜய் […]

பாகிஸ்தானில் அதிபர்,பிரதமர் அதிகாரம் பறிப்பு!

பாகிஸ்தானில், அணு ஆயுதம் முதல் நாட்டின் நீதித்துறை வரை, பரவலான முக்கிய அதிகாரங்கள் அனைத்தையும் ராணுவ தளபதி அசிம் முனீருக்கு வழங்கும், 27வது அரசியலமைப்பு சட்ட திருத்தம், அந்நாட்டின் பார்லிமென்டின் இரு சபைகளிலும் வெற்றிகரமாக நிறைவேறி உள்ளது. அமைதியான ராணுவ புரட்சி என்று கூறப்படும் இதன் மூலம், பாக்., பிரதமர் மற்றும் அதிபரின் பதவிகள், ‘வெத்து’ நாற்காலிகளாக மாற உள்ளன. அனைத்து அதிகாரங்களும் அசிம் முனீரிடமே இனி இருக்கும் என்பது, இந்தியாவுக்கு ஆபத்து என்று கூறப்படுகிறது . […]

கடந்த செப்டம்பர் மாதம் வரை நாட்டின் மொத்த கடன் தொகை!

கடந்த செப்டம்பர் மாதம் வரையில் இலங்கையின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தொகை 30.9 டிரில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் 27(2) பிரிவின் கீழ் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த மொத்தக் கடனில் உள்நாட்டு கடன் 19.6 டிரில்லியன் ரூபாவும் வெளிநாட்டு கடன் 11.3 டிரில்லிய் ரூபாவும் உள்ளடங்கியுள்ளன. தற்போதைய […]

செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு 3 மணி நேரம் முன்பே எச்சரித்த மாணவன்!

டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு தொடர்பாக ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிவருகின்றது. சம்பவத்திற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு, சமூக ஊடக தளமான ‘ரெடிட்’ இல் ஒரு மாணவரின் பதிவிட்ட பதிவு தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. 12 ஆம் வகுப்பு படிப்பதாகக் கூறப்படும் அந்த மாணவரின் பதிவில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் 3 மணி நேரம் முன்னதாகவே பாதுகாப்புப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளார். மாலை 4 […]

மாதிரி போக்குவரத்து மையங்களை உருவாக்க அமைச்சரவை இணக்கம்

இலங்கையின் முக்கிய நகரங்களில் மாதிரி போக்குவரத்து மையங்களின் தொடரை நிறுவுவதற்கு அமைச்சரவை கொள்கையளவில் இணக்கம் அளித்துள்ளது. பொது போக்குவரத்து அமைப்பின் செயல்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக, இவை அமையவுள்ளன. இது தொடர்பில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் செயல் அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, போக்குவரத்து மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் முக்கிய நகரங்களில் போக்குவரத்து மையங்களை உருவாக்குவதன் மூலம் பேருந்துகள், தொடருந்துகள் மற்றும் டாக்சிகளுக்கு இடையேயான […]