த்ரிஷாவை அடுத்து எடையை குறைத்த தமன்னா

உடல் எடையை குறைத்த தன்னை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கொண்டிருப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறார் தமன்னா. அவர் சொன்ன ஒரு விஷயம் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. அவர் நடிக்க வந்த புதிதில் ஒல்லியாக இருந்தார். அதன் பிறகு லைட்டாக வெயிட் போட்டார். இந்நிலையில் தற்போது தன் உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் ஸ்லிம்மாகிவிட்டார். அதை பார்த்த ரசிகர்களோ எங்க தம்மு ஒல்லியாக இருந்தாலும் அழகு, […]

ஹீரோவாக நடிக்க மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கும் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ் DC திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்கி வர இப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கும் சம்பளம் தொடர்பாக ஒரு தகவல் தற்போது கிடைத்திருக்கின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என்பதையும் தாண்டி தற்போது ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் அதிரடியான ஆக்ஷன் படமாக தயாராகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்திற்காக லோகேஷ் […]

சாதகமான ஆடுகளங்களை விரும்பும் ஸ்டார்க்

இங்கிலாந்துக்கெதிரான ஆஷஸ் தொடரின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை தயார்படுத்துமாறு அவுஸ்திரேலியாவின் மிற்செல் ஸ்டார்க் வலியுறுத்தியுள்ளார். ஐந்து நாள் வருமானத்தை அதிகப்படுத்துவதற்காக ஆடுகளங்களைத் தட்டையாக்குவதை ஸ்டார்க் எச்சரித்துள்ளார். இந்தியாவுக்கெதிரான கடந்தாண்டுத் தொடரின்போது பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளத்திலேயே அவ்வணியை 3-1 என அவுஸ்திரேலியா வென்றிருந்தது.

திருமதி பூலோகநாதன் ராஜேஸ்வரி

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Den Helder ஐ வதிவிடமாகவும் கொண்ட பூலோகநாதன் ராஜேஸ்வரி அவர்கள் 09-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான லட்சுமணன் தங்கச்சியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,பூலோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும் தேன்மொழி, பொன்மொழி, பொன்மலர்(கீர்த்தனா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்மசீலன், மார்கோ, லக்ஸ்சுமண் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ஜெயராணி, காலஞ்சென்ற துரைசாமலிங்கம், மனோன்மணி, பாலசந்திரன், மனோரஞ்சிதம், புஸ்பராணி, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும் தவமணி, நாகராஜா […]

அஜித் வீட்டில் காவல்துறை தீவிரச் சோதனை

கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) உள்ள பிரபல நடிகர் அஜித்குமாரின் இல்லத்திற்கு அடையாளம் தெரியாத நபர் தொலைபேசி மூலம் விடுத்த வெடிகுண்டு மிரட்டலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தத் தகவலை அடுத்து, உடனடியாக நடிகர் அஜித்குமாரின் இல்லத்தைச் சுற்றிலும் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் குவிக்கப்பட்டனர். மேலும், மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவின் உதவியுடன் வீடு முழுவதும் தீவிரச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், நடிகர் எஸ்.வி. சேகர், நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோரது […]

கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பிணை!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ், போதரகம இன்று புதன்கிழமை(12) உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பிரசன்ன ரணதுங்கவை 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகள் மற்றும் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான ரொக்க பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட நான்கு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, இலங்கை காப்புறுதிக் […]

அதிவேக வீதியில் விபத்து

கட்டுநாயக்க அதிவேகசாலையில் இன்று(12) காலை விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. காரொன்றும் வானும், கனரக வாகனமொன்றும் மோதியுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விவசாயிகளின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் தற்போது அவர்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது- முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்திருந்தும் அவர்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது என்றும் சர்வதேச அரங்கில் பிரிவினைவாத கருத்துகளை பரப்பியதாகவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, இன்றைய தினம் (நவம்பர் 12) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமை காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடுமையாகக் குற்றம் சாட்டினார். முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, தற்போதைய அரசாங்கம் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கத் தவறியது மற்றும் சர்வதேச அரங்கில் இராணுவத்திற்கு எதிராக பிளவுண்மையான கருத்துகளை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு […]

அரசாங்கம் பௌத்த சமய கலாசார மரபுரிமைகளைப் புறக்கணித்துச் செயற்படுகிறது – சஜித் பிரேமதாச

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயரிய சட்டமான அரசியலமைப்பின் 2 ஆம் அத்தியாயம், இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானத்தை வழங்குவதோடு, ஏனைய சகல மதங்களுக்கும் அதற்குரிய உரிமைகளைப் பாதுகாக்கும் அதே வேளையில், பௌத்தத்தைப் பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும் என்றும் அது கூறுகிறது. புத்த சாசனத்தையும் அதனது நிலைத்தன்மைக்காகச் செயற்படும் மகா சங்கத்தினரைப் பாதுகாப்பதும், அதன் நீண்ட கால இருப்பும், சங்க மரபின் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்தலும் அரசாங்கத்தின் […]

அரச ஈட்டு- முதலீட்டு வங்கியை மீள்கட்டமைப்பு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபன வங்கியின் அனைத்துப் பங்குரிமைகளையும் இலங்கை வங்கி பெற்றுக் கொண்டு, இலங்கை வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும், அரச ஈட்டு மற்றும் முதலீட்டு வங்கியின் அனைத்துப் பங்குகளையும் மக்கள் வங்கி பெற்றுக் கொண்டு குறித்த வங்கியுடன் இணைப்புச் செய்யப்பட்ட நிறுவனமாக தொழிற்பாடுகளை மேற்கொண்டு செல்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 25.11.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை ( […]