கடலுக்கு சென்ற வெளிநாட்டவர் மரணம்
வென்னப்புவ கடல் அலைகளில் அடித்துச் செல்லப்பட்ட வெளிநாட்டவர் உயிரிழந்துள்ளார். குறித்த வெளிநாட்டவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். வென்னப்புவ – கம்மல கடற்கரையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டவர் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டு மாரவில ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார். ஜெர்மனியை செர்ந்த 71 வயதான குறித்த வெளிநாட்டவர் இலங்கை பெண்ணை திருணம் செய்து நீர்கொழும்பில் வசித்து […]
தாயகம் திரும்பவுள்ள இலங்கை அகதிகள்
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகள், தன்னார்வ அடிப்படையில், மீண்டும் தாயகம் திரும்புவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என்று யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது. குறித்த அமைப்பின் இந்திய பிரதிநிதி அரெட்டி சியென்னி இதனை நேற்று(9) நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 200 இலங்கை அகதிகள் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். எனினும் அவர்களில் நான்கு பேரை இலங்கையின் குடிவரவு அதிகாரிகள் கைது செய்தமையை அடுத்து, தன்னார்வ மீள்திரும்பல் பணிகளை யுஎன்எச்சிஆர் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. தற்போது […]
ஹெலிகொப்டர்களை பழுதுபார்க்க அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கை விமானப்படையின் நான்கு, எம்ஐ – 17 ஹெலிகொப்டர்களை அவசரமாக பழுதுபார்ப்பதற்காக, பொஸ்னியா நிறுவனத்தின் கேள்விப்பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபா பெறுமதிப்படி, இந்த ஹெலிகொப்டர்களை பழுதுபார்ப்பதற்காக, 5.4 பில்லியன் ரூபாய்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று கூறுகிறது. இந்த நிலையில் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு, அடுத்த அமைச்சரவை ஊடகச் சந்திப்பில் வெளியிடப்படும் என்றும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் ஏனைய அவசர தேவைகளுக்காக இந்த ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
போதைப்பொருட்களுடன் ஒரே நாளில் 23 பேர் கைது; யாழில் சம்பவம்
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் ஒரே நாளில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 17 வயது சிறுவன் போதை மாத்திரைகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது, யாழ். நகரை அண்டிய பகுதிகளில் 10 பேர் ஐஸ் போதைப்பொருளுடனும், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 9 பேர் போதை மாத்திரைகளுடனும், 4 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர். […]
4 அதிகார மையங்கள் தமிழகத்தில் மக்களை ஆட்டி படைக்கின்றன
”தமிழகத்தில் 5.75 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை தி.மு.க., அரசு நிரப்பவில்லை,” என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் ஓமலுாரில், அ.தி.மு.க., 54ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி பங்கேற்று பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம் என்ற கேவல நிலையை ஏற்படுத்தி உள்ளனர். மக்களை பற்றி சிந்திக்காமல், குடும்பத்தை பற்றியே சிந்திக்கின்றனர். தமிழகத்தில் நடக்கும் குடும்ப […]
ரணிலை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சுக்கான பல மாடி கட்டடத்தை வாடகைக்கு பெற்றுக்கொள்வதில் நடந்த நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணையில் ரணில் கைது செய்யப்படலாம் என தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மூத்த திரைப்பட நடிகை சபிதா பெரேராவின் கணவருக்கு சொந்தமான இந்த கட்டடம், முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்டது. இதற்கான மாத வாடகை 21 […]
தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு புதிய கூட்டணி – இந்திய ஊடகம் செய்தி
தாவூத் இப்ராஹிம் சிண்டிகேட் என்ற குற்றச் செயல் கும்பலுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஒரு புதிய கூட்டணி உருவாகி வருவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளதாக இந்திய ஊடகமான தியா டிவி செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கு மற்றும் வட இந்தியாவில் நடத்தப்பட்ட கடும் நடவடிக்கைகளுக்குப் பிறகு, போதைப்பொருள் வர்த்தகத்தை மீண்டும் கட்டியெழுப்ப தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக செல்லும் வழிகளை குற்றவியல் கும்பல் பயன்படுத்தி வருவதாக தியா டிவி தெரிவித்துள்ளது. தலைமைத்துவ இடைவெளிகள் மற்றும் நிதி […]
விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் நஞ்சுக்கொடி: விசாரணைகள் ஆரம்பம்
பேராதனை பல்கலைக்கழகத்தின் விஜயவர்த்தன பெண்கள் விடுதியில் உள்ள ஒரு குளியலறையில், ஒரு நஞ்சுக்கொடியின் பகுதி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஆரம்பத்தில், மனிதக் கருவின் பாகங்கள் என சந்தேகிக்கப்பட்ட பகுதிகளை பார்த்த விடுதியின் துணை விடுதி கண்காணிப்பாளர் அவற்றை புதைக்க நடவடிக்கை எடுத்திருந்தார். பின்னர், அவர் இது குறித்து துணை வேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித்க்கு தெரிவித்தார். மனிதக் கருவின் பாகங்களை பொலிஸாருக்குத் தெரிவிக்காமல் புதைக்க முடியாது என்று கூறிய துணை வேந்தர், […]
இன்று கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்!
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை (10) ஆரம்பமாகி, டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 340 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (9) பரீட்சை திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், பாடசாலை பரீட்சார்த்திகள் 2,46,521 பேரும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 94,004 […]
கிண்ணியாவில் போதை ஒழிப்பு மத்திய குழு கூட்டம்: புதிய நிர்வாகம் தெரிவு!
கிண்ணியா பிரதேசத்தில் போதைப்பொருள் ஒழிப்பை தீவிரப்படுத்துவது குறித்து ஆராயும் மத்திய குழுவின் கூட்டம் நேற்று (09) காலை 9.00 மணிக்கு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை மண்டபத்தில் நடைபெற்றது. கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி தலைமையின் கீழ் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கிண்ணியா நகர சபை தவிசாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனை செய்யப்படும் முக்கிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் உதவியுடன் சுற்றி வளைப்பு செய்து, விற்பனையில் […]