இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில் நடப்புச் சம்பியன் தோல்வி
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், பொலொக்னாவின் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 0-2 என்ற கோல் கணக்கில் நடப்புச் சம்பியன்களான நாப்போலி தோற்றது. பொலொக்னா சார்பாக திஜ்ஸ் டல்லிங்கா, ஜோன் லுகுமி ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். இதேவேளை தமது மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற லேஸியோவுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் வென்றது. இன்டர் சார்பாக லொட்டரோ மார்டினெஸ், அஞ்சே-யோன் பொன்னி ஆகியோர் […]
ஹொங்கொங் சிக்சஸ் கோப்பை போட்டி; ஹொங்கொங் சைனா சம்பியன்
ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவுக்கான இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய ஹொங்கொங் சைனா கடைசிப் பந்தில் ஒரு விக்கெட்டால் பரபரப்பான வெற்றியை ஈட்டி சம்பியனானது. அப் போட்டியில் பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடி 6 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 120 ஓட்டங்களைப் பெற்றது. ஜிஷான் அலாம் 51 ஓட்டங்களையும் அபு ஹைதர் 28 ஓட்டங்களையும் ஜிஷான் அலாம் 27 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நஸ்ருல்லா ரானா 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 121 ஓட்டங்களை வெற்றி […]
ரஷ்யாவுக்கு அணு ஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை!
அமெரிக்கா மீண்டும் சோதனைகளை தொடங்க திட்டமிட்டுள்ள போதிலும், அணு ஆயுத சோதனை தடைக்கான தனது உறுதிப்பாட்டை ரஷ்யா மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இது குறித்து ரஷ்யாவின் கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது: சர்வதேச அணுசக்தி சோதனை தடைகளின் கீழ், ரஷ்யா தனது உறுதிமொழிகளை கடைபிடிக்கிறது. அணுஆயுத சோதனை நடத்தும் திட்டம் இல்லை. சோதனை நடத்துமாறு அதிபர் புடின் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அணு ஆயுத சோதனைகள் மீதான நீண்ட கால தடைக்கு ரஷ்யா […]
இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் சிவகிரி, மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஆகிய இடங்களில், தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மதுரை விமான நிலையம், திருமங்கலம், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் தலா, 3; கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு, மதுரை நகரம், மதுரை வடக்கு, […]
மாலியில் கடத்தப்பட்ட 5 பேரும் தமிழர்கள்!
மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கடத்தப்பட்ட இந்தியர்கள் ஐந்து பேரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என, தெரியவந்துள்ளது. இதில், கடையநல்லுாரைச் சேர்ந்த இருவர், 8 மாதங்களுக்கு முன், அங்கு பணிக்கு சென்றவர்கள் என தெரிய வந்துள்ளது. மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில், ராணுவ ஆட்சி நடக்கிறது. அங்கு ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்புகள், அடிக்கடி தாக்குதலில் ஈடுபடுவதும், வெளிநாட்டினரை கடத்துவதும் வழக்கமாக உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம், மேற்கு மாலியில் உள்ள கோப்ரி அருகே, தனியார் நிறுவனத்தில் நுழைந்த […]
எதிர்பார்க்கும் வருமானம் இன்னும் மூன்று நாட்களுக்குள்?
இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கும் வருமானத்தை அடுத்த மூன்று நாட்களுக்குள் அடைய முடியும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2025 நவம்பர் 6ஆம் திகதியன்று நாடு தனது வரலாற்றில் அதிகபட்சமாக ஒரு நாள் வருவாய் பதிவாகியுள்ளதாகவும், அது 27.7 பில்லியன் ரூபாய்களாக இருந்ததாகவும் சுங்கத் திணைக்கள பணிப்பாளர் சந்தன் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர், 2025 அக்டோபர் 15, அன்று அதிகபட்சமாக ஒரு நாள் வசூல் 24.4 பில்லியனாக ரூபாய்களாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த […]
ஐஸ் போதைப்பொருள் விற்ற பிள்ளையானின் மொழிப்பெயர்ப்பாளரின் கணவர்!
மட்டக்களப்பு நகரில் ஐஸ் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர், மட்டு மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் பிள்ளையானின் மொழி பெயர்ப்பாளரின் கணவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபரை 3 நாள் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்றுமுன்தினம்(8) அனுமதியளித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தெரியவருகையில், பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, ஊழல் ஒழிப்பு மற்றும் போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (07) இரவு […]
உடல் நலக்குறைவால் நடிகர் அபிநய் காலமானார்
நடிகர் அபினவ் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார். துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் அபிநய். தொடர்ந்து, ஜங்ஷன் என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதன்பின், நாயகனின் நண்பனாக, முக்கிய கதாபாத்திரங்களில் என சில படங்களில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றார். இறுதியாக, என்றென்றும் புன்னகை, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திரைப்படங்களில் நடித்திருந்தார். இதற்கிடையே, கடந்த சில ஆண்டுகளாகக் கல்லீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு கடுமையான உடல் நலப் பிரச்னைகளையும் சந்தித்து வந்தார். இதற்காக, சிலர் […]
கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற விபத்தில் வீரர் ஓருவர் உயிரிழப்பு
இலங்கையில் கிரிக்கட் விளையாடிக் கொண்டிருந்த நபர் ஓருவர் மைதானத்தில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மினுவன்கொட அதுலுபொல பொது விளையாட்டரங்கில் நேற்று(9) இடம்பெற்ற கிரிக்கட் போட்டியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஆட்டமிழப்பு ஒன்றுக்காக இரண்டு வீரர்கள் பந்தை பிடிக்க முயன்ற வேளை ஓருவருடன் ஒருவர் மோதிக் கொண்டுள்ளனர். இவ்வாறு மோதிக் கொண்டதில் பளுகஹாவெல கெட்டுவெல்கம பகுதியைச் சேர்ந்த இஹலகே தனுஷ்க தேவிந்த பெரேரா என்ற நபரே உயிரிழந்துள்ளார். விபத்தினைத் தொடர்ந்து மினுவன்கொட ஆதார வைத்தியசாலையில் குறித்த நபர் […]
சவூதி அரேபியா இலங்கை நினைவு தபால்தலைகளை வெளியீடு!
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சவூதி அரேபியா நினைவு தபால்தலைகளை வெளியிட்டுள்ளது. சவூதி அஞ்சல் வெளியிட்ட இந்த நினைவு தபால்தலைகளை, நேற்றையதினம் (09) ரியாத்தில் வைத்து சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரதிடம் கையளித்தார். இந்த நிகழ்வு, இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு வரலாற்றுத் தருணம் என்று அமைச்சர் விஜித ஹேரத் […]