உயிரியல் மாணவி மர்மமாக மரணம்
இன்று (10) ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு எழுதத் தயாராகி வந்த நிலையில், 19 வயது மாணவி ஒருவர் தூக்கத்திலேயே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தம்புள்ளை மேல் அரவுல பகுதியைச் சேர்ந்த இறந்த மாணவி உயிரியல் பிரிவில் உயர்தரப் பரீட்சை இன்று (10) எழுதவிருந்த மாணவி ஆவார். இறந்த மாணவி தம்புள்ளை தேசியப் பள்ளியில் பயின்று வரும் தருஷி சாமோடி வயது 19 என்ற மாணவி ஆவார். இந்தச் சிறுமி தனது அறையில் ஞாயிற்றுக்கிழமை […]
கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்துகளுடன் நால்வர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் கற்பிட்டியில் நான்கு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கடந்த 06 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி இப்பந்தீவு கடல் பகுதி மற்றும் கருவலக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான மருந்து மாத்திரைகள், திரவங்கள் மற்றும் களிம்புகளுடன் நான்கு ) சந்தேக நபர்கள் ஒரு டிங்கி படகுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடல் வழியே கடத்தல் உள்ளிட்ட […]
புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் கெஹெலிய குடும்பம்…
முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (10) காலை ஆஜரானார்கள். பணமோசடி சட்டத்தின் கீழ் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் நடத்தப்படும் விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கத்தின் சமகால அரசியல் தொடர்பான ஊடக சந்திப்பு
தமிழரசு கட்சி இப்போதும் பெரியண்ணன் மனோநிலையிலிருந்து கொண்டுதான் ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு அழைப்பு விடுத்திருப்பதாக அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று தனது அலுவலகத்தில் நடாத்திய சமகால அரசியல் தொடர்பான ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். பெரியண்ணன் மனோநிலை என்பது தமிழரசு கட்சி ஐக்கிய முன்னணியில் மேலாதிக்கம் செலுத்துவுடன் ஏனைய கட்சிகள் அதன் கீழ் இயங்குவது போன்றது என்றும் இது ஒரு ஐக்கிய முன்னணிக்கு பொருத்தமானது அல்ல […]
குப்பிளான் சந்தியில் குழு மோதல்; ஐவர் படுகாயம்!
யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது. இதன்போது ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் படுகாயமடைந்தனர். […]
பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று திங்கட்கிழமை (10) மாலை முதல் அமுலில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2026 வரவு செலவுத் திட்டம்; வைத்தியர்களை விட விலங்குகளுக்கே சலுகைகள் அதிகம்!
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் மருத்துவர்களின் தொழிற்சங்க கூட்டணியின் தலைவரான வைத்தியர் சமல் சஞ்சீவ, 2026 வரவு செலவுத் திட்டம், நாட்டின் மருத்துவ நிபுணர்களைப் புறக்கணிக்கும் அதே வேளையில், விலங்கு நலனுக்காக கணிசமான நிதியை ஒதுக்குவதாகக் கூறி, அதை கடுமையாக விமர்சித்துள்ளார். “இந்த ஆண்டு பட்ஜெட்டில், நாய்கள் உட்பட விலங்குகளின் நலனுக்காக அதிக அளவு மூலதனம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் இளம் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களைத் தக்கவைத்துக் கொள்ளவோ அல்லது ஊக்குவிக்கவோ எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை” என்று சஞ்சீவ […]
துருக்கி வாசனை திரவிய சேமிப்பு கிடங்கில் தீ: 6 பேர் பலி
துருக்கி கொஹலி மாகாணம் டிலோவசி நகரில் வாசனை திரவிய சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு வாசனை திரவியம் சப்ளை செய்யப்படுகிறது. இக்கிடங்கில் காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பணி செய்து கொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி அணைத்தனர். விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பிரேசிலை தாக்கிய சூறாவளி!
தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பிரேசில் இங்கு பரானா மாகாணத்தை சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் , கனமழையும் பெய்ததால் பல பகுதிகளில் கட்டடங்களில் கூரைகள், விளம்பர பலகைகள் சேதமடைந்தன. சூறாவளியால் மரங்கள் முறிந்து விழுந்தன. பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சூறாவளியில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். 432 பேர் காயமடைந்தனர். போலீசார், தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு எதிராக செயற்பட்ட பிரிட்டன்?
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார், இந்திய உளவு பிரிவால் கொல்லப்பட்டதாக கனடா குற்றம்சாட்டி உள்ள நிலையில், அதற்கான தொலைபேசி உரையாடல் ஆதாரங்களை பிரிட்டன் உளவு அமைப்பு சேகரித்து தந்ததாக தகவல் வெ ளியாகி உள்ளது. நம் நாட்டின் பஞ்சாப், ஹரியானா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி ஆகியவற்றை இணைத்து, தனி நாடாக்க வேண்டும் என்ற முயற்சியில் காலிஸ்தான் அமைப்பினர் ஈடுபட்டுஉள்ளனர். இதன் காரணமாக, இவ்வமைப்பு பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டு நம் […]