இலங்கையில் நல்லிணக்கத்துக்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் – ஜஸ்டின் பொய்லட்

இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (09) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் என்ற ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், […]
வயதுக்கேற்ப பாலியல் கல்வித்திட்டம் – பிரதமர் ஹரிணி
பாலியல் சீண்டலை தடுக்க, மாணவர்களின் வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து கண்டியில் இடம்பெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த முயற்சிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
வவுனியாவில் ஊடக சந்திப்பை புறக்கணித்தார் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி?
வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் ஊடக சந்திப்பை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் புறக்கணித்து வெளியேறியுள்ளார். ரெலோ கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த குரல் பதிவு தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் கட்சியின் தலைமைக் குழு வவுனியாவில் நேற்று (09.11) காலை முதல் மாலை வரை கூடி ஆராய்ந்து இருந்தது. இதன்பின் ஊடக சந்திப்பும் இடம்பெற்றது. குறித்த ஊடக சந்திப்பை கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் […]
ரவூப் ஹக்கீம் ஸ்டாலின் சந்திப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று திங்கட்கிழமை(10) சந்தித்தார். இலங்கைக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான தற்போதைய மக்கள் பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார உறவுகள் உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விஷயங்களை இரு தலைவர்களும் விவாதித்தனர்.
அரச துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி

அரச துறைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் பத்தாயிரம் தற்காலிக ஊழியர்களை நிரந்தமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அவர் குறித்த விடயத்தை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வாயில் காப்பாளர்களின் கொடுப்பனவு ஏழாயிரம் ரூபாயிலிருந்து பதினைந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை சாலை மேம்பாட்டு ஆணையத்தில் எழுநூறு பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் முந்நூறு பேர் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளனர். […]
முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு
மன்னார்-யாழ் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இருந்து இன்று (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியிட்ட பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய 60 வயதுடைய திருஞானம் ஜோன் குயின்ரஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்றைய தினம் திங்கட்கிழமை(10) காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்ட நிலையில் உயிரிழந்திருக்கலாம் என […]
தென் கொரிய மீன் பண்ணைத் தண்ணீர்த் தொட்டிக்குள் இலங்கையர் இருவரின் சடலம்?
தென் கொரியாவின் தெற்கு கியோங்சாங்கில் உள்ள கோசியோங் கவுண்டியில் உள்ள ஒரு மீன் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இரண்டு இலங்கையர்கள் உட்பட மூன்று தொழிலாளர்கள் இறந்து கிடந்துள்ளனர். மீன் பண்ணையில் உள்ள ஒரு பெரிய நீர்த்தேக்க தொட்டியில் 50 வயதுடைய தள மேற்பார்வையாளரின் உடலும், 20 மற்றும் 30 வயதுடைய இரண்டு இலங்கை தொழிலாளர்களின் உடல்களும் நேற்று (09) இரவு 8:30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டதாக தெற்கு கியோங்சாங் காவல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நான்கு மீட்டர் அகலம், […]
போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விநாயகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட மாகாண போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம்(9) முன்னெடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஏழு கிராம் 750 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை […]
பஸ் விபத்தில் 6 பேர் மரணம்; உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவனும் பலி!
அனுராதபுரம் – தலாவ பகுதியில் தனியார் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அறுவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 40பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலாவ பகுதியிலுள்ள ஜெயகங்கா வீதியில் இன்று (10) பகல் இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் தம்புத்தேகம மற்றும் தலாவ வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஏறாவூரில் விழுங்கப்பட்ட 28 பக்கட் ஹெரோயின் மீட்பு

ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்த போது வாயில் விழுங்கிய 28 பக்கற் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளை சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து மீட்டெடுத்த சம்பவம் சனிக்கிழமை (8) அன்று இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி தெரியவருவதாவது ஏறாவூர் றகுமானியா வீதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரை சம்பவ தினமான வெள்ளிக்கிழமை (7) அன்று இரவு கைது செய்யப் பட்டு சனிக்கிழமை […]