சில தீர்மானங்களை அரசாங்கம் மீள்பரிசீலிக்க வேண்டும் – சாமர சம்பத்

பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு விவசாயிகள் தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலிக்க வேண்டும். மக்கள் எதிர்ப்பு என்றால் எதனையும் செய்ய முடியாது. பின்வாங்க வேண்டும். கோட்டாபய ராஜபக்ஷ இதற்கும் மேல் பெரிய சண்டியர் போன்றே வந்தார். இறுதியில் பின்கதவால் படகில் தப்பிச் செல்லும் நிலைமையே அவருக்கு ஏற்பட்டது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான […]
முகக்கவசம் அணியுங்கள் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் தற்போது ஆரோக்கியத்துக்குப் பாதகமான அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, கதுருவெல, சிலாபம், அகரகம, வந்துரகல, திகன, மடம்பகம, ஹங்கம, அக்கரைப்பற்று, கலவான, முள்ளியவளை,பன்னங்கண்டி மற்றும் உப்புவெளி, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. காற்றிலுள்ள மாசு அளவு நீண்ட நேரம் சுவாசிப்பதற்கு ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக காற்றுத் தரக் குறியீட்டு (AQI) முறைமையின் நேரடி தரவுகள் தெரிவிக்கின்றன. இது சிறுவர், முதியோர், மற்றும் சுவாச அல்லது […]
மாடு மேய்க்கச் சென்றவர் யானை தாக்கிப் பலி

மட்டக்களப்பு- கரடியனாறு கார்மலை பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(10) இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய சோமசுந்தரம் வெள்ளை தம்பி என்ற பண்ணையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த பண்ணையார் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கார்மலை பகுதிக்கு சம்பவ தினமான இன்று காலை 11.00 மணியளவில் சென்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். இதன்போது அங்கு திடீரென வந்த யானை அவரை தாக்கியதில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து குறித்த […]
செயல்திறனில் முழுமையாக திருப்தி அடையவில்லை

அரசாங்கத்தின் செயல்திறனில் தாம் முழுமையாக திருப்தி அடையவில்லை என்று ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவரண பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களால் நிறைவேற்ற முடியவில்லை, ஆனால் சாதனைகளைப் பெற நேரம் இருப்பதால் அது ஒரு பிரச்சினை அல்ல. அத்துடன், சீர்திருத்தங்களுக்காக மக்கள் அவசரப்படவில்லை,” என்று எம்.பி. கூறினார். “அடுத்த ஆண்டு எங்கள் அரசாங்கம் எவ்வாறு செயல்படும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்று அவர் மேலும் கூறினார்.
புதுடெல்லியில் குண்டுவெடிப்பு!

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 9 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. குண்டுவெடித்ததால், காரில் இருந்த பாகங்கள் 300 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. […]
ஆசிரியர்கள் டிசம்பரில் ஒரு நாள் போராட்டம்

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி டிசம்பர் மாதம் 12ஆம் திகதி ஒரு நாள் அடையாள போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை (10) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் இடமாற்றம் சம்பந்தமாக நடந்த முறைகேடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆசிரியர்களும் நாங்களும் இணைந்து வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தோம். குறித்த […]
ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை; சரத் பொன்சேகா கருத்துக்கள் தொடர்பில் ஆராய வேண்டும்!

ஊடகவியலாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் அரசாங்கம் ஆராய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட 2ஆம் நாள் வாசிப்பு மீதான வாவாதத்தில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், இசைப்பிரியா என்ற ஊடகர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில், இசைப்பிரியாவின் கொலைக்கு காரணமாக இருந்தவர் ஒரு […]
தலாவ விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவன் தொடர்பில் வெளியான தகவல்

தலாவ, தம்புத்தேகம, ஜய கங்கா சந்திப்பில் இன்று மதியம் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவர் சாதாரண தர பரீட்சைக்கு தயாரான மாணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தலாவ, ஹங்குரக்கேத்த பகுதியை சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த பேருந்து வீதியை விட்டு விலகி 411 என்ற கிராமம் வரை செல்லும் துணை வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 39 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக […]
கர்நாடகாவில் இலங்கை – இந்திய இராணுவக் கூட்டுப் பயிற்சி ஆரம்பம்

11ஆவது வருடமாக இலங்கை – இந்திய கூட்டு இராணுவப்பயிற்சிகள் இன்று இந்தியாவின் கர்நாடகாவில் ஆரம்பமாகின. மித்ரா சக்தி என்ற பெயர் கொண்ட இந்த கூட்டு இராணுவப்பயிற்சிகள் எதிர்வரும் 23ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளன. தீவிரவாத எதிர்ப்பு, ட்ரோன் பயிற்சிகள் உட்பட்ட பல்வேறு பயிற்சிகள் இதன்போது இரண்டு நாட்டு படையினருக்கு மத்தியில் பகிர்ந்து கொள்ளப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையின் ரப்பர் தோட்டத்தில் ஆணின் சடலம்!

மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான நக்கல்ல தோட்ட பகுதியில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று திங்கட்கிழமை (10) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் உள்ள முப்பன்ன வெளிவத்த கயஸ்ரீ கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.கே. புஷ்பராஜ் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் வீடு திரும்பாததால் உறவினர்கள் அவரை தேடிய நிலையில் சடலம் […]