வவுனியாவில் சட்டவிரோதமாக 12 புகையிரத கடவைகள்…

வவுனியாவில் இருந்து புளியங்குளம் வரையிலான 14 புகையிரத கடவைகளில் 12 கடவைகள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத கடவைகளால் மஹவ முதல் ஓமந்தை வரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கவேண்டிய புகையிரதத்தால் குறிப்பிட்ட வேகத்தில் பயணிக்க முடியாத நிலைமை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (10) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, இலங்கை தமிழ் அரசுக் கட்சி […]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த நாமல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் குழுவினர் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு சென்றுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டம் குறித்து விவாதிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்திற்கு வந்திருந்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சுமார் […]
இரண்டு வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் பிரதேசத்தில் இரண்டு வாள்களுடன் பெண் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள மையவாடி வீதி மீராகேன் பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் 41 வயதுடைய பெண் ஒருவர் ஆவார். பெண்ணை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை குறித்த பெண்ணின் கணவர் ஏற்கனவே போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற […]
கடற்தொழிலாளர் பிரச்சினை: ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ள விடயம்

இலங்கை இந்திய கடற்தொழிலாளர் மத்தியில் உள்ள பிரச்சினைகளை இரண்டு நாடுகளும் உரியமுறையில் தீர்க்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு தரப்பும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க யோசனையை முன்வைத்துள்ளன. எனவே அதன் அடிப்படையில் இணக்கம் ஏற்படுத்தப்பட்டு பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த விடயம் தொடர்பில் தற்போதைய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாம் கேள்வி எழுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் திருச்சியில் செய்தியாளர்கள் மத்தியில் அவர் […]
நகைக்கடை ஒன்றில் நூதன கொள்ளையில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது!

கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த மாதம் 28 ஆம் திகதி கந்தளாய் நகரில் அமைந்துள்ள ஒரு நகைக்கடைக்குள் குறித்த பெண் நுழைந்துள்ளார். நகை பார்ப்பது போல கடை உரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு, வாயில் மறைத்து வைத்திருந்த போலி தங்க மோதிரத்தை காட்சிப் பெட்டியில் வைத்துள்ளார். அதேசமயம், பெட்டியில் இருந்த உண்மையான தங்க […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை திரித்து வெளியிட்ட விவகாரம்; பிபிசி உயரதிகாரிகள் ராஜினாமா

அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையை திரித்து வெளியிட்டதாக எழுந்த விவகாரத்தில் பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, செய்திப்பிரிவு தலைவர் டெபோரா டர்னஸ் ஆகியோர் ராஜினாமா செய்தனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி ஆற்றிய உரை, கேபிடல் ஹில் கலவரத்தை தூண்டும் விதமாக இருந்தது என்று, பிரபல செய்தி நிறுவனமான பிபிசி, ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில், டிரம்ப் பேசிய இரண்டு தனித்தனி வீடியோக்கள், எடிட் செய்யப்பட்டு ஒன்றாக […]
கரவெட்டியில் கிணற்றில் விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்.துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது இன்றையதினம்(10) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அருண்நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், இன்று காலை சிறுவன் வீட்டில் தந்தையுடன் இருந்த நிலையில் தந்தை உறக்கத்தால் கண் விழித்த போது சிறுவனை காணாது தேடியுள்ளார். இதன்போது, கிணற்றுக்குள் சிறுவன் காணப்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது […]
மலேஷியாவில் படகு கவிழ்ந்து விபத்து; மியான்மர் குடியேறிகள் 7 பேர் பலி!

மியான்மரில் இருந்து மலேஷியா நோக்கி சென்ற படகு கவிழ்ந்ததில்100 பேர் மாயமாகினர். இதுவரை மியான்மர் குடியேறிகள் 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 13 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் இருந்து, புலம்பெயர்ந்தோரை ஏற்றிக்கொண்டு, படகு ஒன்று மலேஷியா நோக்கி சென்றது. மலேஷியாவின் பினாங்கு மாகாணம் அருகே சென்றபோது, அப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மலேஷிய கடற்படை உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியை […]
ஈக்வடார் சிறையில் வன்முறை; கைதிகள் 31 பேர் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டு சிறையில் வெடித்த வன்முறை சம்பவத்தில் கைதிகள் 31 பேர் கொல்லப்பட்டனர். தென் அமெரிக்க நாடான ஈக்வடார், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள சிறைகளில், கைதிகள் இடையே வன்முறை அடிக்கடி நிகழ்கிறது. மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில், கைதிகள் 31 பேர் உயிரிழந்தனர். வன்முறையில் கைதிகள் மூச்சுதிணறல் ஏற்பட்டு […]
இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான திட்டம்!

ஐக்கிய தேசிய கட்சியின் நிகழ்ச்சி நிரல்கள், கொள்கைகளுடன் நாட்டுக்கான புதிய திட்டமொன்றை முன்னெடுத்துச் செல்லவுள்ளோம். அடுத்த 6 மாதங்களில் புதிய, இளம் தலைமுறையினரை ஐக்கிய தேசிய கட்சியில் உள்வாங்குவதற்கான செயற்றிட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். புதிய சிந்தனைகளுடனான கட்சியைக் கட்டியெழுப்புவதற்காக 6 மாதங்களுக்குள் 1000 மக்கள் சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் திங்கட்கிழமை (10) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், […]