போதைப்பொருளுடன் சிக்கிய கடற்றொழிலாளர்கள்
இலங்கையைச் சேர்ந்த ஆறு கடற்றொழிலாளர்கள், சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த கடற்றொழில் படகு, மாலைத்தீவு கடலோர பொலிஸாரால் மறிக்கப்பட்டு குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடறபடை வழங்கிய உளவுத்துறை தகவலின் அடிப்படையில் மாலைத்தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. ‘ஹிபலே மல்லி’ என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்கு இந்த போதைப்பொருள் கடத்தலில் தொடர்புள்ளதாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு கடும் அழுத்தமாக அமையும் – நாமல் ராஜபக்ச எச்சரிக்கை!
நுகேகொடை பேரணி அரசாங்கத்திற்கு கடும் அழுத்தமாக அமையும் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே நுகேகொடையில் எதிர்வரும் 21ஆம் திகதி பேரணி இடம்பெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு குறித்து கட்சிகள் எடுக்கும் முடிவை நாம் மதிக்கின்றோம். நுகேகொடை பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச […]
துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சு தோல்வி!
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள தெஹ்ரிக் – இ – தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பினர், பாக் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் உள்ள அந்த அமைப்பின் தலைவர்கள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, இருநாடுகள் இடையே மோதல் வெடிக்க, இரு தரப்பினரும் மாறி, மாறி தாக்குதலில் இறங்கினர். இதில் பலர் கொல்லப்பட்ட நிலையில், உலக நாடுகளின் தலையீடு […]
நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது துருக்கி
காசா இனப்படுகொலையை முன் வைத்து, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு துருக்கி கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இஸ்தான்புல் தலைமை அரசு வக்கீல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், காசா இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேல் அதிகாரிகள் 37 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாரிகளின் முழுமையான பட்டியலில் எந்த எந்த அதிகாரிகளுக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது, அவர்கள் என்ன பதவி […]
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் வத்தளையில் கைது
யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர், வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் (08.11.2025) காலையில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர், செலுத்தி சென்ற காரினை பொலிஸார் தடுத்துள்ள போதும் அவர் காரை நிறுத்தாமல் சென்றமையால் அதிகாரிகள் வாகனத்தை விரட்டி சென்று பிடித்துள்ளனர். இதன்போது, காரில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஒரு கைத்துப்பாக்கியும் ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, சந்தேக நபரிடம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணையில் அவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பது தெரிய […]
சுகாதார அமைச்சு தொடர்பாக அர்ச்சுனா பகிரங்கப்படுத்திய ஆதாரம்!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு, கையூட்டல் பெற்றிருப்பது தொடர்பில் தன்னிடம் ஆதாரம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம், இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “வடக்கு மாகாணத்தில் பருத்தித்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பான கணக்காய்வு அறிக்கை என்னிடம் உள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கின் நான்கு வைத்தியர்களிடம் இலஞ்சம் பெற்றதற்கான […]
முச்சக்கரவண்டி விபத்து – மூவர் காயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் பங்கலாவத்த பகுதியில் நேற்று சனிக்கிழமை (08) பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் தலவாக்கலை பகுதியில் இருந்து உடப்புசல்லாவ நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த […]
வடமராட்சியில் மணல் அகழ்விற்கான அனுமதியை நிறுத்துமாறு கோரிக்கை
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி வழங்கும் செயற்பாட்டை உடன் நிறுத்துமாறு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. பல வருடங்களாக தொடர்ச்சியாக அனுமதிபத்திரத்துடன் கட்டைக்காடு பகுதியில் மணல் அகழப்பட்டு வருகிறது. இதனால் குறித்த பகுதி பாரிய குழியாக காணப்படுகிறது. அருகில் பல குடும்பங்கள் வசிப்பதால் இயற்கையால் குறித்த குடும்பங்கள் நீரில் மூழ்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதாலும் அனுமதிபத்திரத்துடன் அனுமதி பத்திரத்திற்கு அதிகமாக தொடர்ச்சியாக மணல் அகழப்பட்டு வருவதாலும் தொடர்ந்து […]
சுவிஸ் தூதுவர் ரில்வின் சில்வா சந்திப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவை சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் சந்தித்துப் பேசியுள்ளார். பத்தரமுல்ல, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அண்மையில் இலங்கை நாடாளுமன்றக் குழுவொன்று சுவிட்சர்லாந்துக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரக முதல் நிலைச் செயலர் ஜஸ்டின் பொய்லெட்டும் கலந்துகொண்டுள்ளார்.
அனர்த்தங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க முக்கிய அறிவிப்பு!
உயர்தரப் பரீட்சைக் காலத்தில், அனர்த்தங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் அபாயங்களைத் தவிர்ப்பதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையமும் பரீட்சைத் திணைக்களமும் இணைந்து ஒரு கூட்டுத் திட்டமொன்றை செயற்படுத்தியுள்ளன. எதிர்பாராத வானிலை மாற்றங்கள் காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்தங்களினால் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய தடைகளை தவிர்ப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, பரீட்சைக் காலத்தில் பேரிடர் ஆபத்து இல்லாத சூழலை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதலை வெளியிட […]