பிரதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு
எதிர்காலத்தில் தகுதி அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும், இந்த நாட்டில் அரச துறையானது கடந்த காலங்களில் அரசியல் மயப்படுத்தப்பட்டு அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு சீரழிக்கப்பட்ட அரச சேவை பின்னர் பயனற்ற ஒரு சேவையாக மாறிவிட்டதாகவும், இதன் காரணமாக […]
பாடசாலையொன்றுக்கு அருகில் அடர்ந்த காடு
கந்தளாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்று, சுமார் முப்பது வருடங்களாக அடர்ந்த காடாக வளர்ந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பராமரிப்பின்றிக் கிடக்கும் இந்தக் காட்டுப் பகுதி, சமூக விரோதச் செயற்பாடுகளுக்கான களமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் இந்தக் காட்டில் போதை பாவனையாளர்களின் நடமாட்டம் மற்றும் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் மிகுந்த […]
கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் யாழில் கைது
கொழும்பில் துப்பாக்கி சூட்டினை நடத்திய மூவர் இன்றையதினம் (8) யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று முன்தினம் (07.11.2025) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். அந்தவகையில் துப்பாக்கி சூட்டினை நடாத்தியவர்கள் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பதுங்கியிருந்துள்ளனர். இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், மானிப்பாய் பொலிஸார் குறித்த சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனையை […]
பெரும்பாலான பகுதிகளில் மழை
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய , சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் புத்தளம் மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய […]
ஈச்சந்தீவில் நீரில் மிதந்த ஆணிண் சடலம்…
கிண்ணியா – ஈச்சந்தீவு பகுதியில் நீரில் மிதந்த நிலையில் சனிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (8) காலை பதிவாகியுள்ளது. கடந்த 7ஆம் திகதி, சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்டுவந்த கும்பலை கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர். இதன்போது, தப்பிச்சென்ற ஒருவரே சடலமாக மீட்கப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் ஆலங்கேணியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. சட்டவிரோத மதுபான சுற்றிவளைப்பின் போது சுமார் 2000 லீற்றர்களை கொண்ட வாளிகளையும், […]
“பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” – கர்தினால் ரஞ்சித் கவலை
இலங்கையின் பாசாலைப் பாடத்திட்டத்தில் அடுத்த ஆண்டு சேர்க்கப்பட உள்ள “பொருத்தமற்ற பாலியல் கல்வித் திட்டம்” குறித்து கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் கவலை தெரிவித்துள்ளார். மீரிகம–கிணதெனிய பகுதியில் புதுப்பிக்கப்பட்ட புனித ஸ்டீபன் தேவாலயத்தை மீண்டும் திறந்து வைக்கும் நிகழ்வில் பேசிய கர்தினால் ரஞ்சித், திட்டமிடப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் ஜனவரியில் தொடங்கப்படவுள்ள இந்த முயற்சி, சர்வதேச அமைப்புகளின் செல்வாக்கின் கீழ் உருவாக்கப்பட்டு வருவதாகக் கூறினார். புதிய பாடத்திட்டம் 6 ஆம் வகுப்பு முதல் பாலியல் கல்வியை […]
சாலையைக் கடக்கச் சென்ற டிராக்டர் மோதியதில் சிறுவன் பலி
வெலிகந்த அசேலபுரத்திலிருந்து குருலுபெத்த நோக்கிச் செல்லும் சாலையைக் கடக்கச் சென்ற சிறுவன் ஒருவன், சனிக்கிழமை (08) இரவு 7:00 மணியளவில், டிராக்டர் வாகனம் மோதி உயிரிழந்ததாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெலிகந்த, அசேலபுர, மகாவலி ஹவுஸைச் சேர்ந்த டபிள்யூ.எச்.டி. மதீஷா கவிஸ்க என்ற சிறுவன் என்று பொலிஸார், கூறுகின்றனர். விபத்துடன் தொடர்புடைய பெரிய டிராக்டர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெலிகந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எல்.பி.ஆர். குமாரசிங்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழு, இந்த […]
நாளை க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 340, 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள பரீட்சைகள் டிசம்பர் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன. 246 521 பரீட்சாத்திகள் பாடசாலை ஊடாகவும், 94 004 பரீட்சாத்திகள் தனிப்பட்ட ரீதியிலும் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளனர். அதற்கமைய ஒட்டுமொத்த விண்ணப்பதாரர்கள் எண்ணிக்கை 340 525 […]
தொடருந்தில் மோதி ஒருவர் பலி!
தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம், களனி – வனவாசல பகுதியில் உள்ள தொடருந்து கடவையில் இடம்பெற்றுள்ளது. மாலம்பே – கடுவலை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்தவர் ஆவார். சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேலியகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் முன்னோடிச் செயல்
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டுக் கழகம் சட்டவிரோத செயற்பாடுகளை தமது பகுதியில் முற்றாக அழித்தொழிப்பது என்னும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் ஒரு பகுதியாக நேற்று காலை சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கசிப்பு குடிப்பதற்காக பலர் கூடியிருந்த காட்டுப்பகுதி திடீரென சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகையின் போது கசிப்பு பீப்பாயை கைவிட்டு அங்கு கூடியிருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன், கசிப்புடன் கசிப்பு பீப்பாய் சென்மேரிஸ் விளையாட்டுக் கழகத்தால் கைப்பற்றப்பட்டு […]