சிவாஜி கணேசனின் பேரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்!

அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் படம்தான் லெனின் பாண்டியன். இப்படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க கங்கை அமரன், ரோஜா ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். மேலும் சிவாஜியின் பேரன் தர்ஷன் கணேசன் இப்படத்தின் மூலம் ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம் குமாரின் இரண்டாவது மகன் ஆவார். இந்த நிலையில், தற்போது லெனின் பாண்டியன் படத்திலிருந்து தர்ஷன் கணேசன் கதாபாத்திரத்தின் இன்ட்ரோ வீடியோவை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். நடிகர் கார்த்தி இந்த […]

சிகிரியா ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி சிறுவன் பலி

சிகிரியா காவல் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் உள்ள ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி களனி, தலுகமவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன், தனது பெற்றோருடன் சனிக்கிழமை 8 ஆம் திகதி மாலை நீந்திக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். நீச்சல் தடாகத்தில் மூழ்கிய சிறுவன் மீட்கப்பட்டு, உடனடியாக தம்புள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சடலம் தம்புள்ள மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சிகிரியா […]

வனராஜா பகுதியில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா – வனராஜா பகுதியில் இன்று (09) ஞாயிற்றுக்கிழமை காலை பைனஸ் மரமொன்று முறிந்து வீழ்ந்ததனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அட்டன் – பலாங்கொடை, பொகவந்தலாவை – ஹட்டன், சாமிமலை மற்றும் மஸ்கெலியா போன்ற பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டு;ள்ளன. இதன்காரணமாக குறித்த பகுதியில் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதுடன், மின் கம்பமும் விழுந்து சேதமடைந்துள்ளது. சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீர்படுத்தும் பணிகள் மின்சாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த பகுதியில் பலத்த காற்று காரணமாக மரம் முறிந்து […]

ஏழு பொலிஸ் பிரிவுகளில் குற்றச் செயற்பாடுகள் அதிகம்

கொழும்பு வடக்கு, நுகேகொட, கம்பஹா,எல்பிட்டிய, தங்காலை,காலி மற்றும் மாத்தறை பொலிஸ் பிரிவுகளிலேயே திட்டமிட்ட குற்ற கும்பல்களின் செயற்பாடுகள் அதிகளவில் இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின் போது, நாட்டில் நடக்கும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் செயற்பாடுகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். […]

அரசியல் வங்குரோத்து அடைந்துவிட்டனர் எதிர்க்கட்சியினர் – பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க

அரசியலில் வங்குரோத்து நிலையடைந்துள்ள எதிர்க்கட்சியினர் வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் போலியான விடயங்களை குறிப்பிடுகிறார்கள். வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நிச்சயம் செயற்படுத்துவோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு […]

பெறுமதி சேர் வரி; பாதிப்படைய போகும் வாடிக்கையாளர்கள்

பெறுமதி சேர் வரி செலுத்தும் வருவாயின் எல்லையை 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் குறைத்துள்ளதால் மறைமுகமாக பொருட்கள் சேவைகளின் விலை அதிகரிக்க கூடுமென பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரையில் ஜனாதிபதி வரி தொடர்பான தொழில்நுட்ப சொற்களை பயன்படுத்தாததால் வரி அறவீடு தொடர்பில் முழு உரையையும் கேட்பதன் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும். ஆனால் வரி அறவீட்டின் போது ஏற்படும் பாதக நிலைமைகள் கண்ணுக்கு தென்படாத தன்மையை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பில் விளக்கமளித்துள்ள […]

எதிர்க்கட்சியின் பேரணியில் விமல் இல்லை

அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நவம்பர் 21 ஆம் திகதி நடத்தவுள்ள, பேரணியில் முக்கிய எதிர்க்கட்சி ஒன்று பங்கேற்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. முன்னதாக இந்த பேரணியில் பங்கேற்பதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி இந்த பேரணியில் பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல காரணிகளைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமென்றால் மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும்

நல்லதொரு புரிந்துணர்வு இனங்களுக்கிடையில் ஏற்பட வேண்டுமாகவிருந்தால் நிச்சயமாக மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து இராணுவம் அகன்று செல்ல வேண்டும் என்று ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் சி.வேந்தன் தெரிவித்துள்ளார். அவர் நேற்று(8) வடமராட்சி கிழக்கில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, கார்த்திகை மாதம் என்பது தேச விடுதலைக்காக தமது இன் உயிர்களை ஆகுதியாக்கியவர்களை நினைவு கூறுகின்ற மாதம். அந்தவகையிலே கார்த்திகை 21 தொடங்கம் 27 ஆம் திகதிவரை மாவீரர் வாரமாக தாயகத்திலும் புலம்பெயர்ந்த தேசமெங்கிலும் […]

வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி வெல்லும் – ஜெகதீஸ்வரன் எம்.பி

கடந்த இரு தேர்தல்களைப் போல் வரவிருக்கும் வட மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மக்களுடைய ஆதரவைப் பெறும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாண சபைத் தேர்தல் 2026 இறுதியில் நடைபெற வாய்ப்புக்கள் உள்ளது. இந்த தேர்தலுக்காக கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றிய அதே […]

உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அறிக்கைகளின்படி, வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் அமைந்துள்ள எரிசக்தி நிலையங்கள் ரஷ்ய தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. குளிர்காலம் ஆரம்பமான நிலையில், இந்த தாக்குதல்கள் இயற்கை எரிவாயு விநியோகத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளன. இதனால், மக்கள் தங்களை குளிரில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தும் ஹீட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.