முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர் ரிட் மனுவை
முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்து என்று அழைக்கப்படும் சலிந்து மல்சிக குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் துறையினர், தம்மை கைது செய்வதற்காக விடுத்துள்ள இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை இடைநிறுத்தக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குடு சலிந்துவின் சட்டத்தரணிகள்; மூலம் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நேற்றுமுன்தினம்(7) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் […]
நியூசிலாந்து மேற்கிந்தியத் தீவுகளை வென்றது
மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியில் நியூசிலாந்து வென்றது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை மேற்கிந்தியத் தீவுகளும், இரண்டாவது போட்டியை நியூசிலாந்தும் வென்றிருந்த நிலையில் நெல்சனில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற நாணயச் சுழற்சியில் வென்ற நியூசிலாந்தின் அணித்தலைவர் மிற்செல் சான்ட்னெர், தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து, டெவொன் கொன்வேயின் 56 (34), டரைல் மிற்செல்லின் 41 (24), றஷின் றவீந்திரவின் 26 (15) ஓட்டங்களோடு […]
தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே படகு மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் மாயம்
தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை (9) படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர். பத்து பேர் உயிரோடும் ஒருவர் சடலமாகவும் மீட்கப்பட்டதாக மலேசிய கடல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது. மியன்மாரின் புத்திடாவுங்கிலிருந்து சுமார் 300 குடியேறிகளுடன் புறப்பட்ட கப்பல் மூழ்கிய மூன்று நாள்களுக்குப் பிறகு கடலில் மூழ்கியதும். மேலும் பலர் கண்டுபிடிக்கப்படலாம் என்று வடக்கு மலேசிய மாநிலங்களான கெடா மற்றும் பெர்லிசின் கடல்துறை ஆணையத்தின் இயக்குநர் முதல் அட்மிரல் ரோம்லி முஸ்தபா கூறியுள்ளார். லங்காவிக்கு அப்பால் நீரில் […]
பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளில் மாற்றங்கள்
ஐரோப்பாவில் மிகவும் கடுமையான ஒன்றாகக் கருதப்படும் டேனிஷ் முறையை மாதிரியாகக் கொண்ட பிரித்தானியாவின் குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம், டென்மார்க்கின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் புகலிடக் கொள்கைகளை ஆய்வு செய்ய பிரித்தானிய அதிகாரிகள் நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர். குடும்ப மறு இணைப்புகள் மற்றும் சில அகதிகளை தற்காலிகமாக தங்குவதற்கு கட்டுப்படுத்துவது தொடர்பான டென்மார்க்கின் இறுக்கமான விதிகள் ஆகியவை பரிசீலிக்கப்படும் கொள்கைகளில் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய, இந்த மாத இறுதியில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்படும் […]
சீன நிறுவனம் நேபாளத்துக்கு நோட்டுகள் அச்சிட முடிவு!
நேபாளத்தின் 1000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சீன நிறுவனம் பெற்றுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேபாளத்தின் மத்திய வங்கி, ‘நேபாள் ராஷ்ட்ர பேங்க்’ அந்நாட்டின் 1,000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளை வடிவமைத்தல், அச்சிடுதல், வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கான மொத்த செலவாக, 149 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக நடத்தப்பட்ட டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களில், சீன நிறுவனம் வெற்றி பெற்றிருப்பதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். […]
15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை
ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, டென்மார்க்கிலும் 15 வயதுக்கு உட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஐரோப்பிய நாடான டென்மார்க்கில், சிறார்கள் சமீப காலமாக சமூக ஊடகங்களில் மூழ்கியிருப்பது கவலை அளிப்பதாக, அந்நாட்டு பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் கடந்த மாதம் பார்லிமென்ட்டில் உரையாற்றினார். ‘ஸ்னாப்சாட், யு டியூப், இன்ஸ்டாகிராம், டிக்டாக்’ போன்ற சமூக ஊடக தளங்களால் குழந்தைகளின் உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுவதாகக் கூறி அவற்றுக்கு தடைவிதிக்கவேண்டும் என கூறியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். […]
ஒரே நாளில் 700க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து
அமெரிக்காவில் நேற்று சனிக்கிழமை (08) ஒரே நாளில் 40 விமான நிலையங்களில் 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அவரது இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பின. எனவே நாடாளுமன்றத்தில் அவர் கொண்டு வரும் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அடுத்த ஆண்டுக்கான நிதியை விடுவிக்க நாடாளுமன்றத்தின் […]
எதிர்பார்த்த வெற்றியை கவின் நடித்த கிஸ் படம் பெறவில்லை – இயக்குனர் சதிஷ்
கவின் நடிப்பில் சமீபத்தில் கிஸ் என்ற திரைப்படம் வெளியானது. நல்ல விமர்சனங்களை பெற்றாலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. அதற்கு என்ன காரணம் என இப்படத்தின் இயக்குனர் சதிஷ் கூறியிருக்கின்றார் தமிழில் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் தான் கவின்.சின்னத்திரை மூலம் பிரபலமான கவின் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமடைந்தார். அந்நிகழ்ச்சியில் மூலம் கிடைத்த புகழை சரியாக பயன்படுத்தி அடுத்தடுத்து படங்களில் ஹீரோவாக கமிட்டானார். அந்த வகையில் அவர் […]
ராஜ் நிடிமொருவுடன் இருக்கும் படம்; இது வெறும் ஆரம்பம் – சமந்தா
தானும், ராஜ் நிடிமொருவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிடவே அவர் தன் காதலை உறுதி செய்துவிட்டார் என்று பேசப்படுகிறது. ராஜை தான் காதலிக்கிறேன் என்று சமந்தா இதுவரை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. சமந்தா, ராஜ்: ராஜ் நிடிமொரு, டி.கே. இயக்கத்தில் இரண்டு வெப்தொடர்களில் நடித்திருக்கிறார் சமந்தா. அவர்கள் இயக்கத்தில் மூன்றாவதாக ரக்த் பிரம்மாண்ட் வெப்தொடரில் நடிக்கிறார். வெப்தொடர்களில் நடித்தபோது ராஜ் நிடிமொரு மற்றும் சமந்தா இடையே உருவான நட்பு காதலாக மாறிவிட்டதாக மாதக் கணக்கில் பேசப்படுகிறது. […]
பார்ட்டி படம் எப்போது ரிலீஸ்?
இந்த ஆண்டு ஆரம்பமே தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்தது மதகஜராஜா படம். பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த இப்படம், போராட்டங்களுக்கு பின் ரிலீஸ் ஆனது. ஜனவரி மாதம் வெளிவந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றியடைந்தது. இந்த ஆண்டு எப்படி மத கஜ ராஜா படம் பல வருடங்கள் கழித்து வெளிவந்து ஹிட்டானது. அதை போல் அடுத்த ஆண்டும் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் பார்ட்டி படம் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. […]